கொல்லம்: இலங்கை தமிழர்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்திய முக்கிய புள்ளி திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கை தமிழர்கள் 30க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் கொல்லத்தில் பிடிபட்டனர். இவர்களை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குமார் என்ற டென்னீசன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் எர்ணாகுளத்திலுள்ள ஒரு விடுதியில் மர்மமான நபர் தங்கி இருப்பதாக திருவனந்தபுரம் ஐ.ஜி. ஹேமசந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் உத்தரவின்பேரில் கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹசீதா அட்டலூரி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகிலுள்ள ரேணிகுண்டா பகுதியை சேர்ந்த மில்லர் என்பவர் பிடிபட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக