புதன், 19 மே, 2010

CTR வானொலி செய்திகளும் அதன் பிரச்சாரமும்

கடந்த ஆண்டுகளில் இங்கு இந்த CTR வானொலி சிறந்த செய்திகளை உடனுக்கு உடன் மக்களுக்கு வழங்கியது (தங்கள் செய்திகளை தங்களுக்கு என்ற பாணியில் உருவாக்கி வெளியிட்டது) யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் ஆகியும் என்றும் கூட இவ் வானொலியின் பொய் பிரசாரம் முடிவடையவில்லை அதில் வேலை செய்யும் ஒரு சிலர் இவ் வருடம் முதல் பகுதியில் இலங்கை சென்று அங்கிருந்து A9 பாதையூடாக யாழ் சென்று வந்தனர்

ஆனால் அவர்களில் ஒருவரை  யாழில் சந்தித்த போது இவ்வாறு நான் கேட்டேன்   ஏன் உங்கள் வானொலியில்  பொய் பிரச்சாரம் செய்கின்றீர்கள்  என்று?  எங்கள் தொழில் நிமித்தம் காரணமாக நங்கள் பொய் பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் எமது வானொலி CTRஇல் கூறுவது அனைத்தும் பொய்! அது எலோருக்கும் தெரிந்தது தானே என்றார்.... நானும் சிரித்தபடி ஒ அப்படியா என்றவாறு சென்று விட்டேன்.

இன்றும் அவர்கள் பணி ஓயவில்லை தொடர்ந்து செல்கின்றது, மக்களும் அதை கேட்கின்றனர்.. அந்த வானொலியில் மிக சிறந்த அறிவிப்பாராக  விடுதலை புலிகளின் பழைய சுதந்திர பறவைகள் பெண் போராளி உள்ளார். அவர் வாய் பலம் பொருந்திய ஒரு (சக்தி) வாய்ந்த அறிவிப்பாளர்.

அவர் அறிவிப்பதை பார்த்தல் தான் நேரில் பார்த்ததுபோலவும், தனக்கு தான் எல்லாம் தெரியும் போலவும் கூறுவார் அதையும் இங்கு உள்ள ஒரு பகுதி மக்கள் நம்பிவிடுவர்.

தங்களது வாழ்க்கையில் இனிமேல் தங்கள் வாழ்த்த நாட்டுக்கு போகலாமா? தங்கள் ஊருக்கு கூட போகாலாம என்று நினைப்பது இல்லை. சரி நீங்கள் தான் இப்படி என்றால் ஏன் மக்களையும் ஏமாற்றி வருகின்றீர்கள்.
மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றதீர்கள் உங்கள் செய்திகளுக்கு  இலங்கை அரசாங்கமோ அல்லது அந்த நாட்டு மக்களோ செவி சாய்க்க மாட்டார்கள். வதந்தியையும் புரளியையும் கிளப்பும் ஒரு மக்கள் ஊடகமாக செயல் பட வேண்டாம்.
மக்களே! 
மறுபடியும் நீங்கள் இன்னும் ஒரு ஏமாற்றத்திக்கு துணை போகவேண்டாம். இந்த வானொலிகள் கூறுவது போல தமிழ் பிரதேசங்களில் ஒன்றும் நடக்க இல்லை அங்கு வாழும் மக்கள் தங்களுக்கு என்று ஒரு அச்சம் பயம் பீதி அற்ற வாழ்க்கையை வாழவேண்டும் என்று எதிர் நோக்குகின்றனர்.
வதந்தியையும் பொய் பிரட்டும் கொண்ட வானொலி செய்திகளை
மக்கள் அவையிலிருந்து அகற்றுங்கள்.........
இனியாவது இங்கு உள்ளவர்களையும் அங்கே உள்ளவர்களையும் நிம்மதியாக வாழ விடுங்கள்.....

"மக்கள் ஏக்கம் கண்ணீர் அல்ல நிம்மதி" 
தமிழன் - Tamilarn www.thenee.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக