புதன், 16 ஜூன், 2010

ஆப்கானிஸ்தான்உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள கனிம புதையல்!தங்கம், லித்தியம், தாமிரம், கோபால்ட்

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.

இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'ஸ்மெல் பண்ணவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.

இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.

'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.

இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,

"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.

மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்

பதிவு செய்தவர்: முத்து
பதிவு செய்தது: 16 Jun 2010 1:36 am
இப்போ எண்ணை வளம் மிகுந்ததா இருப்பதால் மத்தியக்கிழக்கு நாடுகள் என்ன வல்லமை வாய்ந்ததா இருக்குதா என்ன ? அதே கதைதான். நம்ம ஆளுதான் அப்போவே சொல்லி வெச்சுட்டானே ...... ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய், காசுக்கு ரெண்டு விக்கவென்று காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன் ..... அப்படீன்னு. அதே கதைதான் ஆகப்போகுது. அமெரிக்காவும் சீனாவும் சிண்டிகேட் போட்டுகிட்டு உலக அளவுல கனிம விலைகளை நிர்ணயம் பண்ணி கொள்ளை அடிப்பானுங்க. அப்பாவி ஆப்கானிஸ்தான்காரன் விரல் சூப்பிட்டு நிக்கப்போறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக