பயங்கரவாதிகளுடன் போர் நடத்தும் போது சட்டங்களை முழுமையாக பாதுகாக்க முடியாது - இலங்கை அரசாங்கம்
உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தும் போது போர்ச் சட்டங்களை முழுமையாக பாதுகாக்க முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், அவ்வாறான ஓர் பின்னணியில் ஜனநாயக அரசாங்கமொன்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியதென அரசாங்கம் பான் கீ மூனுக்கு விளக்கியுள்ளது.
போர் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கம் தெரிவித்துள்ள இக்கருத்தானது பொதுமக்களை அரச படைகள் படுகொலை செய்த போர்க் குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாக அமைகின்றது.
தற்போதும் கூட அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் இந்த அணுகுமுறையை ஆப்கானிஸ்தானில் பின்பற்றி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, ஐக்கிய நாடுகளின் 100 ம் பிரகடன சட்டத்திற்கு புறம்பான வகையில் அமையப் பெற்றுள்ளதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக