செவ்வாய், 13 ஏப்ரல், 2010

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள்

திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போரை நிரந்தர மேலுலகிற்கு அனுப்பிய பிரபாகரனிலும் பார்க்க, அதே திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போர்களுக்கு தகுந்த தகுதியை வழங்கும் மகிந்த எவ்வளவோ மேல். அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள் ஒரு சில பணபலமுடைய தமிழர்கள். இதனால் பப்பாமரம் முறிவடையும் என்றுகூட எண்ணாமல் பப்பாவின் உச்சிக்கே போய்விட்டார் அவர் அதனால் அவர் உச்சியே சிதைவடைந்து போய்விட்டது. ஆனால் மகிந்த எத்தனையோ நல்லகாரியத்தை தமிழர்களுக்கும் நாட்டுநலனுக்கும் மேற்கொண்டிருந்த போதிலும் அதனை பாராட்டவோ செய்தியாக வெளியிடவோ அதே தமிழ் மக்கள் விரும்பவேயில்லை.

இதிலிருந்து புரியக்கூடிய பல விடயம் உளதேசியம் தாயகம் தன்னாட்சி என்று கூறும் எவருக்கும் தமிழர்களின் விடிவில் எந்தவித கடப்பாடும் இல்லை என்பதே!!! இப்போதும் அதே 3லட்சம் சிறைக்கதைதான்பல்லாயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டும் அதை வெளிக்காட்டாதுமேலும் மக்கள் மத்தியில் போராட்ட உணர்ச்சியையும், விரோதத்தன்மையினையும் தூண்டி தம்முடைய குடும்பத்தை நடாத்திச் செல்லப்பார்க்கின்றார்கள். கடந்த ஒரு வருடகாலத்தில் போரால் யாரும் மரணிக்கவில்லை, கொழும்பில் தமிழர்களுக்கு முன்போல அடாவடித்தனத்தை இராணுவம் மேற்கொள்ளவில்லை எந்த பிரதேசத்திலும் தமிழர்கள் நடமாடக்கூடியதாக இருக்கின்றது

மேலும் ஒரு முக்கியவிடயம் கடந்த தேர்தலில் எந்த அரசியல் படுகொலைகளும் இடம்பெறவில்லை!!!! இது உலக அதிசயம் இல்லையா???? மேலும் ஏராளம் தமிழ் பிரதிநிதிகள் ஜனநாயகவழியில் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்கள் இது கடந்த முப்பது வருடத்தில் இடம்பெறாத ஒரு விடயமல்லவா??? அதிலும் நாடு முழுதும் தேர்தல் ஒரே நேரத்தில் இடம்பெற்றது என்றால் அது எமக்குக்கிடைத்த விடிவின் அடியில்லாமல் வேறு என்ன!!! இதற்கிடையில் இத்தனை வருடமும் எமது போராட்டத்தின் பெயரில் நாம் இழந்த இழப்புக்களை என்னவென்பது …. இன்றுள்ள நிலைக்காகவா எமது இளம் தலைமுறைகளை மண்ணோடு மண்ணாக்கினோம்எத்தனை முட்டாள்கள் நாம்!!!! இதற்காகவா 22 இளையோரை தீக்கிரையாக்கினோம் எவ்வளவு முட்டாள்கள் அவர்கள்!!! எங்கள் கலாசாரம் எங்கே, விழுமியங்கள் எங்கே, வரலாறு எங்கே, தலைவர்கள் எங்கே

தமிழீழப்போராட்டத்தில் ஈடுபட்டு தம்முயிரை நீத்தோர்களுக்கு மகிந்த ஒரு தகுதிவாய்ந்த தரத்தை கொடுக்க வேண்டும் என்று பலதடவைகள் எனது ஆக்கங்களிலும் அவருக்கு எழுதிய மடலிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். இதனை எந்த அமைச்சரோ எந்த எம்பிக்களோ கோரிக்கையாகக்கூடக் கேட்டதில்லை!!! இதை மகிந்த வழங்கினாலும் நான் ஆச்சரியப்படப்போவதில்லை காரணம் அவருடைய எண்ணம் நாட்டின் ஒற்றுமையே அதற்காக தவறான வழிநடத்தலில் பலியானவர்கள் என்ன செய்வார்கள்!!! என்பது அவருக்கு நன்றாய்த்தெரியும். பொருத்தமான காலத்தில் அதற்கான சந்தர்ப்பத்தில் இதனை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். இல்லாவிட்டால் புலிகள் என்று தெரிந்தும் பலரை வெளியில் நடமாட விட்டுள்ளார் என்றால் அதை என்னவென்பது???

நிச்சயமாக தமிழ் ஈழக்கோரிக்கைக்காக தம்முயிரை ஈந்த அனைத்துத் தமிழ் இளையோருக்கும் ஒரு தேசிய நீதியிலான அஞ்சலிக்கும் மதிப்பிற்கும் உரியவராக்கப்படுவார்கள் என்பது எனது ஆளமான நம்பிக்கை அதிலும் மகிந்தவின் காலத்தில் அது நடக்கும். இது ஆசையல்ல தீர்க்கதரிசனம்.

தமிழர்களுக்கு தமிழ்க்கூட்டமைப்பு மேற்கொள்ளாத விடயத்தை மற்றைய தமிழ் அமைப்புக்கள் மேற்கொள்ளாத விடயத்தை மகிந்த அரசு மேற்கொள்ளும். அதற்கு ஆதாரம் தேர்தலுக்கு முன்னர் மகிந்தவுடன் இணைந்த தமிழ் அமைப்புக்களை தமிழ்த்தலைவர்களை உதார்சீனம் செய்தவர்கள் இப்போது ஏன் அறைகூவல் விடவேண்டும்??? இதை தேர்தலுக்கு முன்னர் விடுத்திருக்கலாமே!!! அப்படி விட்டிருந்தால் தமிழர்கள் மத்தியில் தம்முடைய தனித்துவம் நிலைக்காது போய்விடும் என்ற நச்சாசையாலேயொழிய தேசப்பற்றாலோ தேசியம் தன்னாட்சிக்காகவோ இல்ல!!! ஆனால் இப்போது மகிந்த போடப்போகும் எலும்புத்துண்டுக்காக வாலையை நிமித்துவது போல் காட்டி பின்னால் வாலை ஆட்டுகின்றனர் கூட்டமைப்புக்காரர். இதில் டக்ளஸ் மற்றும் கருணா போன்றோர் எவ்வளவோ மேல் அவர்கள் தலையை ஆட்டும் அளவிற்கே வாலையும் ஆட்டுகின்றனர். இதற்கு எத்தனை நக்கலை அடித்தாலும் அதுதான் உண்மை.

இதில் நக்கலடிக்கும் ஒரு தமிழ் இணையத்தை காட்டவிரும்புகின்றேன். அதாவது, “பொதுத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வருகின்ற 21 ஆம் திகதி தனது புதிய அரசாங்கத்தை உருவாக்குகிறது. புதிய அரசில் பிரதமர் பதவிக்குத் தெரிவாகப் போகின்றவர் யார் என்று பல சர்ச்சைகள் கிளம்பியிருந்தாலும், அப்பதவிக்குப் பல போட்டிகள் நிலவியிருந்தாலும்கூட மீண்டும் முந்தைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவே நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. ரட்ணசிறியை கட்சியிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வார்களாம், வேறு யாரையேனும் அப்பதவிக்கு நியமித்தால் கட்சிக்குள்ளே பேதம் ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளாராம்.

புதிய பாராளுமன்றத்தில் 35-40 உறுப்பினர்கள் மட்டுமே அடங்கவுள்ளனர். இம்முறை பாராளுமன்றத்துக்கு புதுமுகங்களாக உள்நுழைபவர்கள் எவரும் அமைச்சர்களாகவோ பிரதி அமைச்சர்களாகவோ நியமிக்கப்பட மாட்டார்கள். இது மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் பொருந்தும் என்பதும் சுட்டிககாட்டத்தக்கது. அம்பாந்தோட்டையில் போட்டியிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் அனைவரையும்விட நாமலுக்கே அதிக விருப்பு வாக்குகள் கிடைத்தன. ஆனால் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையோ அல்லது குடும்பப் பின்னணியோ அமைச்சரவை நியமனத்தில் செல்வாக்குச் செலுத்தாதென மஹிந்த கூறியுள்ளாராம்.

முன்னாள் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு இம்முறை அப்பதவி கிடைக்காது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதேபோல முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவும் அவ்வமைச்சிலிருந்து வேறு அமைச்சுக்கு மாற்றப்படவுள்ளாராம்.”

இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதுவாகில் மகிந்த குடும்ப ஆட்சி குடும்ப ஆட்சி என்ற கருத்து பொருத்தமற்றது என்பதே! அதை இந்த செய்தியே தமிழர்கள் பாலிருந்து துள்ளல் கொடுக்கும் தளங்களே தெளிவுபடுத்துகின்றது. எனவே மற்றவர்களை குறை சொல்வதில், பழிசொல்வதில் முன்நிற்பதிலும் பார்க்க சிறப்பாகச்செய்யும் விடயங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும். தமிழர்களால் ஒருமுறையேனும் தெரிவு செய்யப்படாத பிரபாகரனை நிர்ப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட தமிழர்கள் ஏன் பெரும்பான்மை தமிழர்களால் இன்னமும் ஏற்றுக்கொண்ட மகிந்தவை ஏற்கக்கூடாது,

எப்படி பெரும்பாண்மைத் தமிழர்கள் மகிந்தவை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ன வினாவை முட்டாள்தனமாக கேட்கவேண்டாம்தமிழர்கள் எவருமே மகிந்த அரசிற்கு வாக்குப்போடவில்லை என்றால் உங்கள் விவாதம் ஓகே! ஆனால் சிவாஜிலிங்கம் என்ற தமிழனிலும் பார்க்க மகிந்த அரசிற்கு வாக்குகள் விழுந்தது அதிகமாக இருக்கும் போது, அது அதிகமா இல்லையா??? தேசியத்தலைவர், தேசியத்தலைவர் என்று கூச்சல் போட்டவர்களே செய்ய முடியாத விடயத்தை இந்த சுவாஜிலிங்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, பிரபாகரனின் தந்தையின் மரணத்தை முன்நின்று நடத்த நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளே வரவில்லைஆனால் அவர் நடத்தினார்அதேபோல் தாயை சிகிட்சைக்கும், வெளிநாடு கொண்டு செல்லவும், முன்னின்றதும் யார்? தொடரும்..
திரு. பிரான்சிஸ் மக்ஸிமின் (அருகன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக