புதன், 9 ஜூன், 2010

தேசத்துரோகத்தனமானதும் ஆத்திரமூட்டும் வகையிலானதுமான கூற்றை ஜெனரல் பொன்சே

ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்ச்சியாக தேசத் துரோகமான அறிக்கைகளை விடுத்து வருகிறார்.தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல்.

பி.பி.ஸியுடன் இரகசியமாக செய்து கொண்டதாக கூறப்படும் தொலைபேசி பேட்டியின் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியையும், பாதுகாப்பு செயலாளரையும், பாதுகாப்பு படையினரையும் மட்டுமன்றி முழு நாட்டையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுத்துவிட்டார்’ என்றார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தவொரு சுதந்திர விசாரணையின்போதும் தான் இது பற்றி சாட்சியமளிக்கவும் தயாராக இருப்பதாக ஜெனரல் பொன்சேகா தனது இரகசிய தொலைபேசி பேட்டியில் மேலும் கூறியிருந்ததாக தொகுப்பாளர் ஸ்டீபன் ஸக்கூர் மேலும் கூறியிருக்கிறார்.
“இவ்வாறான தேசத்துரோகத்தனமானதும் ஆத்திரமூட்டும் வகையிலானதுமான கூற்றை ஜெனரல் பொன்சேகா வெளியிட்டிருப்பது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் காட்டிக்கொடுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார்” என்றும் ஹுலுகல்ல சுட்டிக்காட்டினார். மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படைகளில் இருந்த அதிகாரிகளும் ஏனையவர்களும் மிகுந்த கடமையுணர்வுடனும் தியாக சிந்தையுடனும் செயற்பட்டனர் என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறுகிறார்.
அவர்கள் மேற்கொண்ட தியாகங்களினால் இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடிந்தது. அதற்கான தலைமைத்துவமும் வழிகாட்டலும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
அவர்கள் மீது பொறாமை கொண்டிருந்த ஜெனரல் பொன்சேகா அவர்களை சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் வஞ்சம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவ்வாறான அறிக்கைகள் அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் கடுமையான செயற்பாடுகளின் மூலம் பெறப்பட்ட யுத்த வெற்றியை குறைத்து மதிப்பிடவைக்கும்.
தனது முன்னைய கூற்றுக்களை ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ள போதிலும் இறுதியாக பி.பி.ஸிக்கு வழங்கிய இறுதியான தொலைபேசி பேட்டியை அவர் எந்த வகையிலும் மறுக்க முடியாது. ஏனெனில் அது அவரது சொந்த குரலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெனரல் பொன்சேகா முன்னர் உண்மையான இராணுவத் தளபதியாக நடந்துகொண்ட போதிலும் அதன் பின்னர் அவர் தேசத்துரோகமாக நடந்துகொண்டதால் இலங்கை சமூகத்திடம் இருந்த நன்மதிப்பை இழந்ததுடன் கெட்ட பெயரையும் சம்பாதித் துக்கொண்டுள்ளார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின்டயசிரி கூறியுள்ளார்.
நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் தனிப்பட்ட ரீதியில் லாபம் பெற ஜெனரல் சரத் பொன்சேகா முயற்சி செய்வதாகவும் கோமின் டயசிரி மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக