30 குடிசைகள் அகற்றம்:150 நரிக்குறவர்கள் அவதி
திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாக சுற்றுச்சுவரை ஒட்டியது போல் 30 நரிக்குறவர்கள் குடும்பங்கள் வசித்தன.
இன்று காலை நகர மன்ற தலைவர்கள் ஸ்ரீதர் தலைமையிலான அலுவலர்கள் குழு ஜேசிபி எந்திரத்தோடு சென்று காம்பவுண்ட் சுவறை ஒட்டி அமைந்திருந்த பாலிதீன் பேப்பரால் கட்டப்பட்டிருந்த நரிக்குறவர் குடிசைகளை அகற்றினர்.
30 குடும்பங்களில் வசித்த 150 பேர் இதனால் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து நரிக்குறவர்கள் கடந்த 35 வருடங்களாக இங்குதான் வசித்துவருகிறோம். இப்படி திடீரென்று செய்துவிட்டால் நாங்கள் என்ன செயவது’’ என்று புலம்பி அழுதார்கள்.அவர்கள் நகரமன்ற தலைவரிடம் முறையிட்ட போது அடித்து துரத்துமாறு நகரமன்ற தலைவர் கூறினார்.
பணியாளர்களும் அவர்களை விரட்ட பண்ட, பாத்திரங்கள் மற்றும் குழந்தைகளோடு எங்கே செல்வது என்று தெரியாமல் நின்றார்கள்.
அவர்கள் இப்போது திருவண்ணாமலையில் இல்லை.எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக