திங்கள், 19 ஜூலை, 2010

M.I.Aஅமெரிக்க கிரீன் காட்டுக்காக,புலிஆதரவு பிளாஷ் பக்குகளை மூடி மறைக்க

எனது தந்தைக்கு இலங்கை அரசு பாதுகாப்புக் கொடுத்தது! பிரபல பொப் பாடகி மாயா தெரிவிப்பு

எனது தந்தையார் இலங்கை செல்கின்றபோதெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து காப்பாற்ற இலங்கை அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்திருக்கின்றது இப்படிக் கூறி உள்ளார் பிரபல பொப் பாடகி மாயா . மாதங்கி அருட்பிரகாசம் என்கிற சொந்தப் பெயரை உடைய இவரின் பெற்றோர் இலங்கையர் ஆவர். பிரித்தானியாவில் வசித்து வருபவர்.
இவரின் தகப்பனாரான அருட்பிரகாசம் எனப்படும் அருளர் ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய பிரமுகராக இருந்தவர். அமெரிக்கப் பிரஜையான புரோன்ஃப்மன் என்பவரை மாயா திருமணம் செய்துள்ளார்.இருவருக்கும் 16 மாதக் குழந்தை உண்டு. ஆனால் மாயாவுக்கு கிறீன் அட்டை கிடைக்கின்றமையில் பலத்த சிக்கல் நிலவுகின்றது. அமெரிக்க விசா சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இவருக்கு இது வரை பாதகமாகவே இருந்து வந்துள்ளன.
இவருடைய தகப்பன் அருளர் புலிச் சார்பு கொள்கை உடையவர் என்று அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் விளங்கி வைத்திருக்கின்றமையும் இதற்கு ஒரு காரணம் ஆகும். தற்போது நியூயோர்க் சென்றிருக்கும் மாயா கிறீன் அட்டையைப் பெற்றுக் கொள்கின்றமையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.இந்நிலையிலேயிலேயே அவர் தகப்பன் இலங்கை செல்கின்றபோதெல்லாம் புலிகளிடம் இருந்து தகப்பனைக் காப்பாற்ற இலங்கை அரசு பாதுகாப்பு வழங்கி வந்திருக்கிறது என்று ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
comments: vadiv 
நரம்பில்லா நாக்கால் ஏதையும் சொல்லலாம் என்பதை பாடகி மாயா நிருபித்துள்ளார்.இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக படுமோசமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த அவர் தற்போது அமெரிக்க கிரீன் காட்டுக்காக புலிகளால் தன் தந்தை அருளருக்கு புலிகளால் ஆபத்து இருந்ததாகவும் இலங்கை அரசாங்கமே அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வந்ததாகவும் தற்போது திருவை மலர்ந்து அருளி உள்ளார்.இதைத்தானே கோத்தபாய ஏற்கனவே சொன்னார்?
கேவலம் ஒரு க்ரீன் காட்டுக்காக ஒரே அடியாக புலிஆதரவு பிளாஷ் பக்குகளை மூடி மறைக்க பஹிரத பிரயத்தனம் செய்கிறார் மாயா. நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக