திருக்கோணமலை டோக்கியோ சீமெந்து ஆலையில் இருந்து வெளியேறும் புகை கழிவுகள் ஒரு மாதகாலத்திற்குள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்படும் என கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி நிர்மாணம், நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதமாலெப்பையிடம் ஆலை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
இன்று காலை கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மாகாண சபை உறுப்பினர்களான ஆரியவதி கலபதி, அ.பரசுராமன் சகிதம் டோக்கியோ சீமெந்து ஆலை நிர்வாகத்தினருடன் சந்திப்பு ஒன்றினை முதலமைச்சர் செயலகத்தில் மேற்கொண்டனர்.
இதன் போது நிர்வாகம் தாங்கள் விரைவில் 80 இமில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களைப் பெற்று புதிய இயந்திரத்தின் உதவியுடன் பாதுகாப்பான முறையில் புகையை வெளியேற்றுவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
அதை அமைச்சரும் குழுவினரும் ஏற்றுக் கொண்டனர். கடந்த மாகாண சபை அமர்வின்போது மாகாண சபை உறுப்பினர் அ.பரசுராமன், க.துரைரத்தினம் ஆகியோர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை காரணமாக அயல் கிராமத்து மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்தனர்.
இது விடயமாக கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. காலை 10.30 மணிக்கு சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் 11.15 மணியளவில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் டோக்கியோ சீமெந்து ஆலைக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக