வெள்ளி, 23 ஜூலை, 2010

யுத்தத்தை இஸ்ரேல் தீவிரப்படுத்த வேண்டும் , தூதுவர் டொனால்ட் பெரேரா

முன்னாள் கூட்டுப்படை தளபதியின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பலைகள் எழுகின்றது.

Yedioth Ahronoth என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும் தற்போதைய இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவருமான டொனால்ட் பெரேரா, "பலஸ்தீனர்கள் பேச்சுவார்த்தையை நிராகரித்தால் யுத்தத்தை இஸ்ரேல் தீவிரப்படுத்த வேண்டும் , அதற்கான முழு ஆதரவையும் இலங்கை வழங்கும்" என தெரிவித்திருந்த கருத்து பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன் பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் இணைத் தலைவரான அமைச்சர் அதாவுட செனவிரட்ண, டெய்லிமிரர் இணையத்தளத்திற்குக் கருத்துத் தெரிவிக்கையில், தூதுவர் டொனால்ட் பெரேரா என்ன கூறினாலும் இலங்கை அரசாங்கம் பலஸ்தீன மக்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல், பலஸ்தீனம் ஆகிய இருதரப்பினரையும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுமாறு வலியுறுத்துவதாகவும கூறினார்.

இதேவேளை, டொனால்ட் பெரேராவின் கூற்று, இலங்கை அரசாங்கத்தின் கருத்தை பிரதிபலிக்கிறதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்;டும் என பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் மற்றொரு இணையத்தலைவரான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக