திங்கள், 5 ஜூலை, 2010

கொழும்பு,20 தொடர்மாடிகள,சுவீகரிக்க முடிவு் விடு,தலைப்புலிகளுடன் தொடர்புள்ள வர்த்தகருக்குச் சொந்தமானது எனவும் அவர் கனடாவி

கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 தொடர்மாடிகள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ள வர்த்தகருக்குச் சொந்தமானது எனவும் அவர் கனடாவில் வசிப்பதாகவும் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.     புலனாய்வுப் பிரிவுகள் இதனைத் தெரிவிப்பதாக லக்பிம நியூஸ் பத்திரிகை நேற்று குறிப்பிட்டுள்ளது.
இந்த 20 கட்டிடங்களின் உரிமையாளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இந்த விபரங்கள் வெளிவந்திருப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய வர்த்தகருக்கு இவை சொந்தமானவையென நம்பப்படுகிறது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்களை மேற்கோள்காட்டி லக்பிம நியூஸ் தெரிவித்திருக்கிறது.
இதேவேளை, 40 இற்கும் அதிகமான இந்த மாதிரியான தொடர்மாடிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெறாமல் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.   இந்தத் தொடர்மாடிகளுக்கான உரிமையாளர்களிடம் பெறுமதியான ஆவணங்கள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கனடாவைத் தளமாகக் கொண்ட இந்த வர்த்தகர் தனக்குரியவை இந்தத் தொடர்மாடிகளென முன்வந்து நிரூபிக்காவிடின், இந்தச் சொத்துகளை அரசாங்கம் விரைவில் சுவீகரிக்குமென பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக