தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தேவி சில்வியா (33). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2வது குழந்தைக்கு 19 மாத வயதாகிறது. குழந்தையின் பெயர் ஜெஸிகா பிருத்விராஜ்.
கணவர் மற்றும் குழந்தைகளுடன் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார் சில்வியா. ஆனால் கணவரோ குடும்பத்துடன் நேரத்தை செலவிடாமல் கலிபோர்னியா, நியூயார்க், சிகாகோ என்று அலைந்து கொண்டிருந்தார். இதனால் சில்வியா வீட்டில் குழந்தைகளுடன் தனிமையில் விடப்பட்டார்.
தனிமையை விரும்பாத சில்வியா தனது குழந்தைகளுடன் இந்தியா திரும்ப முடிவு செய்து கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரோ ஏற்கவில்லை. இதனால் வெறுப்படைந்த சில்வியா மனதளவில் பாதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஹட்சன் நதிக்கு வந்த அவர் தனது குழந்தையை ஆற்றில் வீசினார். பின்னும் தானும் குதித்தார்.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தோர் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
மீட்புப் படை போலீஸார் விரைந்து வந்து கடும் குளிரில் வீசப்பட்ட குழந்தையையும், சில்வியாவையும் மீட்டு மன்ஹாட்டனில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தையின் உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடும் குளிரான நீரில் விழுந்ததால் குழந்தையின் நிறம் நீலம் பாரித்து விட்டது.
தனது கணவரை வழிக்குக் கொண்டு வருவற்காகவே இவ்வாறு செய்ததாக சில்வியா கூறியுள்ளார். தனது செயலில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தான் செய்தது தவறு என்று ஒப்புக் கொள்ளாததால், சில்வியா மீது போலீஸார் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யவுள்ளனர்.
பதிவு செய்தது: 18 May 2010 4:48 am
அமெரிக்காவில் வாழும் 90% இந்தியர்கள் மன நோயாளிகள். கார், வீடு, டாலர் வைத்திருக்கும் "பிட்சைகரர்கள்" .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக