விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த வருடம் மே மாதம் 19ஆம் திகதியே கொல்லப்பட்டார் என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த வருடம் மே மாதம் 18ஆம் திகதியே பிரபாகரன் கொல்லப்பட்டார் எனும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
போர் வெற்றி குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மே மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்ததை அடுத்தே வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் தான் நடத்தப்படும் விதம் குறித்தும் ஜெனரல் சரத் பொன்சேகா தனது ஏமாற்றத்தை இதன்போது வெளியிட்டார்.
இலங்கை இராணுவம் ஒரு போதும் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை எனவும் அவ்வாறு ஈடுபட்டிருந்தால் அது குறித்து அறியத்தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது காட்சிகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக