சனி, 21 பிப்ரவரி, 2026

உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள்? புதிய சிக்கலில் திமுக கூட்டணி?

tamil.oneindia.com  : ஸ்டாலினால் புலம்பும் கூட்டணி கட்சிகள்.. மாப்பிள்ளை அவரு தான்.. ஆனால் சட்டை என்னுடையது! பின்னணி
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக உள்பட சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை தனிசின்னத்தில் நிறுத்தாமல் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்த திமுக தலைமை தயாராகி வருகிறது. இது கூட்டணி கட்சிகளை சிக்கலை ஏற்படுத்த உள்ளது. அதாவது திமுகவின் இந்த முடிவால் அந்த கட்சிகளின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்படலாம் என்றால் கூட்டணி கட்சியினர் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

“அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீதம் வரி- அதிபர் டிரம்ப் அறிவிப்பு

 மாலைமலர் : “அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” திறப்பு

kall கலைஞர் செய்திகள் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (21.2.2026) மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெற்ற அரசு விழாவில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் 213 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” மற்றும் திருமங்கலம் - கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவிற்கு மாற்றாக 38 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலம்” ஆகியவற்றை திறந்து வைத்தார்.

திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைப்பு

 minnambalam.com -Pandeeswari Gurusamy : திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இன்று (பிப்ரவரி 21) திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டி உருவாக்கியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ராகுலின் திமுக ஒவ்வாமை? பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்!

 tamil.oneindia.com  பொறுத்துப் பார்த்த திமுக.. அந்த 2 பேரால் பொங்கி எழுந்த ஸ்டாலின்! ராகுல் காந்திக்கு சீக்ரெட் மெசேஜ்?
தமிழக அரசியல் களத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு இப்போது ஒரு நெருப்பு வளையத்திற்குள் சிக்கியிருப்பதாகவே தோன்றுகிறது.. காரணம் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. இழுபறியில் உள்ளது.. இரு கட்சிகளிடையே இணக்கமான போக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.. தேமுதிகவும் கூட்டணிக்குள் வந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் நிலைமை தெரியவில்லை.. என்னதான் நடக்கிறது கூட்டணியில்?
பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான "கிச்சன் கேபினட்" நட்பு இப்போது கசக்கத் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.. கடந்த கால தேர்தல்களில் தொகுதிப் பங்கீட்டின்போது முதல் ஆளாக வந்து கைகுலுக்கும் காங்கிரஸ், இந்த முறை இழுபறியில் நிற்பது அரசியல் நோக்கர்களை புருவம் உயர்த்தச் செய்துள்ளது..

தமிழ்நாடு இன்னொரு ஐரோப்பிய நாடு? புள்ளி விபரங்கள் கூறுவதென்ன?

 Vimalaadhithan Mani : ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள். அப்படித்தான் தமிழ்நாட்டில் திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிட கழக ஆட்சிகளில் கடந்த 50 வருடங்களில் தமிழ்நாடு முன்னேறவே இல்லை என்று ஒரு பச்சை பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது.
பல்துறைகளிலும்  தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி மத்தியில் ஆளும் காவி அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயோக் (NITI Aayog) கொடுத்து இருக்கும் கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள்:
*உயர் கல்வி*
பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.
*கல்வி நிலையங்களின் தரம்*
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,
*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,*

திமுக ஐ டி விங் ( DMK ITWing ) சரியாக இயங்குகிறதா? ஒரு எக்ஸ்ரே பார்வை

Vasugi Lakshmanan  · DMK ITWing இடம் பகிரங்க மன்னிப்பைக் கோருகிறேன்!
சில வாரங்களுக்கு முன்பு திமுக ஐடி விங் முகநூலில்  அபத்தமான பிழைகளோடு அடுத்தடுத்து இரண்டு பதிவுகள் வந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டிருந்தேன்! 
செய்திக்குப் பொருத்தமான ஹேஷ்டேக்ஸ் கூட போடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அதன் தலைமைப் பொறுப்பில் உள்ள (நியூஸ் 18இல் என்னுடன் பணியாற்றிய) ஒருவருக்கு டிஜிட்டல் மீடியா பற்றி தெரியாததால்தான் அப்படியெல்லாம் நேர்வதாகக் கருதி அந்தக் குழுவுக்கு நான் வேண்டுமானால் பயிற்சியளிக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தேன். 
அனைத்துக் கட்சி சமூக ஊடகங்களையும் பின் தொடரும் நான், //என்னவோ மணிப்பூரில் வாழ்வது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தவெக நாளொன்றுக்கு நான்கு செய்திக் கதைகளை திரித்து உருவாக்கிப் பகிரும் நிலையில்,  திமுகவின் whatsapp சேனலில் சில நாட்கள் வெறும் திருக்குறள் பதிவதோடு நின்று விடுகிறார்கள் என்றும் குறை கூறியிருந்தேன்!

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

முதல்வர் ஸ்டாலினின் 4 பேர் டீம்! எதிர்கட்சிகளளை காயவிட்டு கணக்குகளை புரட்டி போட்ட அந்த விடயங்கள்


 tamil.oneindia.com  ஸ்டாலினின் 4 பேர் டீம்.. மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த.. அந்த யோசனை வந்தது எப்படி?
தமிழக அரசியலில் அடுத்த இரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது வேகத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மக்களை கவரும் பல்வேறு நிதிச் சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது.
முக்கியமாக தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழகத்தின் மிக முக்கியமான வாக்கு வங்கியான பெண் வாக்காளர்களின் மனங்களை வெல்லும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய அதிரடியைத் தொடங்கியுள்ளார்.
ஸ்டாலினின் அதிரடி அறிவிப்புகள்
கடந்த மாதம் பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.

காங்-ஐ கதறவிட்ட ஸ்டாலின்! கதர் கட்சியில் வெடித்த மோதல்! கப்சிப் ஆன ’கை’ - Election Exclusive: ஓவர் வாய் உடம்புக்கு ஆகாது

 tamil.oneindia.com -Rajkumar R  :  சென்னை: பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம். அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது 
தேமுதிக. திமுக கூட்டணியில் தேமுதிக வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட இந்த தேர்தலில் குறைவாக இடங்கள் ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 
சில காங்., நிர்வாகிகள் திமுகவுக்கு எதிராக பேசியதால்தான் கோபப்பட்டு ஸ்டாலின் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்து வந்து விட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்குள் மோதல் எழுந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி அமைப்புகள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக தேமுதிக எந்த அணியில் சேரும் என்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக இருந்தது.

ஓ .பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு - பொறுமையாக இருங்க நல்லதே நடக்கும் உறுதியளித்த ஸ்டாலின்

Kulitalai Mano  :  ஓ பன்னீர் நம்ம முதல்லரை சந்திக்கிறார் 
இணைய விருப்பம் தெரிவிக்கிறார் 
முதல்வர் சொல்கிறார் 
அவசரப்படாதீங்க ஓபி 
நீங்க முதல்வரா இருந்திருக்கீங்க 
கட்சியில முக்கியமான இடத்துல இருந்திருக்கீங்க 
பொறுமையா இருங்க நல்லதே நடக்கும் என்கிறார் 
நாகரிகத்தின் உருவம் முதத்துவேல் கலைஞர் ஸ்டாலின்

மின்னம்பலம் -  Kavi : முதல்வர் ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவருடன் சென்ற ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக பிரிந்து மாற்றுக் கட்சியில் இணைந்துவிட்டனர்.
இந்தசூழலில், யாருடன் செல்வது என தொடர்ந்து ஓபிஎஸ் ஆலோசித்து வந்தார்.

ஆண்டாள் அழகர் கல்லூரி முதல் அண்ணா அறிவாலயம் வரை..

 tamil.oneindia : ஆண்டாள் அழகர் கல்லூரி முதல் அண்ணா அறிவாலயம் வரை.. திமுக - தேமுதிக இடையில் உறவு உருவானது இப்படிதான்!
21 ஆண்டு கால தேமுதிக அரசியல் வரலாற்றில், முதல்முறையாக திமுக உடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் இந்த முடிவுக்கு பின் பல்வேறு சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
திமுக கூட்டணியில் முதல்முறையாக தேமுதிக இணைந்துள்ளது. 2011 தொடங்கி 2019 வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக தரப்பில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கொண்டே இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின் போது விஜயகாந்த் கண்ணீர்விட்டு அழுத வீடியோ திமுகவினரையும் கலங்க செய்தது.
தேமுதிக கூட்டணி
இதனை மனதில் வைத்து தான் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது ஸ்டாலின் கூட்டணிக்கு அழைத்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் செய்த சில செயல்கள் திமுகவை கொந்தளிக்க வைத்தது. இதன்பின் விஜயகாந்த் மறைவின் போது யாரும் கேட்காமலேயே அவருக்கு அரசு மரியாதை வழங்கி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த திமுக பணிகளை செய்து கொடுத்தது.

தேமுதிக 90% மா.செக்கள் திமுக-வுடன் கூட்டணிக்கே ஆதரவாக உள்ளனர்!

பிரேமலதா - ஸ்டாலின்

 
vikatan.com  :   தலைமையகத்தில் வாக்குப்பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய போதே 90% மா.செக்கள் திமுக-வுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றே ஓட்டு போட்டோம். - தேமுதிக நிர்வாகிகள்
அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள் வரவேற்று 'அன்புச் சகோதரி' என பாசமழை பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 
தேமுதிக என்.டி.ஏவுக்குள் வருமென்ற எதிர்பார்ப்பில் இருந்த பாஜக 'கேப்டனின் ஆன்மா மன்னிக்குமா?' என பொங்கிக் கொண்டிருக்கிறது. தேமுதிக கட்சிக்காரர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய சில மா.செக்களிடம் தொடர்புகொண்டு பேசினோம்.
'10 வருசமா அமையாத கூட்டணி இப்போ அமைஞ்சிருக்கு' என குஷியாகப் பேசத் தொடங்கினார், தென் மாவட்ட நிர்வாகி ஒருவர். 'எடப்பாடியும் பாஜக-வும் எங்களுக்கு துரோகம் மட்டுமேதான் பண்ணியிருக்காங்க. 2011 இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே கேப்டன்தான் காரணமாக இருந்தார். ஆனால், ஜெயலலிதா எங்களின் கட்சியை கபளீகரம் செய்தார்.

ஸ்டாலினிடம் பேசிய சோனியா.. அறிவாலயத்தில் பிரேமலதா..

 மின்னம்பலம் - Mathi  :  , ”க்ளைமாக்ஸ் காட்சிகள் அரங்கேறுகின்றன” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது 
ஏகப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சிகளா?
ம்ம்..அப்படியும் சொல்லலாம்.. இன்னைக்கு அண்ணா அறிவாலயத்துல ஸ்டாலினை பிரேமலதா சந்திச்சு திமுக கூட்டணியில தேமுதிக இடம் பெறுவதை உறுதி செஞ்சு பிரஸ் மீட்டுல அறிவிச்சதுதான் ஹாட் டாபிக்.
திமுக கூட்டணியில சேர்ந்துட்டோம்னு அறிவிச்ச பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்துக்கு போய் விஜயகாந்துக்கு ராசியான நம்பரான 5-ஐ குறிக்கும் வகையில அங்க கட்டியிருந்த பெரிய மணியை 5 டைம் அடிச்சு மரியாதை செலுத்திட்டு அங்கேயும் பிரஸ் மீட் கொடுத்துட்டு, ‘தொகுதி விவகாரங்களை எல்லாம் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பாரு’ன்னு சொல்லி இருக்காங்க.
சட்டப்பேரவையில சிஎம் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன் காரசார வாக்குவாதம்னு அனல் பறந்தாலும் திமுக அமைச்சர்கள்கிட்ட, எம்.எல்.ஏக்கள்கிட்ட மெஜாரிட்டியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவலையாக கேட்டது எல்லாம், “தேமுதிக வந்துருச்சு.. எங்களை கழற்றிவிடுறதுன்னு முடிவு செஞ்சுட்டீங்களா”?” என்கிற கேள்வியைத்தான்.

இலங்கை எம்பிக்களுக்கு கொடுப்பனவு தோராயமாக ஐந்தரை லட்சம் ரூபா....

 Kalmunaitoday  :  MP ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை கொடுப்பனவுகள் 
பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று அதனை - நாடாளுமன்றில் தெரியப்படுத்தியிருக்கிறார்.
கணக்கை பார்போம் வாருங்கள்;
👉சம்பளம் - 54,285/=
👉பொழுது போக்கு கொடுப்பனவு 1000/=
👉சாரதிக் கொடுப்பனவு - 3500/= (அல்லது சாரதி வழங்கப்படுவார்).
👉தொலைபேசிக் கொடுப்பனவு - 50,000/=
👉போக்குவரத்து - 15,000/=
👉அலுவலக கொடுப்பனவு - 100,000/=
👉சபை அமர்வு ஒன்றுக்கு - 2500/=
👉அமர்வு இல்லாத நாளில் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டால் - 2500/=
👉எரிபொருள் கொடுப்பனவு - தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவருக்கு 419.76 லீட்டர் டீசல் கிடைக்கிறது.

வியாழன், 19 பிப்ரவரி, 2026

திமுக கூட்டணியில் தேமுதிக - ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு

hindutamil.in  அனலி : சென்னை: வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.19) காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டது.

வாச்சாத்தி: தமிழ்நாட்டை உலுக்கிய வன்கொடுமை வழக்கு; நீதிபதி நேரில் ஆய்வு - நடந்தது என்ன?

vikatan :ச.பிரசாந்த், க .தனசேகரன்  :  
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில், 1992, தமிழக வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையால், பழங்குடியின மக்கள்மீது நடத்தப்பட்ட வன்கொடுமை, தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. ‘வீரப்பனுக்கு வாச்சாத்தி மக்கள் உதவுகின்றனர். சந்தன மரக்கட்டைகளைக் கடத்துகின்றனர்,’ எனக் கூறிய வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் 1992, ஜூன் 20-ம் தேதி வாச்சாத்தி கிராமத்தை முற்றிலுமாகச் சுற்றிவளைத்து, வன்முறையைக் கட்டவிழ்த்தனர்.
வழக்கு தொடர்ந்த மக்கள்!
‘‘தங்கள் வீடுகளை வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் சூறையாடினர், குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், 13 வயது சிறுமி உட்பட, 18 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். சந்தன மரங்கள் கடத்தியதாகப் பொய் வழக்கு பதிந்தனர்’’ எனக் கூறி, வாச்சாத்தி கிராம மக்கள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மா.கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து வழக்கு பதிவுசெய்திருந்தனர்.

18.02.1992 - கும்பகோணம் மகாமக நிகழ்வில் உயிரிழந்த மக்களுக்கு நினைவஞ்சலி

May be an image of text that says "மறைக்கப்படும் சில திடுக்கிடும் உண்மைகள்! ஜனியர் விகடன் மகாமகம் ஆரம்பம்.. முடிவி படங்களுடண் क சிப்போசட் ஸ்பெஷல் வடங்களுடன் ตั่ง"

 Giri Sundar :   தமிழ்நாட்டை  ஆண்டுவிட்டுப்போன அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின்  மூடநம்பிக்கையான செயலுக்காய், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை..மனித உயிர்களை படுகொலை செய்த வரலாற்று துக்கத்தை..கருப்பு நாளைப்பற்றி பேசியே ஆகவேண்டும் இன்று.
18.02.1992. கால் நூற்றாண்டுக்கு முன், இதே தேதியில்..
கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா.
கோவிலின் குளத்தில் நீராடினால் பாவங்கள் விலகுமென்று திரண்டுவந்த மக்களுக்கு..தங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதுதான் இறுதி நாளென்பது தெரியாது.
ராஜீவ் படுகொலை தந்த பரிசால் ..முதன்முறையாக ஜெயலலிதா  முதல்வராகி இருந்த காலகட்டம்.
30 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடி நீராடி செல்கிற ஒரு இடத்தில், முதல்வராக இருப்பவர் கலந்து கொண்டால், மக்களுக்கு என்னென்ன அசௌகர்யங்களையும், ஆபத்துகளையும் அது ஏற்படுத்தும் என ஆராயாமல்.. கணக்கில் கொள்ளாமல்..

முடிவெடுத்த ஸ்டாலின்... தலையிட்ட கனிமொழி... திமுக-காங்கிரஸ் கூட்டணி?

 Krithika Tharan :   தூக்கம் வரல.
இன்பாக்சில் ஒரு நட்பு, “ஏன் நாளை துணை முதல்வர் கையால் விருது”ன்னு பரபரன்னு இருக்கிங்களான்னு. இல்லை, 
தமிழ்நாட்டைச் சுற்றி நடக்கும் யூகங்கள் கவலை தருது. என்னதான் தைரியமா பேசினாலும் அடி ஆழத்தில் ஒரு கவலை.
வெளியில் லாபி செய்யும் பலர் எப்படி நம்ப வச்சுருக்காங்க எனில், 
திமுக மிகுந்த பவரில் உள்ளது. அவர்களை அசைக்க முடியாது. இங்கிருந்து பிஜேபியை காலி செய்யணும்னா நம்பர் டூ இடத்துக்கு வரணும். 
அப்ப தவெகுடன் கூட்டணி நல்லது என்று தலையை கழுவி வச்சுருக்காங்க. 
இதை ஒரு சமூக ஆர்வலரே சந்தோஷமா பெங்களூரில் என்னிடம் பகிர, அதிர்ச்சி ஆனேன்.

காங்கிரஸ் திமுக தொண்டர்கள் பிரிந்து விட்டனர் பாஜகவின் தந்திரம் பலித்து விட்டது

 ராதா மனோகர் : முழு இந்தியாவுமே ராகுலை இந்திய பிரதமராக ஏற்றுக்கொள்ள தயங்கிய போது,
ராகுல் காந்திதான் நமது பிரதமர் வேட்பாளர் என்று ஓங்கி குரல் கொடுத்து தூக்கி வைத்தவர் 
முதல்வர் ஸ்டாலின். 
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பின்புதான் அகில இந்திய ரீதியில் திரு ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு உரியவர்தான் என்ற கருத்து உறுதியானது.
அதுவரை எதிர்க்கட்சிகளின் முகாமில் எல்லோராலும் ஏற்று கொள்ளகூடியாய் பிரதமர் என்று ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை.
மம்தா பானர்ஜி போன்ற பலரின் பெயர்கள் அடிபட்டாலும் ராகுல் பெயரை ஸ்டாலின் முன்மொழிந்த பின்பு எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கட்சி பேதங்களை கடந்து முழுத்தமிழ்நாடும் இதை வரவேற்றது என்றால் அது மிகையில்லை.
அந்த நம்பிக்கையை அந்த அங்கீகாரத்தை இவ்வளவு விரைவில் திரு ராகுல் காந்தி இழப்பாரா என்பது இந்த நிமிடம் வரை பதில் இல்லாத வெறும் கேள்வியாகவே நீடிக்கிறது 
இந்த நீண்ட மௌனம்  .. திரு ராகுல் மீது தமிழர்கள் வைத்த நம்பிக்கையை  நிதானமாக ஆனால் நிச்சயமாக  தகர்க்கிறது.
ஏறக்குறைய இதே போன்றதொரு நிலைதான் பிகார் சட்டமன்ற தேர்தலிலும் நடந்தது.

விஜயுடன் காங்கிரஸ் இணைகிறதா? கூட்டணியில் திமுகவுக்கு ஆபத்து?குருமூர்த்தி பரபரப்பு பேச்சு!

 tamil.samayam.com  :தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
இந்த சூழலில், கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் அதிகார பகிர்வு மற்றும் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் குரல் எழுப்பி உள்ளது.

புதன், 18 பிப்ரவரி, 2026

இளையராஜா உரிமை கோர முடியாத 134 படங்களின் பாடல்கள் - அன்னக்கிளியே சொந்தமில்லை1

hirunews: இளையராஜா உரிமை கோர முடியாத பிரபல பாடல்களின் பட்டியல்
'சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒலிப்பதிவுகள் மற்றும் இசை படைப்புகளை பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது' என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடை விதித்தது.
இளையராஜாவின் இசையில் வெளியான 134 படங்களுக்கு இது பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள பிரபல 15 பாடல்கள்
1. செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே
2. என் கண்மணி உன் காதலி
3. கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ
4. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
5. ஆகாய கங்கை... பொன்தேன் மலர் சோலை
6. மலர்களில் ஆடும் இளமை புதுமையே

அக்கா மானமே போச்சு, அவனை சும்மா விட்றாதே! சேலம் ஆசிரியையின் 4 பக்க ஆங்கில லட்டரில் உருக்கமான ரகசியம்

tamil.oneindia.com : சேலம்: சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை சண்முகப்பிரியா, தனது முன்னாள் காதலன் கௌதமின் தொடர் மிரட்டலால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
இந்நிலையில், சண்முகப்பிரியா தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்துள்ள கடிதம், அவரது குடும்பத்தையே உலுக்கி போட்டுள்ளது..
சேலத்தை சேர்ந்த 22 வயது சண்முகப்பிரியா, கல்லூரியில் படிக்கும்போது கௌதம் என்பரை காதலித்துள்ளார்.. ஆனால் கௌதமின் தவறான நடத்தையினால் சண்முகப்பிரியா முறித்துக் கொண்டுள்ளார்.

100 கோடிகளுக்கு எங்கே போவோம்? அமைச்சர்கள் அலறல்

 tamil.asianetnews.com  : ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி... ஸ்டாலின் பிரித்த ஏ-பி-சி கேட்டகிரி... அலறி ஓடும் அமைச்சர்கள்..!
அமைச்சர்களுக்கு ஏகத்துக்கும் வலுவான அசைன்மென்ட்கள் கொடுக்கப்பட, அமைச்சர்களோ அலறி அடித்து ஓடுவதாக வரும் தகவல்தான் அறிவாலயத்தில் உச்சம் எடுத்திருக்கும் பட்டுவாடா பஞ்சாயத்து.-  திமுகவின் வைட்டமின் அரசியல்
அமைச்சர்களுக்கு அசைன்மென்ட்
அதனால்தான் இந்த தேர்தல் செலவுகளுக்கான அமைச்சர்களை முழுமூச்சாக களத்தில் இறக்கும் பிடிப்புக்கு வந்திருக்கிறது தலைமை. வரக்கூடிய தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற மிக நேர்த்தியாக செலவு செய்தால் ரூ.8 கோடிகள் வரை தேவைப்படும் என்றும் 30 சதவிகித வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தால் 10 கோடி தேவை என்றும் தலைமை கணக்கிட்டு இருக்கிறது. அதற்கு மேல் அவரவர் தகுதிக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். ஆனால், அமைச்சர்கள் தரப்பிலும் தங்களின் சொந்த வெற்றிக்காக ஒரு தொகுதிக்கு 20 கோடிகள் வரை தாராளமாக செலவு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதி? ஸ்டாலினின் வியூகம் என்ன? 4 நாளில் பேச்சை தொடங்கும் குழு

tamil.oneindia.com  -Nantha Kumar R  :  சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் ஒரு மணிநேரம் வரை நடந்த ஆலோசனையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுக காய்களை நகர்த்தி வருகிறது. திமுக தனது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் ரத்து? மோடி பேட்டியில் அதிர்ச்சி அறிவிப்பு!

 tamil.oneindia.com - Vigneshkumar  :  என்டிஏ ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் ரத்து? மோடி சொன்ன வார்த்தை
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது மகளிர் இலவசமாகப் பேருந்துகளில் பயணிக்க விடியல் பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடி பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத்திற்கு எதிராகப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் அதிமுக- பாஜக வென்றால் விடியல் பயணம் நிறுத்தப்படும் என்றும் தகவல் பரவி வருகிறது.

திமுக- காங்கிரஸ் உறவு முறிந்தால் என்ன நடக்கும்? ’துக்ளக்’ குருமூர்த்தியின் ஆரூடம்!

 மின்னம்பலம் - Mathi  :  திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ’துக்ளக்’ எஸ். குருமூர்த்தி தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
குருமூர்த்தி தமது எக்ஸ் பக்கத்தில்,
    திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவிர்க்க முடியாதபடி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் இருந்து திமுக வெளியேற்றப்படும்.
    ஆனால் விஜய்யின் தவெக வெற்றி பெறாது; பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.
    டெல்லியில் மோடிக்கு எதிராக இருந்த மிகவும் நம்பகமான கூட்டாளியை (திமுக) ராகுல் காந்தி இழந்து விடுவார்.
    காங்கிரஸ் எதிரியாக மாறினால், ராகுலை ஆதரித்து நின்ற திமுகவின் நிலைப்பாடு முட்டாள்தனமானதாகி விடும்.
    டெல்லியில் காங்கிரஸுக்கு திமுக தேவை; தமிழ்நாட்டில் திமுகவுக்கு காங்கிரஸ் தேவை.

திங்கள், 16 பிப்ரவரி, 2026

ஆதங்கத்தை கொட்டிய ப.சி.. அமைதியான சோனியா- கார்கே.. பற்ற வைக்கும் ராகுல்- பிரியங்கா..

DT Congress மின்னம்பலம் - மதி : வைஃபை ஆன் செய்ததும், ”எல்லா டீமுமே பைனலுக்குள் நுழைந்துவிட்டன” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா டி20 ஜூரம் இன்னும் போகலையே..
நமக்கு என்னய்யா டி20 ஜூரம்.. எலக்‌ஷன் தேதி அறிவிக்க போறாங்க.. கூட்டணிகளை எல்லாம் பைனல் செய்யுற நேரம் வந்துருச்சுன்னு சொல்றேன்…
ஆனா நடக்குறதை எல்லாம் பார்த்தா அப்படியா தெரியுதுய்யா?
புரியது.. திமுக கூட்டணியில காங்கிரஸ் கட்சியோட மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து பேசிகிட்டு இருக்காங்கன்னுதானே சொல்றீரு..

காங்கிரஸ் மீண்டும் திமுகவின் முதுகில் குத்தி விட்டது? ஏமாற்றி விட்டார் ராகுல்?

 tamil.oneindia.com  - Shyamsundar :  மம்தா, கெஜ்ரிவாலை எதிர்த்து.. ராகுலுக்காக நின்ற ஸ்டாலின்.. பதிலுக்கு சீண்டி பார்க்கும் காங்கிரஸ்!
சென்னை: கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையேயான அரசியல் நட்பு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அஸ்திவாரமாக இருந்து வருகிறது. 2019 மற்றும் 2024 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களிலும், அகில இந்திய அளவில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த முதல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்கத் தயங்கியபோதும், "ராகுல் தான் என் சகோதரர்" என்று கூறி ஸ்டாலின் உறுதியாக நின்றார். ஆனால், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த "சகோதர பாசம்" கடும் சோதனையைச் சந்தித்து வருகிறது.

ராகுல்காந்தியின் மவுனம் - தமிழ்நாட்டுக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் ஆகிவிடுவார்?

 Giri Sundar  :  தமிழ்நாட்டுக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் ராகுல்???
2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்சின் அப்போதைய மாநிலதலைவர் கிருஷ்ணசாமி, ஆரணி தொகுதியில் போட்டியிட்டார். களநிலவரம் குறித்து சர்வே எடுத்தோம், செஞ்சிகோட்டையில் இருந்து 4 கி.மீ தூரத்தில் ஒருகிராமத்தில் ஒரு 45 வயது பெண்மணியிடம் பேசியபோது, அவருக்கு தெரிந்தது இரண்டு சின்னம் தான் ஒன்று உதயசூரியன், மற்றொன்று இரட்டை இலை. காங்கிரஸ் பத்தி தெரிந்ததே தவிர அதன் சின்னம் கூட தெரியவில்லை. சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட கட்சி, சுதந்திரத்துக்கு பின்பு 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்த கட்சி, அந்த தேர்தலின்போது ஒன்றியத்தில் ஆளும்கட்சியாக இருந்த கட்சியின் சின்னம் குறித்து தெரியவில்லை. எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. பல கிராமங்களில் பயணம் செய்தபோது காங்கிரஸ் கட்சின் ஒன்று இருக்கான்னு கேட்டவர்கள் பலர். 
இத்தனைக்கும் அதே தொகுதியில் ஏற்கனவே ஒருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுயிருந்தார் காங்கிரஸ் கிருஷ்ணசாமி.

சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல! அது ஒரு coding மட்டுமே! ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு!

 ராதா மனோகர் : சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட  ஒரு இரகசிய குறியீடு அது ஒரு coding மட்டுமே!
சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல! அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!
ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்:
இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து., ‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என.ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.!
அதில கூறியிருப்பதாவது :எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை..
இனமே இல்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள், ஜ,ப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.
அதுபோல் ,தமிழர் தமிழையும் , ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.
அப்படி சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?.
இரண்டாவதாக , எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால்தான் மொழியாகும்! .

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

நெடுந்தீவில் இனி மக்கள் வாழ மாட்டார்களா? வேறு இடங்களுக்கு குடிபெயர்வார்களா?

 Thapes Vlogger is at Delft Island நெடுந்தீவு. : Jaffna, Sri Lanka
வருங்காலங்களில் நெடுந்தீவில் மக்கள் வாழ்வார்களா..??
நெடுந்தீவில் வருங்காலத்தில் மக்கள் வாழமுடியாமல் வேறு இடங்களுக்கு குடிபெயரலாம்…
எனது காணொளிகளில் நெடுந்தீவின் சுற்றுலா தொடர்பான ஒரு பக்கத்தை மட்டுமே காட்டினேன்..
ஆனால் அங்கு வாழும் மக்களின் நிலை என்ன..??
யாழின் பெருநிலப்பரப்போடு ஒப்பிடும் பொழுது அன்றாட வாழ்க்கை மிகக் கடினமானது..
1970-80 களில் இந்த தீவில் 20-25ஆயிரம் அளவிலான மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது இங்கு வாழ்பவர்கள் வெறும் 3500 அளவிலான மக்களே..

மீண்டும் உடையும் காங்.,? TMC 2.0? மூப்பனாரும்.. ப.சிதம்பரமும் - வரலாறு திரும்புகிறது?

 tamil.oneindia.com  -Rajkumar R :  சென்னை: தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி சேர இருப்பதாக சமீப காலமாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உலாவி வருகின்றன. 
ஆனால் திமுகவுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என வலியுறுத்தி வரும் முக்கிய தலைவர்களும் எம்எல்ஏக்களும் அதிருப்தியில் இருப்பதாகவும், 
புதிய கட்சியை தொடங்கலாமா என்ற திட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக அரசியலில் இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து புதிய அணிகள் உருவாவது ஒன்றும் புதிது அல்ல. 
1996ல் ஜிகே மூப்பனாரும், 2001ல் ப.சிதம்பரமும் காங்கிரஸிலிருந்து புதிய கட்சிகளை ஆரம்பித்து மீண்டும் இணைந்து இருக்கின்றனர். இதனால் 20260 டிஎம்சி 2.0 உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

'ஆட்சியில் பங்கும் அதிக தொகுதிகளும் வேண்டும்' - மதுரை காங். கூட்டத்தில் அதிரடி தீர்மானம்

 hindutamil.in - கி.மகாராஜன் :  மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கும் அதிக தொகுதிகளும் வழங்க வேண்டும் என மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும், உள்ளாட்சி இடங்களில் 30 சதவீத பங்கு வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் கோரிக்கையாகும். அதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய தலைவர் கார்கேவை கேட்டுக்கொள்கிறோம்.

ஊரை அடிச்சு அம்பானிக்கும் அதானிக்கும் கொடுக்கலாம் - மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பதுதான் தப்பு?

 M. S Rajagopal  :   என்ன அநியாயம் சார் ...யார் வீட்டு பணம் இப்படி வாரி விடுறாங்க? 
5,000 எதுக்கு வந்து ஒருத்தருடைய அக்கவுண்ட்ல போடணும் ! 
அதுவும் ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு ?  
ஏற்கனவே 9 லட்சம் கடன்.... இதுல இன்னும் நிறைய  வாரி விடுறாங்க...  
இதுக்கெல்லாம் என்ன காரணம் நினைக்கிறீங்க ? 
ஒண்ணு ஜெயிக்கணும்..  ஜெயிச்சு வந்தா நாம சம்பாதிக்கலாம் ... தோற்றுப் போனா வர்றவன் பாத்துக்கட்டும்.. அதானே !
நாமெல்லாம் உண்மையிலேயே இதையெல்லாம் எதுத்து கேட்கணும்  சார் !
நான் : "இப்ப எண்ணூர் துறைமுகம் இருக்குல்ல.. அதை லீசுக்கு விட்டால் என்ன மதிப்பு வரும் ?  அதானிக்கு எவ்வளவு ரூபாய்க்கு கொடுத்திருக்காங்க? பக்கத்தில் 300 ஏக்கர் நிலம்  99 வருஷம் லீசுக்கு கொடுத்திருக்காங்க !

தமிழன் டிவி 23 ஆண்டுகள் - ஒரு தலைமுறையின் நினைவுகளும், ஆரம்ப கனவுகளும் சேர்ந்த கால அளவு..!

May be an image of one or more people and text that says "pcAaR CET தமிழன் ன் 24 ஆம் அ ஆண்டில் ண்"

 Hemavandana  :   தமிழன் டிவி 24ம் ஆண்டில் நுழைகிறது..!
23 ஆண்டுகள் என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல.. அது ஒரு தலைமுறையின் நினைவுகளும், பலரின் ஆரம்ப கனவுகளும் சேர்ந்த கால அளவு..!
​ஊடகத் துறையில் ஒரு நிறுவனம் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமானதல்ல...!
​இந்த நெடிய பயணத்தின் தொடக்கப் புள்ளியில், 24 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை, மறைந்த தோழர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்கள் முதன்மையானவராக இருந்து இதனைத் தோற்றுவித்தார் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும்..!
ஆரம்ப காலத்தில் தோழர் திருமாவளவன் போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் வருகையும், உரையாடல்களும் இந்த மேடைக்கு ஒரு கருத்தியல் பரிமாணத்தை உருவாக்கி, அதன் அடித்தளத்தை வலுப்படுத்தியதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டி உள்ளது..!!

இசையமைப்பாளர் சலீல் சவுத்திரி வங்கத்தில் இருந்து வந்த இசைப்புயல்

 ராதா மனோகர் : இசையமைப்பாளர் சலீல் சௌத்திரி இசையில் காலத்தை வென்ற பெங்காலி பாடல் இது.
இதை ஹிந்தியிலும் சலீல் சவுத்திரி அவர்களே இசையமைத்துள்ளார். 
பலருக்கு இது பெங்காலி பாடல் என்று கூட தெரியாது . அந்த அளவுக்கு இது ஹிந்தியில் பட்டிதொட்டி எல்லாம் ஊடுருவிய பாட்டு 
ஒரு காதல் பிரிவு சோகத்தை இந்த பாடலில் அப்படியே வாழ்ந்து காட்டி உள்ளார் சலீல் சவுத்திரி அவர்கள்.
இந்துஸ்தானி பைரவ் ராகத்தில் அமைந்த பாடல் இது 
நாற்பதுகளில் வங்காளத்தில் நிலவிய கொடுமையான பஞ்சத்தில் வாழ்ந்து அதில் இருந்து  தப்பி பிழைத்த ஒரு மகான் இவர்.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை!

nnambalam.com : திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் 2023ல் நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவியையும், பாஜக நிர்வாகி குஷ்புவையும் இழிவாக பேசியிருந்தார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.