ஞாயிறு, 25 ஜூலை, 2010

5 மாதங்களுக்குமுன் காணாமல் போன மீனவர்கள் தென்னாபிரிக்காவில் மீட்பு

ஐந்து மாதங்களுக்கு முன்னர் 4 இலங்கை மீனவர்களுடன் காணாமல் போன மீன்பிடிப் பிடிப்படகொன்று தென்னாபிரிக்க கரையோரத்தை அடைந்துள்ளதாக தென்னாபிரிக்க ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
இம்மீனவர்கள் தென்னாபிரிக்க கரையோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேருவளையிலிருந்து புறப்பட்ட இப்படகு பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தது.
படகின் உரிமையாளர் உட்பட நான்கு மீனவர்களே காப்பாற்றப்பட்டுள்ளனர்.  சரத் பெரேரா, சுரேஷ் பேர்மி, ஆர்.மனோஜ் ஆகியோரே இம்மீனவர்களாவர்.
இம்மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தென்னாபிரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
www.tamil.daillymirror.lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக