புதன், 2 ஜூன், 2010

உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகள் இரண்டாக பிளவு பட்டுள்ளதாக தெரியவருகின்றது

உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகள் இரண்டாக பிளவு பட்டுள்ளதாக தெரியவருகின்றது. உதயன் பத்திரிகையின் வித்தியாதரன் மற்றும் சரவணபவன் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள விரிசலே இதற்கு வித்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தனக்கு ஆசனம் வழங்காமல் சரவணபவனுக்கு ஆசனம் வழங்கப்பட்டமை குறித்தே சரவணபவனுக்கும், வித்தியாதரனுக்குமிடையே விரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தன்னை ஒரம்கட்டி தனது சுயநலங்களுக்காக பாராளுமன்ற தேர்தலில் சரவணபவன் போட்டியிட்டதால் வித்தியாதரன் மனக் கவலையடைந்துள்ளதுடன் இருவருக்குமிடையிலான விரிசல் பாரியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளதாகவும், வித்தியாதரன் விரைவில் யாழ்ப்பாணத்தில் சரவணபவன் உதயன் பத்திரிகைக்கு போட்டியாக புதிய பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் யாழில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உதயன் பத்திரிகையின் முக்கியஸ்தர் சரவணபவன் எதிர்வரும் வடக்கு மாகாணசபைக்கு இடம்பெறவுள்ள முதலமைச்சர் தேர்தலில் போட்டியிடுவதற்கும் எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் சரவணபவனுக்கும் போட்டி நிலவுவதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக