பிரபாகரன் தமிழ் தலைவர்கள் பலரையும், சகோதர இயக்க தோழர்கள் ஆயிரக்கணக்கணோரையும் கொலை செய்தமை அவருக்கு இருந்த தலமை வெறியே என்பதினை கூறுவதற்கு ஆராட்சி தேவையில்லை.சமாதான காலகட்டத்தில் சகோதர இயக்க உறுப்பினர்கள் எவரையாவது கொல்லாவிட்டால் உறங்கவோ அல்லது உண்ணவோ முடியாத நோயிற்கு பிரபாகரன் உள்ளாக்கப்பட்டு இருந்தார். அந்த காலகட்டதில் புலிகள் கொலைகளை செய்யாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு சகோதர இயக்க உறுப்பினர்கள் தினமும் கொல்லப்பட்டார்கள். கொலை செய்வதில் திருப்தி காணும் நோயின் பாதிப்பிற்கு பிரபாகரன் உள்ளாகியிருந்தார். அரசிற்கு எதிராகவோ அல்லது சகோதர அமைப்புக்களுக்கு எதிராகவோ தாக்குதலை மேற்கொள்ளாத காலங்களில் வீதிகளில் அனாதரவாக விடப்பட்ட நாய்களை தேடி கொல்லுமாறு பிரபாகரன் தனது உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
கொலை புரிவதில் அவருக்கு இருந்த ஈடுபாடும், கொலை செய்யாது அவரினால் இருக்க முடியாது என்பதற்கும், இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும்.
தனது ஆளுமை குறித்த அவநம்பிக்கை பிரபாகரனுக்கு அதிகமாக இருந்தது. மாற்று கருத்துக்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் பொறுமையும் அவரிடம் இல்லாமையினால் அவர்களை கொலை செய்வதுதான் தன்னை தங்க வைத்து கொள்ளும் ஒரே வழி என்று அவர் நம்பி இருந்தார்.
இவை எல்லாவற்றை காட்டிலும் சுலபமாக யாராலும் பாவிக்க கூடியவராக பிரபாகரன் இருந்து வந்தார். இதனை நம்புவது கடினமாக இருக்கும், ஆனால் அவரின் கடந்த கால நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்ந்தால் அது புலப்படும்.
இலங்கையின் பாதுகாப்பு செயலரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ஷ, இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்வதற்கு கரும்புலிகளை அனுப்பி தாக்குதலை மேற்கொண்டு விட்டு, பின்னர் இறுதி நேரத்தில் அவர்களிடமே பிரபாகரன் சரண் அடைந்திருந்தார். அரச படைகளிடம் சரண் அடையுங்கள் நாங்கள் எல்லாம் பேசிவிட்டோம் என்று சமரசம் பேசிய ஐயிரோப்பிய அமைச்சர் ஒருவரும், சுயாதீன அமைப்புக்கள் சிலவும் கூறிய போது அதனை நம்பி சரண் அடையும் அளவிற்கு பிரபாகரன் இருப்பார் என்று புலிகளின் கல்விமான்கள் முன்னர் நம்பி இருப்பார்களா? அவர்களை கொலை செய்வதற்கு நான் தான் கரும்புலிகளை அனுப்பினேன், அவர்கள் என்னை சும்மா விடுவார்களா என்று பிரபாகரன் சிந்தித்தாரா? வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்களுக்கு இணங்கி செயல்படுபவராகவே அவர் இருந்து வந்துள்ளார்.
www.neruppu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக