தமிமக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனின் பகிரங்க வேண்டுகோள்.
நடந்து முடிந்த தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீண்டும் (22) அல்லது அதற்குக்கூடுதலான ஆசனங்களை தாம் பெறமுடியுமெனவும், முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையிலான ஐ.தே.கட்சியினரும் அதிகளவிலான ஆசனங்களை பெறும்போது அவர்களுடன் இணைந்து அமைச்சர்களுக்கான ஆசனங்களில் இம்முறை அமரமுடியுமென கனவு கண்ட சம்பந்தனினதும் அடியாட்களினதும் நப்பாசை கானல்நீராகியது.
கடந்த (8) ஏப்ரல் எட்டாந் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றியை தமதாக்கிக் கொள்வதற்காக தேர்தல் மேடைகளில் சம்பந்தனும் அவரின் அடியாட்களும் முன்வைத்த கருத்துக்களும், வாய்வீரமான பேச்சுக்களும் தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனவும், உலகம் முழுவதும் வாழ் தமிழ் மக்கள் அனைவரினதும் தலைவன் சம்பந்தனே எனவும் வீரமுழக்கமிட்டமையை ஐந்து (5) நாட்களுக்கிடையில் மறந்துவிட்ட புலியின் கைக்கூலிகள் இன்று ஒற்றுமைபற்றி ஓலமிட ஆரம்பித்தவிட்டனர். அதுமட்டுமன்றி ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசின் கைக்கூலிகள் என முழக்கமிட்ட சந்பந்தன் இன்று தமிழ் கட்சிகளுடனான உறவுபற்றி பேசுவதன் பின்னணி என்ன? வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும்வரை தாம் தேர்தலில் பங்குகொள்ளப்போவதில்லை என அன்று முழக்கமிட்ட சம்பந்தனுக்கு திருமலை மக்கள் இம்முறை அளித்த வாக்குகளின் எண்ணிக்கை எவ்வழவு? அதுமட்டுமன்றி வட மாகாணத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பொய்முகத்துடன் தேர்தலில் களமிறங்கிய புலியின் கைக்கூலிகளுக்கு யாழ், மற்றும் வன்னி மக்கள் இம்முறை கற்பித்துள்ள பாடமென்ன?
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியென பட்டம் சூட்டப்பட்ட சம்பந்தனைவிட ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமான திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மக்களின் மதிப்புக்குரியவரென அம்மக்களால் அங்கீகரிக்கப்பட்டு சம்பந்தனைவிட அதிகப்படியான வாக்குகளால் தெரிவாகியுள்ளமை சம்பந்தனையும், சம்பந்தன் தலைமையிலான மாபியாக்களையும் அச்சநிலைக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையிலேயே கடந்த (2004)ம் ஆண்டுத் தேர்தலின்போது புலியின் வன்முறையாளர்களின் கள்ள வாக்குகளால் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை தமதாக்கிக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று (12) ஆசனங்களை (தேசியப்பட்டியல் தொடர்பான விபரம் வெளியிடாத நிலையில்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்றுள்ளமை அவர்களின் கடந்தகால அரசியல் செயற்பாடுகளுக்கு மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை வெளிக்காட்டுகின்றது.
இதுவிடயம் தவிர இன்றைய ஜனாதிபதியான திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் அரசாங்கம் தொங்கு பாராளுமன்றத்தினை எதிர்நோக்குமெனவும் அதன்மூலம் தமிழ் மக்களை ஏமாற்றும் தமது வாசகங்களான தமிழ் தேசியம், தமிழர் தாயகம், சிங்களப் பேரினவாதம் என்னும் மூலதன வார்த்தைகள்மூலம் தமது வாய்ச்சவாடல்களை அரசாங்கத்திற்கு சவாலாக விடமுடியுமென கற்பனையில் மிதந்த கனவும் கரைந்துவிட்டது. மேற்படி கூட்டத்தினரை ராஜபக்ஸ சாதாரண மனிதர்களுக்கான அந்தஸ்தினை வழங்கவும் இன்று தயாரான நிலையிலில்லை. இலங்கை அரசியல் வரலாற்றில் வட மாகாண மக்கள் இன்று புதிய தீர்ப்பினை வழங்கியதற்கமைய (5) ஆசனங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமதாக்கிக்கொண்டமை அப்பிரதேச தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றமாகும்.ழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக