செவ்வாய், 13 ஜூலை, 2010

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர்

இலங்கையில் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவி ஒன்றை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே உடன்பாடு காணப்பட்டுள்ளது. “ஜனாதிபதி தலைமையில் அரசியல் நிர்வாகக் கமிட்டி கூட்டம் நடந்தது. அங்கேயே இந்த நிறை வேற்றதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவதற்கு அவர் உடன்பட்டார். அவர் எதிர்க்கட்சி தலைவரை சந்திப்பதற்கு முன்னரேயே இதைச் செய்வதற்கு தயாராக இருந்தார்.” என ஊடக அமைச்சர் கெஹலிய ரெம்புக்கவல்ல  தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு ஆணையம், போலிஸ் ஆணையம் போன்ற எல்லா ஆணையங்களுக்கும் புத்துயிர் ஊட்டுவது பற்றியும் இக்கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இரண்டு பதவிக் காலங்களுக்கு மேல் ஒருவரே ஜனாதிபதியாக நீடிக்க முடியாது என்று அரசியல் சாசனத்தில் உள்ள வரம்பை அரசாங்கத்தால் அகற்ற முடியாதுபோயிருப்பதால்தான் இந்த யோசனை முன்னெடுக்கப்படுகிறது என்ற கூற்றை அமைச்சர் ரம்புக்கவெல்ல மறுத்தார். நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமர் பதவி என்பது உருவாக்கப்பட்ட பின்னர் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக