திங்கள், 12 ஜூலை, 2010

கைதுக்கு பயந்த சீமான், ஆந்திர மாநிலத்திற்கு தப்பிச்சென்று விட்டதாக

புலிப் பணத்தில் போராட்டம்
சினிமாக்காரர் சீமான் தலைமறைவு
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சினிமாக்காரர் சீமான் தலைமையிலான, 'நாம் தமிழர்' கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்றுப் பேசிய சீமான்,  'ிங்கள மீனவர்கள் மற்றும் கடற்படையால், தமிழக மீனவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர். தமிழகத்தில், சிங்களர்கள் எங்கெங்கு வேலை செய்கின்றனர், மாணவர்கள் எங்கெங்கு படிக்கின்றனர் என்ற விவரம் எங்களுக்கு தெரியும். இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால், இங்குள்ள சிங்கள மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு உயிருடன் ஊர் போய் சேர முடியாது' என்றார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி, இந்தியா-இலங்கை நட்புறவை கெடுக்கும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும்,  வன்முறையைத் தூண்டும் வகையிலும் அவர் பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.
இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களவன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது. ஒருவரையும் உயிருடன் விட மாட்டோம் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.  தமிழகத்தில் எத்தனை சிங்களவர்கள், எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை நாம் தமிழர் இயக்கம் கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களவன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது. ஒருவரையும் உயிருடன் விட மாட்டோம் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.
சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சை உளவுப்பிரிவு போலீசார் வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர். அதை ஆதாரமாக வைத்து வடக்கு கடற்கரை போலீசார் சீமான் மீது சட்டத்திற்கு புறம்பாக கூட்டத்தைக் கூட்டி கலகம் விளைவித்தல், போலீஸ் சொல்வதை மதிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு துறைமுகம் உதவி கமிஷனர் காதர் முகைதீன் தலைமையில், வடக்கு கடற்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட போலீசார் சீமானை கைது செய்வதற்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. அங்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் முகாமிட்ட போலீசார், வீட்டினுள் யாராவது இருக்கின்றனரா என்றும் தீவிரமாக கண்காணித்தனர்.
அங்கு ஆட்கள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, சாலிகிராமத்தில் உள்ள சீமானின் பழைய வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கும் காவலாளி ஒருவர் மட்டுமே இருந்தார். சீமான் குறித்து போலீசார் விசாரித்த போது, 'இங்கு அவர் வந்து பல மாதம் ஆகிறது' என்று காவலாளி தெரிவித்தார். சீமான் வந்தால் உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்கும் படி கூறிவிட்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதனிடையே கைதுக்கு பயந்த சீமான், ஆந்திர மாநிலத்திற்கு தப்பிச்சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை சீமான் முன்கூட்டியே அறிந்துள்ளார். எந்தெந்த பிரிவுகளில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும் அவர் அறிந்திருப்பதாக கூறப்படுகிறத . அதன் பிறகே அவர் தப்பிச் சென்று விட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்வதற்காக வடபழனி, கோயம்பேடு ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று சாதாரண உடையில் போலீசார் விசாரணை நடத்தினர்.  இதனிடையே இன்று அவர் கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற இருப்பதாக அவருக்கு நெருக்கமாக உள்ள சிலர  ெரிவித்தாகவும்  தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக