செவ்வாய், 8 ஜூன், 2010

அறுகம்பை பாலம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பகுதிகளுக்கு முஸ்லிம்களும், முஸ்லிம் பகுதிகளுக்குள் தமிழர்களும் எந்த நேரத்திலும் போய்வரக்கூடிய சூழ்நிலையும் இன ஒற்றுமையும் இன்று வலுப்பெற்றுள்ளதைக் காண முடிகின்றது.கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக உள்ள பாசிக்குடா கடற்கரை, பொத்துவில் அறுகம்பை கடற்கரை போன்ற இடங்கள் யுத்த காலத்தில் வெறிச்சோடிக்கிடந்தன.
இன்று ஜனாதிபதியின் தலைமையில் ஏற்பட்டுள்ள புதிய சூழலில் இக்கடற்கரைகள் மக்களால் நிரம்பி வழிகின்றன.உள்ளூர் சுற்றுலாத்துறையினரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் இக்கடற்கரைகளுக்கு சென்று மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.இங்கு சுற்றுலாத்துறையினரைக் கவரும் வகையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அமைதிச் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து கிழக்கில் கல்வி, சுகாதாரம், வீதி, வாழ்வாதாரம் எனப் பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் முக்கிய பாலங்களான கிண்ணியா பாலம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் ஓட்டமாவடிப் பாலமும் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை உட்பட யுத்தத்தினாலும் சுனாமி அனர்த்தத்தினாலும் சேதமடைந்த பாடசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் புதிய பாடசாலைக் கட்டடங்களும் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.சுனாமி அனர்த்தத்தினாலும் யுத்தத்தினாலும் சேதமடைந்த வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டு சுகாதார சேவைகள் சீர்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக