ஞாயிறு, 25 ஜூலை, 2010

தி.மு.க.,வால் கிடைத்த தீர்ப்பு: கருணாநிதி பெருமிதம்

"தி.மு.க., தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததன் பலனாகத் தான், இட ஒதுக்கீட்டுப் பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்துள்ளது' என, தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்தி.மு.க., சார்பில் வைக்கப்பட்ட ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இட ஒதுக்கீடு குறித்தும், சமூக நீதி பற்றியும் நான் சொல்லாமல் விட்டதே கிடையாது. இவ்வாறு தொடர்ந்து 1920ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக, இட ஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்து வந்ததன் பயனாகத்தான், கடந்த 13ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், சுதந்திரகுமார் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு, நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலைவனத்தில் குடிநீர் கிடைக்காமல், வேகாத வெயிலில் சென்று கொண்டிருந்தவர்களுக்கு, வழியிலே ஒரு சிறிய நீரூற்று தென்பட்டதைப் போல, தமிழக மக்களுக்கு அமைந்துள்ளது. குறிப்பாக, எத்தனையோ ஆண்டு காலமாக இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்னைக்காக உண்மையிலேயே பாடுபட்டு வரும் நமக்கு, தேன் துளிகள் தேனருவியாகப் பெருக வேண்டுமென்ற ஆவல் ததும்புவதில் வியப்பில்லை. இந்த வெற்றியில் நாம் உரிமை கொண்டாடுவதற்கு, கோர்ட்களில் நாம் நடத்தி வந்துள்ள சட்ட ரீதியான சமூக நீதி போராட்டங்களும், மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் பெரும் காரணங்கள். ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சமூக நீதியைப் பலமாக பாதுகாத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோரான வன்னியர்களும், சீர்மரபினர்களும் மற்றும் சில வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டு, 20 சதவீதம் பயன் பெற முடிந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கான உள்ஒதுக்கீடில் இஸ்லாமியர்கள் 3.5 சதவீதம் பெறவும், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக அருந்ததியர்கள் 3 சதவீதம் பெறவும், பழங்குடியின மக்களுக்கு தனியே 1 சதவீதம் எனவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே 18 சதவீதம் எனவும் மாற்றியமைத்தோம். இவையும், முன்னேறிய வகுப்பினர் பட்டியலில் இருந்த கொங்கு வேளாள சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்ததும், சமூக நீதியில் இந்த இயக்கத்துக்கு உள்ள அக்கறைக்கான எடுத்துக்காட்டுகள். அதனால் தான், சமீபத்தில் வந்துள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தேன் துளிகளாகவும், இது தேனருவியாக மாறும் அளவுக்கு சமூக நீதிப் பயணத்தில் முழுமையான வெற்றியைப் பெற விரும்புகிறோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
திருவேங்கடம் - Singapore,ஸ்லேவாக்கியா
2010-07-23 15:34:51 IST
அய்யா .. நீங்க இந்த விமர்சனங்களை எல்லாம் படிக்க மாட்டீங்களா.. ஆமா நமக்கு சூடு சொறனைன்னு எதாவது இருந்தாத்தான ......
ரியாஸ் - saudi,இந்தியா
2010-07-23 15:15:29 IST
இங்கே கருத்துக்களை படிக்கும்போதே தெரிகிறது யார் இதில் ஹீரோ என்று, mr கருணாநிதி இது ஒரு பொலப்பா, இந்த பொழப்புக்கு ????????. ஆனால் இப்படியோரு கேவலமான ஒரு பேட்டியை உங்களைத்தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது,...
ranganathan - chennai,இந்தியா
2010-07-23 15:06:52 IST
கூப்பிடு வீரமணி,வாலி வைரமுத்து எல்லோரையும். புக் பண்ணு. தீவு திடல ஏற்பாடு பண்ணு. பாராட்டு விழாவ குகநாதன் கிட்டயும் ராமநாராயணன் கிட்டையும் சொன்னா சினிமா கும்பல கூப்பிட்டு மைதானத்த நிரப்பிடுவாங்க. சன் டிவி ஒரு மூணு சண்டே ரிலே பண்ணிடுவாங்க....
M இந்தியன் - Dubai,யூ.எஸ்.ஏ
2010-07-23 15:05:45 IST
மஞ்சள் துண்டு ஒரு புளுகு மூட்டை மன்னன் என்பதை தினம் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை மேலும் தொடர கணக்கில் அடங்கா வாரிசுகள். மன்னிக்கவும். வைரசுகள். ஒன்னுக்கே தாங்க முடியலை. இந்த வைரசுகள் தமிழ்நாடு முழுவதும் பரவி மக்களை நாச படுத்த தயார் நிலையில் உள்ளது. ஜெயா என்னும் மருந்தை கொண்டு அழிக்கவில்லை என்றால் விபரீதம் கணக்கிட முடியாததாகிவிடும். இது திண்ணம். இப்போதைக்கு இதுதான் அவசர சிகிச்சை. ஏன் இவ்வளவு கவலை மஞ்சள் துண்டுக்கு. நிச்சயம் வரலாற்றில் உன் பெயர்,புகழ் இடம் பெரும். எப்படி வாழ கூடாது என்பதற்காக. இந்த இட ஒதுக்கீடு தீர்ப்பு எம் ஜி ஆர் அதை தொடர்ந்து ஜெயாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. சரியான நேரத்தில் வெளி இடப்பட்டுள்ளது. எல்லாம் தெய்வ செயல்....
A. ரியாஸ் ஹமீது - jeddah,இந்தியா
2010-07-23 14:59:41 IST
அட போராம புடிச்ச ????. உங்களுடைய பொய்க்கு ஒரு அளவே இல்லையா, 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பு கூறியது. எக்காரணத்தை கொண்டும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது என்பது தான் அந்த தீர்ப்பு. எனவே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்றால் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு சட்ட பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் உருவாக்கிய சமூக நீதியை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. எனவே 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க உரிய தீர்மானம் நிறைவேற்றி சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அந்த கூட்டத்தின் முதல் நாளில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது 69 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மறுநாள் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. சமூக நீதிக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டிற்காக சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மசோதாவை நிறைவேற்றிய ஒரே அரசு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான். கலைகரே உங்களுடைய கடிதத்திற்கும் போரட்டதிர்க்கும் உள்ள மரியாதையை எங்களுக்கு நல்லா தெரியும், உங்களுடைய இந்த கேவலமான ஈனத்தனமான பேட்டியை படித்து dmk காரன் கூட வெட்கப்படுவான், இதும் ஒஉர் பொழப்பு, து....
மேர்வின் - Singapore,இந்தியா
2010-07-23 14:41:01 IST
Murali got 800 wickets. Thanks to DMK....
முருகன் - chennai,இந்தியா
2010-07-23 13:36:38 IST
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள். உங்களால் கிடைத்த வெற்றியை யாரோ உரிமை கொண்டாடுகிறார்கள். போகட்டும். உங்கள் செயல் தொடரட்டும். ஜெய் ஹிந்த்!...
suresh - covai,இந்தியா
2010-07-23 13:10:41 IST
அய்யா கருணாநிதி அவர்களே உங்க நேரம் முடிந்தது. இனி அம்மா நேரம் be ready to take rest....
munish - Bangalore,இந்தியா
2010-07-23 12:51:51 IST
நைட் ஷோ பார்த்துட்டு வந்து பிள்ளைக்கு தன்னோட initial வைக்கணுமாம்... கேவலம்!.......
chandrasekaran - Arakkonam,இந்தியா
2010-07-23 11:44:33 IST
ரொம்ப முக்கியம். அனைத்தும் ஒட்டுக்கே...
Asokaraj - Abudhabi,இந்தியா
2010-07-23 11:38:04 IST
அய்யா நீங்க மட்டும் இல்லேனா நாங்க என்ன ஆகி இருப்போம்னு நினைக்கவே நெஞ்சு தாங்கலே. தனி மனிதனா தண்ட வாளத்திலே தலை கொடுத்தவர்லே... ஜே ஜே ஆட்சியின் போது கைது செய்யும் போது அய்யோ கொல்றாங்கலேன்னு கதறிய ஆண்மையும் வீரமும் மிக்கவர்லே நீங்க. நினைச்சாலே புல்லரிக்குது...
சங்கர்.ப - தேனி,இந்தியா
2010-07-23 11:29:01 IST
எல்லாத்துக்கும் ஒரு கடிதம் எழுதிர வேண்டியது, பின்பு ரிசல்ட் வந்தவுடன், நாந்தான் காரணமுனு அறிக்கை விட வேண்டியது, எத்தனை பிரச்சனைகள் நாட்டில் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. அதற்கு பொறுப்பேற்க வேண்டியதுதானே, பின்ன என்ன பீத்திக் கொள்கிறீர்கள். அடுத்த இலவச அறிவிப்பை பற்றி மக்கள் யோசிக்க வேண்டும். இந்த கருத்தை பதிவும் செய்யும் இடத்தில் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் நபர்கள், மனதை விட்டு விட்டு வார்த்தைகளால் மட்டுமே விளையாடுகிறார்கள், எங்களை போன்றவர்கள் குற்றம் மட்டுமே சொல்ல வரவில்லை, நல்லது செய்தால்தால் பாராட்டவும்தான் செய்கிறோம்.நிறைகுடம் என்றைக்கும் தழும்பாது.......
பாபா - chennai,இந்தியா
2010-07-23 11:25:34 IST
ஜெயலலிதா தான் இந்த சட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்தார்......... ஹி ஹி ஹி , எனக்கு வெக்கம், மானம் சூடு, சொரணை எதுவும் கிடையாது. வேணுங்கறது எல்லாம் புரட்சித்தலைவரை போல் நல்ல பேரு, யாரவது பிச்ச போடுங்களேன்.... பொய் கூற வேண்டாம், சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாட்களானதற்கு கூட கலைஞர்தான் காரணம் என்று சொன்னால் கூட பாராட்டு விழா எடுக்க தயாராக இருக்கும் ஆட்கள் இருக்கும் வரை இதுவும் சொல்லுவார் இன்னமும் சொல்லுவார்.......
சோனி - malaysia,இந்தியா
2010-07-23 11:20:16 IST
மக்க சந்தோஸ் ....தேர்தல் முடியும் வரை நீயும் உங்க பச்சை பாட்டி & அகில இந்திய திருட்டு முன்னேற்ற கழக தொண்டர்கள் அனைவரும் எங்காவது ரெஸ்ட் எடுங்க ..போறப்ப வை.கோ வையும் தள்ளிடு போங்க ...ப்ளிஸ் .தேர்தல் முடிந்த பிறகு தமிழ்நாடுக்கு வாங்க ....
தமிழ் வேந்தன் - chennai,இந்தியா
2010-07-23 11:16:06 IST
தலைவரே, யாரால் வந்தால் என்ன.? நாம் ஆட்சியில் இருக்கும் போது தீர்ப்பு வந்துள்ளது. அதனால் இதற்கு நாம் தான் காரணம். இந்த பெருமை எல்லாம் உங்களுக்குதான். உங்கள் பிள்ளைகள் பேரன், என்று நீங்கள் எல்லோரும் தான் காரணம். நமக்கு என்னே வெக்கமா, மானமா? எது இருக்கிறது? இன்னொரு பாராட்டு விழா எடுத்துரலாம், யார் காசில்? அதான், 7 கோடி முட்டாள்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரி பணத்தில்தான். 250 கோடி செலவில் ஒரு மாநாடு. உங்களை புகழ்வதர்காகவே ஒரு 1000 பேரை ரெடி பண்ணிடலாம்....
கணேஷ் - Ahmedabad,இந்தியா
2010-07-23 11:13:57 IST
இன்னும் சொல்லப்போனால் மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்துவதற்கு இவரிடம் ஆலோசனை கேட்ட பிறகே தூத்துக்குடியில் உப்பு சத்தியாகிரகம் நடை பெற்றது. அதனால் உப்பு சத்தியாகிரகம் நடைபெற காரணமானவரே கருணாநிதி தான்....
Rangarajan - Chennai,இந்தியா
2010-07-23 11:13:04 IST
"இவ்வாறு தொடர்ந்து 1920ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக, இட ஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்து வந்ததன் பயனாகத்தான்" என்னது இவர் 1920 ம் வருடத்தில் இருந்து குரல் கொடுத்தாரா? இது சரியான காமடியா இல்ல? இவரு வயசு என்ன. அப்படின்னா இவரு பிறக்கறதுக்கு முன்னாடியே இருந்து குரல் குடுத்துட்டு வர்றாரா? லூசுதனமால்ல இருக்கு. இவர் சொல்றத எல்லாரும் நம்பிடுவாங்கன்னு நெனச்சிட்டாரா? இந்த மாதிரி தேவை இல்லாத இட ஒதுக்கீடு குடுக்கறதால தான் உண்மையான ஊழியர்கள் கிடைப்பதில்லை. இதனால் தான் ஊழலும் லஞ்சமும் வலு பெறுகிறது. லூசுத்தனமான அரசியல்வாதி இந்த கருணாநிதி....
உணர்வில்தமிழன் - chennai,இந்தியா
2010-07-23 11:11:27 IST
யோவ் பெருசு.........எது பண்ணாலும் நீதான் "சவுண்டு கொடுத்து" பண்ணுன மாதிரி ஒரே பீலா விடுறியே,எப்போ தான் திருந்துவீங்க ? இப்படியே போச்னுனா, நாங்க எல்லாரும் "சூச்சு" போறது கூட நீங்க போராடித்தான் "வெளிய வருதுன்னு" சொல்லுவீங்க போல ! எல்லாம் எங்க தலை எழுத்து !...
babu - rajapalayam,இந்தியா
2010-07-23 11:09:44 IST
கனிமொழி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, எனது பேனாவுக்கு ஓய்வு கிடையாது. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன் என்றார். கவர்ச்சி நடிகை சோனா தனது யூனிக் நிறுவனம் சார்பில் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுடன் இணைந்து தயாரித்துள்ள படம் கனிமொழி. ஜெய் ஹீரோவாக ஒருவேளை உலகத் தமிழ் மாநாட்டையொட்டி பிறந்த பெண் குழந்தை என்ற காரணத்தினாலோ, என்னவோ, அந்த "கனிமொழி'' இன்றைக்கு உலகப் புகழ் பெறுகின்றவர்களிலே ஒருவராக விளங்கி வருகின்றார். பெற்றவர்களுக்கு அதனால் ஏற்பட்டிருக்கின்ற மகிழ்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல; உங்களுக்குத் தெரியும். கனிமொழி இன்றைக்கு இந்த விழாவிற்கு வந்திருக்க வேண்டும், வரவில்லை. அது, கனிமொழி பின்பற்றுகின்ற ஒரு இலக்கணம். தன்னைப் பாராட்டுகின்றவர்கள், தன்னைப் புகழ்கின்றவர்கள் அல்லது தன்னைப் பாராட்டுவதற்காக நடைபெறுகின்ற விழாக்கள் இவைகளில் கலந்து கொள்ளாமல் சமாளிப்பது, அவர்களுக்குப் போக்கு காட்டி வேறு இடத்திற்குச் சென்று விடுவது கனிமொழியினுடைய வாடிக்கை. . தமிழகத்தில் என்னுடைய குடும்பமும், நானும் அரசியலில், நாட்டு மக்களுக்கான தொண்டிலே ஈடுபட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். குடும்பமாக இருப்பது தான் தொல்லை. பல பேர் அந்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் - அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாத காரணத்தால் எதற்கெடுத்தாலும், என்னைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் - என்னைப் பற்றிச் சாட்டுகின்ற பெரிய குற்றச்சாட்டே, நான் ஒரு குடும்பஸ்தன் என்பது தான். அவர்களுக்கு அது வாய்க்கவில்லை என்பது என்னுடைய தவறல்ல. ஆனால், இந்த நல்ல நேரத்தில் அதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டுமா என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரியாமல் இல்லை....முதல்வர் வாழ்க...
விஜயகுமார் - akasampet,இந்தியா
2010-07-23 11:04:34 IST
பொய் சொல்லாத. புரட்சி தலைவர் எப்பவோ செய்து விட்டார். பின்னர் வந்த அம்மா அவர்களும் அதை உறுதி செய்தனர். இந்த டகால்டி வேலையெல்லாம் உன் புகழ் பாடும் எடு பிடி களிடம் வச்சிக்கோ...
2010-07-23 10:49:42 IST
ஒரு சின்ன நேரடி மேட்டரை குழப்பி, யாருக்கும் புரியாமல் செய்து மீன் பிடிக்கும் திறமையே திறமை. நான் நேற்று எழுதியபடி இந்த creamy layer ஐ பற்றி ஏதாவது நடவடிக்கை உண்டா ??? நண்பர் மணி கூறியபடி "வயலில் கூலி வேலை செய்யும் குப்புசாமி வன்னியரின் மகனும், உலக கோடீஸ்வரர் கருணாநிதி வாரிசும் ஒரே பட்டியலில் வரலாமா ??? இதுதான் சமூக நீதியா ??? அப்படி என்றால் ஜாதியை நீங்கள் என்ன உரம் போட்டு வளர்த்து மேடையில் பேசும் "ஜாதி ஒழிப்பு" என்னும் கோஷத்தை சுடுகாட்டுக்கு அனுப்புகிறீர்களா ??? இந்த 87 வயசில் பேச்சை பார் ? பேராசை இமயமலை உயரத்துக்கு சென்று விட்டது !!!...
Ashok - madurai,இந்தியா
2010-07-23 10:48:04 IST
நீதி வழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும். ( குறள் எண் : 388 )...
Sangkaran - Chennai,இந்தியா
2010-07-23 10:00:00 IST
பாசக்கார தலைவனுக்கு இன்னொரு பாராட்டு விழா யாரவது நடத்துங்களேன், ப்ளீஸ்....
sathish - cbe,இந்தியா
2010-07-23 09:42:56 IST
கேப்பையிலே நெய் வடியுதுன்னு சொன்னா உங்க ரத்தத்தின் ரத்தங்கள் அப்படியே தலை ஆட்டும் ஏனென்றால் உங்க எலும்பு துண்டுகளுக்கு அவ்வளவு ருசி,, ஆனால் மக்கள் இனியும் ஏமாறுவார்கள் என்று நம்புவது முட்டாள் தனம்,, அதற்க்கு கோவையே சாட்சி,, இன்னும் வயித்தில் புளியை கரச்சுகிட்டே தானே இருக்கு,, நேத்துதானே அம்மாவினால் இடஒதிககேடுஅதிகம் ஆய் விட்டது என்று புலம்பி தீர்த்தார் ,,இன்றோ வேறு ஒரு அறிக்கை என்னால் தான் இந்த ஒதிக்கேடு,,என்று,, ஒரு நிரந்திர புத்தியே இல்லாமல் எப்படிதான் இவர் இன்னும் முதலமைச்சராக நீடிக்கிராரோ,,, எல்லாம் நம் விதி,,ஐந்து பக்க கடிதம் போதுமா??குறைந்தது ஒரு இருபது பக்கமாவது வேண்டாமா???அப்படியே தமிழ் மக்களை முட்டாள் ஆக்குவதில் உமக்கு நிகர் நீர்தான்,,, உம்மை மிஞ்ச ஆள் இல்லை,,, அம்மா இருக்கும் பொது இத்தனைபிரச்சனையா இருந்தது,,, தொலை நோக்கு முதலீடுகளே இல்லை,, எல்லாம் அப்ப அப்ப நாயிக்கு பிஸ்கட் போடுவது போலே அப்ப பிரச்சனை முடிந்தால் போதும் ,,, இந்த குறுகிய மனப்பான்மையை வளர்த்து நாச மாக்கி விட்டீர்கள் தமிழ் மக்களின் வாழ்வையே,, இல்லையென்று சொல்ல முடியுமா???...
2010-07-23 09:12:39 IST
யோவ் பெரிசு, நீ அடங்கமாட்டியா, தினமும் ஏதாவது பினாத்திரையே. இட ஒதுக்கீடுனாலதான் நாடு பின்னோக்கி போகுது. இலவச கல்வி கொடு, உத்தியோகம்னு வரும்போது, திறமைய பாரு. திறமை இல்லாததால்தான் எங்கும் லஞ்சம், ஒழுக்ககேடு, விபத்து எல்லாம்....
True Indian Abudhabi - abudhabi,இந்தியா
2010-07-23 09:03:20 IST
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன தமிழ் மண்ணிலே ஜாதி பெயரால் அரசியல் நடத்துறீங்களே அய்யா.வெட்கமாயில்லெய்? நீங்கல்லாம் எப்போதான் உருபடுவேங்களோ? Jai Hind...
2010-07-23 08:17:32 IST
ஹி ஹி ஹி , எனக்கு வெக்கம், மானம் சூடு, சொரணை எதுவும் கிடையாது. வேணுங்கறது எல்லாம் புரட்சித்தலைவரை போல் நல்ல பேரு, யாரவது பிச்ச போடுங்களேன்....
G Sankaran - California,உஸ்பெகிஸ்தான்
2010-07-23 08:11:32 IST
சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாட்களானதற்கு கூட கலைஞர்தான் காரணம் என்று சொன்னால் கூட பாராட்டு விழா எடுக்க தயாராக இருக்கும் ஆட்கள் இருக்கும் வரை இதுவும் சொல்லுவார் இன்னமும் சொல்லுவார்....
மணி - Chennai,இந்தியா
2010-07-23 08:01:27 IST
பல முன்னேறிய சமூகங்களை பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தும், தன சமூகத்தை (சுயநலத்திற்காக)மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தும், உண்மையிலேயே பின்தங்கிய சமூகங்களுக்கு எந்தப் பலனும் இல்லாமல் அடித்துவிட்டு, தற்புகழ்ச்சி வேறு! எத்தனை வறுமையில் வாடும் சமூகத்தவர், இவர் செய்த நாரதர் வேலையால் கல்வி ,வேலை வாய்ப்புகளில் பின்தங்கிவிட்டனர் தெரியுமா?சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி . கிரீமி லேயர் அமல் படுத்த்தியிருந்தால், இட ஒதுக்கீட்டில் பல உண்மை ஏழைகள் பலனடைந்திருப்பர். வயலில் கூலி வேலை செய்யும் குப்புசாமி வன்னியரின் மகனும் , உலக கோடீஸ்வரர் கருணாநிதி வாரிசும் ஒரே பட்டியலில்(மிகவும் பிற்பட்டவர்!). நாடு உருப்படுமா?உண்மை ஏழையை வஞ்சிக்கும் இந்த இட ஒதுக்கீடு குப்பைக்கு சமம்....
சாமி - bangkok,டோகோ
2010-07-23 07:47:36 IST
சாதி சண்டையை மூட்டி விடுறதுல பெருமை என்ன வேண்டி கிடக்கு. எல்லா சமூகத்திலும் தான் ஏழை, பணக்காரர்கள் இருக்காங்க. நீங்க குறுப்பிட்ட சதவீதத்தை பிரிச்சி ஒரு சாதிக்கு கொடுதிட்டிங்கன்ன உடனே அந்த சாதியிலுள்ள எல்லாரும் திடீர்னு பணக்காரங்க ஆகிடுவான்களா . இத எங்கள நம்ப சொல்றிங்களா! அந்த வாய்ப்பையும் கூட அந்த குறிப்பிட்ட சாதியிலுள்ள பணக்காரங்க தான் யூஸ் பண்ணிக்குவாங்க. என்ன அவங்க தான் வட்டம், மாவட்டத்துக்கு வேண்டியவங்களா இருக்காங்க.அதனால அந்த குறிப்பிட்ட சாதியிலுள்ள ஏழைக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. வேணும்னா உங்களுக்கு , ராமதாசுக்கு, திருமாவுக்கு ரொம்ப பயனளிக்கலாம். திருந்துங்கையா. ஏழைகளுக்கான இட ஒதுக்கீடுனு கொண்டு வந்தாதான் உண்மையிலேயே எல்லா சாதியிலுள்ள ஏழைகளும் முன்னேற முடியும். ஆனா அப்ப கூட எம்.எல்.ஏ முதல் அமைச்சர் வரை பிச்சைகார வேஷம் போட்டு நானும் ஏழை தான், ஏழை தான் எனக்கு பாத்து போட்டு கொடுங்கன்னு கேப்பாங்க. ஆனா வேற வழியில்லை. அரசாங்கம் தான் முறையான வழியில் போக வேண்டும்....
பாலாஜி - madurai,இந்தியா
2
கருணாநிதிக்கு பொய் பேசுவதை தவிர வேறு எதுவும் தெரியாது என்று நினைக்கிறன். அதாவது, எதிர் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஜெயலலிதாவுக்கு பாராட்டு எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது என்று டீ கடை பெஞ்சில் செய்தி வந்தது. ஜெயலலிதா ஆட்சியில் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுத்தார், ஜெயலலிதாவால் தான் இந்த தீர்ப்பு வந்தது என்று ஆளுங்கட்சி அடக்கி வாசித்தது, இல்லை தமிழ்நாடே அதிர்த்து போகிற அளவிற்கு தம்பட்டம் அடித்திருப்பார்கள். இப்போது ஜெயலலிதாவை பாராட்டி விழா எடுக்கபோகிறார்கள் என்பதற்காக இந்த ஈனத்தனமான பொய்யை கூறியுள்ளார் மஞ்சள் துண்டு. ஒன்று மட்டும் சொல்லுகிறேன், என்ன தான் புரண்டு புரண்டு வேலை செய்தாலும், அதிமுக தலைமையில் 2001 ஐ போல் ஒரு மெகா கூட்டணி அமைவது உறுதி, காங்கிரசும் சேரலாம், அது தேர்தல் நெருங்கும் போது தான் அந்த அறிவிப்பு வரும்.மொத்தத்தில் திமுகவுக்கு ஆப்பு காத்திருக்கிறது....
Ramakrishnan - Bengaluru,இந்தியா
2010-07-23 07:32:55 IST
எதாவது நல்லது என்றால் உடனே என்னால் தான் என்பதும் கெட்டது என்றால் மத்திய அரசு தான் காரணம் என்பதும் வாடிக்கை ஆகி விட்டது...
கோபி - chennai,இந்தியா
2010-07-23 07:27:20 IST
இவரை யாரும் புகழவில்லை எனில் இவரே இவரை புகழ்ந்து கொள்ளவார்...என்ன ஜென்மம் டா சாமி....!!!...
2010-07-23 06:03:42 IST
அடங்கொக்க மக்க?விட்டால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததே உங்களாலேதான் என அடிச்சு விட்டாலும் விடுவீங்க எப்படியெல்லாம் மக்களை ஏமாத்தலாம் என ரூம் போட்டு யோசிப்பிங்களோ...
கே.JEEVITHAN - VILLUPURAM,இந்தியா
2010-07-23 05:54:24 IST
இப்படி பெருமை பட்டால் மட்டும் போதுமா? இதற்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேணாமா? கூப்பிடுங்கள் வீரமணி அவர்களை. ஒரு கை பார்த்துவிடுவோம்....
பிரபா - chennai,இந்தியா
2010-07-23 05:51:39 IST
"..முன்னேறிய வகுப்பினர் பட்டியலில் இருந்த கொங்கு வேளாள சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்ததும்.." முன்னேறியவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளுவதே கருணாநிதியின் சாதனை... கடைசி வரை ஜெயலலிதா செய்ததை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை......
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-07-23 04:40:07 IST
அய்யா ஜோபெட், கடிதம் எழுதுவதை பற்றி நேற்று நீண்ட விளக்கம் அளித்தீர்கள். சரி கடிதம் எழுதுவது தவறு இல்லை தான், எல்லாரும் தான் கடிதம் எழுதுகிறார்கள், ஆனால் எங்களுடைய வருத்தம் என்ன வென்றால், புதல்வர்களுக்கு பதவி வாங்க சென்னையிலிருந்து கடிதம் எழுதியிருந்தால் நாங்கள் கிண்டல் செய்ய மாட்டோம், குடும்ப உருபினர்களுக்கு பதவி வாங்க காற்றாக பறந்து டெல்லிக்கு சென்று, சண்டை போட்டு, மிரட்டி, கோபித்து கொண்டு சென்னை திரும்பி கடைசியில் பதவிகளை வாங்கிவிட்டார், இதே முனைப்பை இலங்கை விஷயத்தில் காட்டியிருக்கலாமே? பிள்ளைகளுக்கு டெல்லிக்கு சக்கர நாற்காலியில் தள்ளாடி சென்று பதவி வாங்குவது, மக்களுக்காக கடிதம் மட்டும் எழுதி பொறுப்பை தட்டிகழிப்பது.. நல்ல வேலை கெட்டதிலும் கடவுள் தமிழக மக்களுக்கு நல்லது செய்துள்ளார், அது என்னன்னா, காங்கிரஸ் மெஜாரிட்டியில் திமுகவின் ஆதரவை சாராமல் ஜெயித்துவிட்டார்கள், இல்லை தமிழனாடே இன்று சுடுகாடாக மாறியிருக்கும். கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்....
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-07-23 04:33:44 IST
வாசகர்களே, எனக்கு ஒரு சந்தேகம், யாராவது நிவர்த்தி செய்யுங்கள் ப்ளீஸ்... நேற்று டீ கடை பெஞ்ச் செய்தியில் ஒரு செய்தி வெளிவந்தது, தமழிக தேர்தல் அதிகாரியை நியமிக்க கருணாநிதி தரப்பில் நான்கு அதிகாரிகளை சிபாரிசு செய்ததாகவும், அது நிராகரிக்கபட்டுவிட்டதாகவும், இன்னும் அதிகாரிகளை தேர்வு செய்யும் முனைப்பில் திமுக ஈடுபட்டுள்ளதாகவும் செய்தி வந்தது. எப்படி திமுக இந்த காரியத்தை செய்யலாம்? யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது? அப்படி இவர்கள் சொல்லும் ஆட்களை நியமித்தால் வரும் சட்ட மன்ற தேர்தல் நியாயமாக நடக்குமா? இவர்கள் சொல்லும் ஆட்களை எப்படி நியமிப்பார்கள், எனக்கு கொஞ்சம் விளக்குங்கள் ப்ளீஸ்... அப்படி கருணாநிதி பரிந்துரைக்கும் ஆட்களை நியமித்தால், நாளையே வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று விட்டது என்று அறிவிப்பது நல்லது.... இதை அனுமதிக்க கூடாது. கருணாநிதி ஏற்கனவே ஜனநாயகம் குழி தோண்டி புதைத்துவிட்டார், கொஞ்சம் நஞ்சம் நியாயமாக நடந்த தேர்தல் கூட வரும் தேர்தலில் மஞ்சள் துண்டு நடத்தவிடமாட்டார் போலும்.... வரும் சட்ட மன்ற தேர்தல் எப்படி நடக்கும் என்று நீங்கள் காண ஆசைபட்டால், தூள் படம் பாருங்கள், அதில் வரும் காளை பாண்டியன் தான் நம் தலைவர் மஞ்சள் துண்டு.... பாருங்கள் உங்களுக்கே புரியும்....
Karuppiah சத்தியசீலன் - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
2010-07-23 04:20:44 IST
௧) சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததில் இருந்து, மு க,வாயிலும் வயிற்றிலும்,அடித்தக் கொள்கிறார்.எம் ஜி ஆர்,கொடுத்த 69 %,இட ஒதுகிட்டிற்கு,ஜெ ஜெ,தமிழக சட்ட சபை முலம்,சட்டம் 1992 ல்,நிறைவேற்றி,நரசிம்ம ராவ் முலம்,இரண்டு பாராளுமன்ற சபைகளையும் கூட்டி,அரசியல் சட்டத்தின் ,9 பிரிவில் ,பாதுகாப்பாக வைத்தார்.9 பிரிவு சட்டங்களை,கோர்ட் ஆய்வு செய்ய முடியாது.அதனால் சுப்ரீம் கோர்ட்டால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.௨) மு க ,வக்கில் விஜயன் முலம் கேஸ் போட வைத்தார்.எம் ஜி ஆர் கொடுத்ததை,7 உலகங்களில் ,யாரும் தடுத்து நிறுத்த முடியாது....
Senthil - IL,உஸ்பெகிஸ்தான்
2010-07-23 02:34:21 IST
தேர்தல் அறிக்கைல் போட்டால் கோர்ட் தீர்ப்பு குடுத்துவிடுமா ? மனசாட்சி என்பதே இல்லை உனக்கு. ஏன் ஜெயா போட்ட வழக்கால வந்தது என்று சொல்ல உனக்கு ரொம்ப வலிகறதோ? உன் கேட்ட எண்ணம் போல உன் வாழ்வு அமையும்....
கார்த்தி - madurai,இந்தியா
2010-07-23 02:28:15 IST
பொய் கூற வேண்டாம், ஜெயலலிதா தான் இந்த சட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்தார்.........
பாலா - Dubai,யூ.எஸ்.ஏ
2010-07-23 01:36:26 IST
1920 ம் ஆண்டில் இருந்தே தி.மு.க குரல் கொடுத்த்தாதா? நல்ல பேசுறீங்க, நாங்களும் கேட்டுக்கிட்டே இருக்கோம். தலைவரே தி.மு.க பிறந்தது எப்போ? ஆமாம் இட ஒதிக்கீடு பற்றி பேசும் நீங்க ஏன் ஜாதி ஒழிப்பை பற்றி பேச மாட்டேங்கிறீங்க? ஆமாம் தலைவரே, நீங்கள் குரல் கொடுத்துதான் எம்பிகளின் சம்பளமும் உயர்ந்ததோ? என்னவோ போங்க, நீங்களும் உங்க கும்பமும் நல்லா இருந்தா போதும்......
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-07-23 01:35:49 IST
இந்த பூமி உருவானதே தி மு க வினால் தான் என்று கருணாநிதி சொன்னாலும் அதையும் நம்ப ஒரு கூட்டம் இருப்பது தான் அவருடைய பலம்....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-07-23 01:18:15 IST
உயிரே போனாலும் பரவாயில்லை உண்மையை மட்டும் பேசமாட்டேன் என்று சபதம் எடுத்துள்ள ஒருவரை முதல்வராக ஏற்றுகொண்ட நம்மை போல அதிர்ஷ்டசாலிகள் உலகில் வேறு எங்கும் இல்லை....
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-23 01:16:32 IST
இட ஒதுக்கீடு தீர்ப்பு மட்டுமா திமுகவால் கிடைத்தது. இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் கிடைத்த வெற்றியும் திமுகவினால் தான். மக்களிடம் சகிப்பு தன்மையினை அதிகரிக்க செய்ததும் (மின் வெட்டு விஷயத்தில்) திமுகவினால் தான். இலவசங்களில் மக்கள் மூழ்கி திளைப்பதும் திமுகவினால் தான். அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதும் திமுக தான். சினிமா கலைஞர்களை போற்றி சலுகைகளையும் இலவச நிலங்களையும் கொடுத்து போற்றுவதும் திமுக ஆட்சி தான். சொம்மொழி மாநாட்டினை நடத்தி தமிழ் மொழியினை பெருமை படுத்தியதும் திமுக தான். சேது சமுத்திர திட்டத்தினை பெற்றதும் திமுக தான். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் வாங்கும் சக்தியினை அதிகரிக்க செய்தும் திமுக தான். இன்னும் எவ்வளவோ சாதனைகள் உள்ளது தலைவா....எழுத இடமும் நேரமும் தான் இல்லை...தொடரட்டும் இந்த பொற்காலம்....
வெங்கட் - chennai,இந்தியா
2010-07-23 01:10:15 IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக