ஞாயிறு, 25 ஜூலை, 2010

திரிஷா தமிழில் கவர்ச்சி 20,தெலுங்கில்80

தென்னிந்திய கனவு தேவதை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் திரிஷா, இப்போது அகில இந்திய கனவு ராணியாகும் ஆசையுடன் இந்திக்குள் புகுந்துள்ளார்.
கவர்ச்சியில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு கொள்கையை வகுத்து அதன்படி செயல்பட்டு வருபவர் திரிஷா. தமிழில் நடிப்பு 80 சதவீதம் என்றால் கவர்ச்சிக்கு 20 சதவீதம்தான் இட ஒதுக்கீடு தருகிறார் திரிஷா. அதேசமயம், தெலுங்கில் இது அப்படியே தலைகீழாக மாறும்.
தற்போது இந்திக்கு போயுள்ள திரிஷா, அங்கு கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரத் தயாராக இருக்கிறாராம்.

அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ள கட்டா மீத்தா படத்தின் மூலம் இந்தியில் நுழைந்துள்ளார் திரிஷா. இன்று இப்படம் வெளியானது. மடிப்பு கலையாத புடவையுடன் படத்தில் நகராட்சி ஆணையர் வேடத்தில் மிடுக்கோடு ந்டித்துள்ளார் திரிஷா.
இந்தியில் தனது கொள்கை குறித்து திரிஷா கூறுகையில்,
கமிஷனர் வேடத்தில் நடித்ததால் புடவையில் நடித்தேன். அதேசமயம், ஒரு பாடல் காட்சிக்கு கவர்ச்சிகரமாக ஆடியுள்ளேன். இந்தியில் கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க நான் ரெடிதான்.
தற்போது படத்தின் விளம்பர புரமோஷனுக்காக மன்மதன் அம்பு படத்திலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டு வந்துள்ளேன். 25ம் தேதி (நாளை) மீண்டும் மன்மதன் அம்பு ஷூட்டிங்குக்குத் திரும்புகிறேன் என்றார்.

முன்னதாக புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு திரிஷா வராததால் ஹீரோ அக்ஷய் குமாரும், இயக்குநர் FPRIVATE "TYPE=PICT;ALT=[^]" பிரியதர்ஷனும் கோபமாக இருந்தனர். இதையடுத்து மன்மதன் அம்பு ஷூட்டிலிருந்து அவசரமாக மும்பை வந்துள்ளார் திரிஷா. இன்று மும்பையில் ஒரு ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அதில் திரிஷா பங்கேற்கிறாராம்.
இதற்கிடையே, மும்பையில் திரிஷா ஒரு புது வீட்டை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கேயே தங்கி தொடர்ந்து இந்தியில் நடிக்கும் திட்டமும் உள்ளதாம். இருப்பினும் வருகிற வாய்ப்புகளைப் பொறுத்தே மும்பையில் தங்குவது குறித்து முடிவெடுக்கவுள்ளாராம்.
இதுகுறித்து திரிஷா கூறுகையில், மும்பையில் தங்குவதற்கு இஷ்டம்தான். இந்தி திரையுலகில் எனக்குள்ள வர வேற்பை பொறுத்தே அந்த முடிவை எடுப்பேன். ஆனால் என் குடும்பத்தினர் சென்னையை விட்டு வரமாட்டார்கள்.
எனக்கு இந்தி தெரிந்தாலும் கூட தினசரி பேசும் பழக்கம் இல்லாததால், கட்டா மீத்தா படத்தில் பேசும்போது சற்று சிரமப்பட்டேன்.
அடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இந்தி ரீமேக்கில் நடிக்கிறேன் என்றார் திரிஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக