கொழும்பில் தொடரும் கொலைகள்
பி.பி.சி
இலங்கையின் தலைநகர் கொழும்பில் அண்மைக்காலமாக தொடருகின்ற சில கொலைச் சம்பவங்கள் அங்கு வாழும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இந்தக் கொலைகள் சற்று வித்தியாசமானவை. கொல்லப்படுபவர்கள் வீதியோரத்தில் வசிப்பவர்கள், வீடில்லாதவர்கள், பிச்சைக்காரர்கள். இந்தக் கொலைகள் செய்யப்பட்ட விதமும் மிகவும் கொடூரம்.
நித்திரையில் இருக்கும் போது பாறாங்கல்லாலோ அல்லது பெரிய தடியாலோ தலையிலடித்து ஆட்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இந்தக் கொலைகளின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை பொலிசாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கொழும்பின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்குள் குறைந்தது 7 பிச்சைக்காரர்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இவ்வாறு நடந்த கொலைகளில் ஒன்று கொட்டாஞ்சேனைப் பகுதியிலும் நடந்திருக்கிறது.
கொல்லப்பட்டவர் வீடில்லாத ஒரு கூலித்தொழிலாளி.வீதியின் ஓரத்தில் தூங்கிய போது நித்திரையில் அவர் இலக்கு வைக்கப்பட்டிருந்தார்.
கொட்டாஞ்சேனையில் வீதியில் பிச்சை எடுப்பவர்கள், வீடில்லாதவர்கள் அதிகமாக தெருக்களில் தங்கியிருப்பது வழக்கம்.மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வலது குறைந்தவர்களும் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்கள். அப்படியான சிலரும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பிச்சை எடுப்பது சட்ட விரோதம் என்று கூறி தம்மை பொலிஸார் விரட்டுவதால் அவர்கள் ஏற்கனவே ஒரு பாதுகாப்பற்ற உணர்வுடனேயே இருக்கிறார்கள். இந்தக் கொலைகள் தமக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார் வலது குறைந்த, வீதியில் பிச்சை எடுக்கும் ஏ. டி. காமினி.
இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக சில பொலிஸ்காரர்கள் பிச்சைக்காரர் வேடத்தில் தெருவில் தற்போது உறங்குவதாக பொலிஸார் கூறுகிறார்கள். ஒரு சம்பவத்துக்கு காரணமானவரை அவர்கள் ஏற்கனவே கைது செய்து விட்டதாக பொலிஸ் தரப்பில் பேசவல்லவர் கூறுகிறார்.ஆனால், கொலைகள் தொடருகின்றன. ஆகவே ஒரு தொடர் கொலையாளிதான் இதற்கு காரணம் என்று சிலர் நம்புகிறார்கள்.லக்ஷான் டியஸ் ஒரு சட்டத்தரணி. குற்றவாளிகள் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த கொலைகளை செய்வதாகக் கூறும் அவர், அவர்களுக்கு துணைப்படையுடனோ அல்லது சில திட்டமிட்ட குற்றக்குழுக்களுடனோ தொடர்பிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். கொழும்பு பொலிஸாரைப் பொறுத்தவரை, அவர்களுக்கு முன்னால் ஒரு பெரிய மர்மம் இருக்கிறது. தெருவோர பிச்சைக்காரர்களுக்கோ, பயப்படுவதற்கு ஒரு புதிய காரணம் கிடைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக