வெளிநாட்டு டூருக்காக ஏங்கும் தேர்தல் ஆணையர்கள்
அரசு செலவில் வெளிநாட்டு பயணம் என்றால் எல்லாருக்குமே ஆனந்தம் தான். ஆனால், இப்படி மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் ஆணையர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளன.ஒரு தேர்தல் ஆணையர், பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள விரும்பி, அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். எங்கு செல்வது, என்ன செய்வது என்று ஒரு பெரிய லிஸ்டே தயாரித்துவிட்டார். தன் பயணத்திற்கு அனுமதி தருமாறு பிரதமருக்கு பைல் அனுப்பினார். இந்த அனுமதி ஒரு சம்பிரதாயம் தான், உடனே அனுமதி கிடைத்துவிடும் என்று கிளம்ப தயாராக இருந்தவருக்கு அதிர்ச்சி. வெளிநாட்டு பயணம் வேண்டாம் என்று பிரதமர் மறுத்துவிட்டார். வழக்கமாக தேர்தல் ஆணையர்களின் பயணங்களை பிரதமர் ரத்து செய்ததே கிடையாது. இன்னொரு தேர்தல் ஆணையர், அமெரிக்காவிற்கு செல்ல ஆசைப்பட்டார் 20 நாட்களுக்கும் மேலாக டூர் செல்ல விரும்பினார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் லெக்சர் என்று பிரதமர் அலுவலகத்திடம் அனுமதி கேட்டார். இந்த பைல் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு தான் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் லெக்சர் எதுவும் கிடையாது, உணவு இடைவேளையின் போது மாணவர்களிடையே கலந்துரையாடல் தான் என்று விவகாரம் அம்பலமானது. மேலும் ஆணையர் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் பலவும் நம்ம ஊர் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் போல தரம் தாழ்ந்தது என்றும் தெரியவந்தது. இந்த பயணம் தேவையற்றது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், ஆணையர் விடவில்லை, 20 நாள் பயணத்தை எப்படியோ கெஞ்சி கூத்தாடி 10 நாட்களுக்கு அனுமதி வாங்கிவிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக