அமெரிக்காவின் வி்ண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியுள்ள கெப்லர் விண்கலம் 5 புதிய சூரிய குடும்பங்களையும் (Solar systems) 706 புதிய புதிய கிரகங்களையும் (Planets) கண்டுபிடித்துள்ளது. இதில் 140 கிரங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த புதிய சூரிய குடும்பங்களும், கிரகங்களும் நமது பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்திலேயே (Milky Way Galaxy) அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்வெளிக் கலம் செயல்பட ஆரம்பித்து 6 வாரம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை கண்டுபிடிப்புகளை நடத்தி சாதனை படைத்துள்ளது.
நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள இந்த exoplanets என்றழைக்கப்படும் சூரிய மண்டலங்களில் உள்ள 140 கிரகங்கள் நிலம், நீருடன் பூமியைப் போன்றே உள்ளன. உயிர்கள் உருவாகத் தேவையான நீர் உள்ளதால் இங்கு அடிப்படை உயிரினங்கள் இருக்காலம் என்று கருதப்படுகிறது.
நமது பால்வெளி மண்டலத்தில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரத்திங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100 மில்லியன் நட்சத்திரங்கள் உயிரினங்கள் வாழ சாத்தியமான கிரங்களாக இருக்கலாம் என்று கெப்லர் விண்வெளி்க் கலத்தை அனுப்பிய ஹாவர்ட் பல்கலைக்கழகத்தி் விண்வெளி ஆய்வுப் பிரிவின் தலைவரான பேராசிரியர் டிமிடார் சசலேவ் தெரிவித்துள்ளார்.
இந்த கெப்லர் விண்கலம் ஓராண்டுக்கு முன் ஏவப்பட்டது. ஆனால், கடந்த மாத மத்தியில் தான் பால்வெளி மண்டத்தின் பகுதியை எட்டிப் பிடித்து தனது ஆய்வைத் தொடங்கியது.
பால்வெளி மண்டலத்தில் உளள சிக்னஸ், லைரா, டிராகோ நட்சத்திர மண்டலங்களில் உள்ள அதிவேகத்தில் பயணிக்கும் சுமார் 1 லட்சம் நடத்திரங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் இந்த விண்கலம், அதன் ஒளி அளவில் ஏற்படும் மாற்றங்களை தனது 95 மெகா பிக்சல் கேமராக்கள் உதவியோடு பதிவு செய்து, பல்வேறு அலைவரிசைகளில் பிரித்து ஆய்வு செய்து, நாஸாவுக்கு தகவல்களை அனுப்பி வருகிறது.
இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ள பூமியைப் போன்ற கிரகங்களில் CoRoT - 7b மற்றும் Wasp-17b ஆகியவை முக்கியமானவை. இவை பூமியோடு மிகவும் ஒத்துள்ளன. இதில் CoRoT - 7b பூமியை விட 5 மடங்கு பெரியது. Wasp-17bயின் விட்டம் 2 லட்சம் கி.மீயாகும் (பூமியின் விட்டம் 12,000 கி.மீ தான்).
நமக்கு பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஜோகானஸ் கெப்லரின் மூன்றாவது விதியின் அடிப்படையில் தான் இந்த விண்கலம் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் தான் இதற்கு கெப்லர் வி்ண்கலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த இந்த கணித மேதை, கண்பார்வைக் குறைவுள்ளவராக இருந்தும், கிரகங்களின் இயக்கம் குறித்த கணக்கீட்டை 1960களில் தனது 3 விதிகளில் அடக்கிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கெப்லர் விண்கலத்தின் வாழ்நாள் 4 ஆண்டு காலமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக