திங்கள், 12 ஜூலை, 2010

வாய்ப்பு வந்தபின் தூக்கம் வராது சினிமாவில் இருப்பது சுகமான விஷயம் அல்ல: நடிகர் நாசர் பேச்சு



சினிமாவில் இருப்பது சுகமான விஷயம் அல்ல என்று நடிகர் நாசர் கூறினார்
புத்தகங்கள் படிப்பதன் மூலம் மனிதனின் சிந்தனை யினை தூண்டுகிறது. சினிமா வில் வாய்ப்பு தேடுவது எளிமை. ஆனால் வாய்ப்பு வந்த பின் நிம்மதியான தூக்கம் கெட்டு விடும். சினிமா துறையில் இருப்பது சுகமான விஷயம் கிடையாது.

சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்த பிறகு அதனை தக்க வைத்து கொள்ள வேண்டிய நிலையை பற்றி யோசித்தால் தூக்கம் வராது. சினிமா துறையில் இருக்கும் 99 சதவீத நபர்கள் நடுத்தர, கீழ்த்தர வகுப்பினை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு கனவுகள் நிறைய உள்ளது.
நான் இதுவரை ஓராயிரம் புத்தகங்களை படித்துள்ளேன். அவைகள் எனது வாழ்க்கையினை மாற்றியுள்ளது. தற்போது வளர்ந்து வரும் சூழ்நிலையில் மனிதன் தனித்தனியாக பிரிந்து செல்கிறான். ஆனால் புத்தகங்களை படிப்பதன் மூலம் நட்புணர்வு உருவாகிறது.
வாழ்க்கைக்கு புத்தகங்கள் அவசியம். யார் வேண்டுமானாலும் பொய் சொல்லலாம். ஆனால் புத்தகங்கள் உண்மையானவை. நடிகர் என்ற அடையாளத்தில் நான் இங்கு வரவில்லை. புத்தக கண்காட்சி என்பதற்காக மட்டுமே வந்துள்ளேன். நெய்வேலி மிகவும் அழகான பசுமையான நகரமாக உள்ளது.
இவ்வாறு நடிகர் நாசர் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக