புலிகளின் ஆயுதப்போராட்டத்திற்காக கனேடிய மக்களிடம் ஏமாற்றி பெறப்பட்ட பணத்தில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஆடம்பர தொடர்மாடி வீடுகளை நிர்மானித்து விற்பனை செய்துவந்த சிவா என்று அழைக்கப்படும் சிவகுமார் என்ற கனேடிய புலி உறுப்பினரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல வர்த்தகராக தன்னை காண்பித்து கொழும்பில் 10க்கு மேற்பட்ட தொடர்மாடிகளை நிர்மானித்து விற்பனை செய்துள்ளதுடன். வெள்ளவத்தை பகுதியில் நிர்மானித்த 78 தொடர்மாடி வீடுகளை கொண்ட கட்டிட தொகுதியில் 40 வரையிலான வீடுகளை ஒன்றரை கோடி ரூபா வீதம் விற்பனை செய்துள்ளார். இவரது வங்கி கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் நிதி இருந்துள்ளது இவற்றில் கணிசமான தொகை கனேடிய டொலர்களாக கொண்டு வந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சிவா 2005ம் ஆண்டில் இருந்து இவ் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக