திங்கள், 19 ஜூலை, 2010
ஒப்பந்த வியாபாரிகளால், விலை தீர்மானிக்கும் அடிப்படை உரிமைகள ம் பறிக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரத்தில், சர்வதேச மீனவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசு நிதியை ஒதுக்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில், கடல்சார் உணவுப் பொருட்கள் உற்பத்தி அதிகமாக இருந்தும், இன்று வரை அத்தொழில், பெரிய அளவில் வளர்ச்சியை எட்டவில்லை. முறையான சந்தைப்படுத்துதல் இல்லாததே இதற்கு காரணம். ஒப்பந்த வியாபாரிகளால், விலை தீர்மானிக்கும் அடிப்படை உரிமைகள் கூட, இங்குள்ள மீனவர்களிடம் பறிக்கப்பட்டுள்ளது. தனிநபர் லாபம் அடைவதும் அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் விதமாக, சர்வதேச தரத்தில் மீனவர் சந்தையை, ராமநாதபுரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி மற்றும் நிதி கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. சந்தை அமையும் பட்சத்தில், ராமநாதபுரம் மட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களின் மீன்பிடித்தொழிலும் நல்ல முன்னேற்றம் அடையும். வெளிநாட்டு ஏற்றுமதி அதிகரிப்பால், மீனவர்களின் வாழ்வாதாரமும் உயர்வு பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக