அதேபோல, அதிமுக ராஜ்யசபா கட்சி நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் தினகரனின் பதவியைப் பிடுங்கியுள்ளார் ஜெயலலிதா.
ஒவ்வொரு மாவட்டத்துக்குக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து அந்தப் பட்டியலை இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அந்த திருத்தப் பட்டியல் விவரம்:
மதுசூதனன்- வட சென்னை மாவட்டம்.
பொன்னையன்- சேலம் புறநகர் கிழக்கு மற்றும் சேலம் புறநகர் மேற்கு.
ஓ. பன்னீர்செல்வம்- மதுரை புறநகர், தேனி மற்றும் திண்டுக்கல்.
செங்கோட்டையன்- ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நாமக்கல் மற்றும் நீலகிரி.
ஜெயக்குமார்- திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மற்றும் பெரம்பலூர்.
தம்பித்துரை- கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் கரூர்.
பொள்ளாச்சி ஜெயராமன்- திருப்பூர், கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர்.
தளவாய் சுந்தரம்- கன்னியாகுமரி
செம்மலை- சேலம் மாநகர், கடலூர் கிழக்கு மற்றும் கடலூர் மேற்கு.
மதுரை கோவிந்தராஜன்- தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாவூர் வடக்கு.
சோழன் பழனிச்சாமி- திருவாரூர், நாகப்பட்டினம்.
வளர்மதி- விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு.
பாலகங்கா- திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு.
நயினார் நாகேந்திரன்- நெல்லை மாநகர்.
கருப்பசாமி- நெல்லை புறநகர்.
ஆதிராஜாராம்- திருவள்ளூர், வேலூர் கிழக்கு மற்றும் வேலூர் மேற்கு.
உதயகுமார்- மதுரை மாநகர், விருதுநகர்.
கோகுல- இந்திரா சிவகங்கை, புதுக்கோட்டை.
மைத்ரேயன்- தென் சென்னை, காஞ்சீபுரம் கிழக்கு, காஞ்சீபுரம் மேற்கு.
அன்வர்ராஜா- ராமநாதபுரம்.
ஜெனீபர் சந்திரன்-தூத்துக்குடி மாவட்டம்.
ஒரு பதவி மட்டும் இழந்த வெங்கடேஷ்:
சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷ் கடந்த ஆண்டு மே மாதம்தான் அதிமுகவின் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தியதிலும் முக்கிய பங்கு வகித்த இவரைத் தாண்டித்தான் ஜெயலலிதாவை பார்க்க வேண்டியுள்ளது என்று அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் மனக் கசப்பில் இருந்து வந்தனர்.
சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், அதிருப்தியில் உள்ள கட்சியினரை சற்று தாஜா செய்யும் வகையில் வெங்கடேஷ் மீது தனக்கு பெரும் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டும் வகையில் அவரிடமிருந்து ஒரு பதவியை மட்டும் ஜெயலலிதா பிடுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக அவர் தொடர்கிறார்.
தினகரன்-மலைச்சாமிக்கும் ஆப்பு!:
அதேபோல, அதிமுக மாநிலங்களவை கட்சி நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் தினகரனின் பொருளாளர் பதவியைப் பிடுங்கியுள்ளார் ஜெயலலிதா.
ராஜ்யசபா அதிமுக துணைத் தலைவராக இருந்த சசிகலாவின் தரப்பைச் சேர்ந்தவரான மலைச்சாமியின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்குப் பதிலாக மாநிலங்களவை அதிமுக துணைத் தலைவராக மனோஜ் பாண்டியனும், பொருளாளராக ராமலிங்கமும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
மாநிலங்களவை அதிமுக செயலராக இளவரசனும், கொறடாவாக மாநில தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் பாலகங்காவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மனோஜ் பாண்டியன் இப்போது அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு மாநில செயலராக இருக்கிறார் ராமலிங்கம், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். முத்துச்சாமி திமுகவுக்குப் போனதால் ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவை ஸ்திரப்படுத்தும் வகையில் ராமலிங்கத்திற்கு சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் சீட் கொடுத்தார் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம்.
இதன்மூலம் எம்.பியான தினகரனுக்கு தற்போது கட்சியில் ஏந்தப் பதவியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது
பதிவு செய்தது: 21 Jul 2010 6:02 pm
ஆதிமுக ஆட்சிக்கு வராததற்கு முக்கிய காரணம் அது ஜாதி கட்சியாகி போனது தான் உண்மையான காரணம், மறுபடியும் தேவன், பள்ளன் என்று ஜாதி மூலம் பூச வேண்டாம். என்னைக்கு சசிகலா கோஷ்டி ஆ தி மு க வில் இருந்து ஒழியுதோ அன்று தான் கட்சி செய்க்கும். இல்லாவிடில் மறுபடியும் ஊ ஊ ஊஉ ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக