யாழ் மாவட்ட இணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் ஜனாதிபதியால் நியமனம். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் மஹிந்த சிந்தனையின் கீழ் “எதிர்கால நோக்கு” எனும் திட்டத்திற்கமைய அரசாங்க மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினால்
முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்றிட்டங்களையும் அமுலாக்குதல், வழிநடத்துதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் இணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்தின் மூலம் “மக்கள் சக்தி” அமைப்பினால் முன்னெடுக்கப்படும் பிராந்திய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் என்பனவற்றுடன் “கிராம எழுச்சித்” திட்டத்தின்கீழ் பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளின் அமுலாக்கம், வழிநடத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களும் விளங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக