புதன், 19 மே, 2010

தற்கொலைக் குண்டு மற்றும் சீ4 , ரிஎன்ரி ரக வெடிமருந்துகளை கடத்திவந்த வைத்தியலிங்கம் பத்மநாதன் சிறைத்தண்டனை

கிழக்கு மாகாணத்திலிருந்து கடந்த 10 வருங்களுக்கு முன்னர் கொழும்புக்கு தற்கொலைக் குண்டு மற்றும் சீ4 , ரிஎன்ரி ரக வெடிமருந்துகளை கடத்திவந்த ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதுடன் அவருக்கு மேற்படி இரு அபாயகரமான பொருட்களை கடத்தியமைக்குமாக ஒவ்வொன்றும் 5 வருடங்கள் , மொத்தம் 10 வருடம் சிறைத்தண்டனை கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் சுனில் ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியலிங்கம் பத்மநாதன் எனும் மேற்படி நபர் மட்டக்களப்பு, முனைத்தீவு பிரதேசத்திலிருந்து மேற்படி பொருட்களை 2000 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் கொழும்புக்கு கொண்டுவந்துள்ளமை நிருபிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சார்பாக மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் இன்று பாராளுமன்றில் இருப்பதாகவும் தனது கட்சிக்காரருக்கு சிறை செல்ல நே
ரிட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
Written By ilankainet at Wednesday, May 19, 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக