நேற்றைய 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீச முடியாமல் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் என்ற வலுவான நிலையில் இன்றைய 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை மளமளவென ரன்களைக் குவித்தது.
தேநீர் இடைவேளையின்போது 8 விக்கெட் இழப்புக்கு 520 ரன்கள் எடுத்த நிலையில் அது டிக்ளேர் செய்தது.
கடைநிலை வீரர்களான ரங்கன ஹெராத் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லசித் மலிங்கா தன் பங்குக்கு 64 ரன்களைக் குவித்தார். இந்தியப் பந்து வீச்சு அந்த அளவுக்கு 'வலுவாக' இருந்தது.
அதேசமயம், முதல் நாளை விட இந்தியாவின் பந்து வீச்சு இன்று பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது.
இந்த டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முரளீதரன் இன்று பேட் செய்ய வந்தபோது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரத்தோடு வரவேற்றனர். பட்டாசுகளும் கொளுத்தப்பட்டன. இந்திய வீரர்களும் முரளீதரனை வாழ்த்தினர். முரளீதரன் ஆட்டமிழக்காமல் 5 ரன்களை எடுத்தார்.
முதல் இன்னிங்ஸை இலங்கை டிக்ளேர் செய்ததைத் தொடர்ந்து இந்தியா தனது இன்னிங்கஸை ஆரம்பித்தது.
கம்பீர் 2 ரன்களிலும், டிராவிட்18 ரன்களிலும் வீழ, ஷேவாக் நிலைத்து நின்றார். அதேசமயம், நட்சத்திர வீரர் டெண்டுல்கர் 8 ரன்களில் வீழ இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
மறு முனையில் ஷேவாக் நிலைத்து ஆடி ரன்களை சேர்க்க உதவினார். 29.4 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. ஷேவாக் ஆட்டமிழக்காமல் 85 ரன்களுடனும், லட்சுமண் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பதிவு செய்தது: 20 Jul 2010 6:42 pm
ஹோ ஹோ கோவிண்டாஹ் ...கோவிண்டாஹ்...காபாட்டு govindahh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக