இலங்கைத் தமிழர்கள் தமிழ் நடிகர், நடிகைகளை காண ஆர்வமாக உள்ளனர். இதை நான் இலங்கை வந்தபோது உணர்ந்து கொண்டேன். ஆனால் ஏன் அங்கு போகக் கூடாது என தடை விதித்துள்ளனர் என்று தெரியவில்லை. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, இயற்கை எழில் சூழ்ந்த நிலையிலும், படப்பிடிப்புக்கு ஏற்ற வகையிலும் உள்ளதாக கூறியுள்ளார் சல்மான் கான்.
தற்போது இலங்கைத் தமிழர்களையும் தனது செயலுக்கு ஆதரவாக கூப்பிட்டுப் பேசியுள்ளார். அத்தோடு தமிழ்த் திரையுலகினருக்கும் அட்வைஸ் கொடுப்பது போல பேசியுள்ளார்.
தற்போது ஆசினுடன் இலங்கையில் முகாமிட்டுள்ள சல்மான் கான், ரெடி என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இதனால் ஆசினுக்கு தமிழ்திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்தியத் திரையுலகமே ஒன்று சேர்ந்து ரெட் கார்டு போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சல்மான் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பையில் நான் இருந்தபோது இலங்கை செல்லவேண்டாம் என சில குறுந்தகவல்கள் வந்தன. ஆனால் இலங்கை தமிழர்கள் தமிழ் திரைப்பட நட்சத்திரங்களை காண ஆர்வமாக உள்ளதை நான் இப்போதுதான் அறிந்தேன். அவர்களை புறக்கணிக்கும் வகையில் ஏன் தடை விதித்துள்ளார்கள் என்று தான் புரியவில்லை.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, இயற்கை எழில் சூழ்ந்த நிலையிலும், படப்பிடிப்புக்கு ஏற்ற வகையிலும் உள்ளது. எனவே அதை புறக்கணிப்பது தேவையற்றது என்று கூறியுள்ளார் சல்மான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக