tamil.oneindia.com -Halley Karthik : லண்டன்: ஒரு காலத்தில் இந்தியாவில் பெண் சிசுக்கொலை மற்றும், பெண் சிசு கருக்கலைப்பு அதிக அளவில் இருந்தது. ஆனால், கல்வியறிவு பரவலாக்கப்பட்ட பின்னர், இந்த பிரச்சனை குறைந்தது. கல்வியறிவு காரணமாக பெண் சிசு கருக்கலைப்பு குறைந்திருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கையில், நன்கு படித்து இங்கிலாந்தில் குடியேறிய இந்தியர்கள்.. ஆண் குழந்தைகளுக்காக.. பெண் சிசுக்களை கருவில் கலைப்பது அதிகரித்து வருவதாக தெரிய வந்திருக்கிறது.
பிரிட்டன் செய்தி ஊடகமான, 'டெய்லி மெயில்' இது குறித்து, ஆய்வு செய்து பிரத்யேக தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி பெற்றோர்களிடையே ஆண் குழந்தைக்கான தேவை அதிகமாக இருப்பதால்.. பெண் சிசு கருக்கலைப்பு அதிகரித்து வருவது தெரிய வந்திருக்கிறது.
சனி, 24 ஜனவரி, 2026
பெண் சிசுக்கொலை: பிரிட்டனில் வீசும் கள்ளிப்பால் வாடை! அசிங்கப்படும் இந்தியர்கள்! இப்படியா பண்றது?
15 தொகுதிகள் கேட்ட கமல்ஹாசன்! 3 தொகுதிகள்தான் தரமுடியும் திமுக தரப்பு
![]() |
தமிழ் செய்திகள் : கோவையை மொத்தமாக பேரம் பேசிய கமல்.. ஒரே போடாய் போட்ட ஸ்டாலின்!!
8 வாக்கு வங்கி இல்லாத நிலையிலும் கடந்த தேர்தல்களில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் பயன்படுத்திய 'டார்ச் லைட்' சின்னம் மீண்டும் அந்த கட்சிக்கே கிடைத்துள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் 15 தொகுதிகளை கேட்டு பட்டியலை வழங்கியிருக்கிறார் கமலஹாசன். அதில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தலைமையோ கமலஹாசனுக்கு மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மயிலாடுதுறை துர்கா ஸ்டாலின் போட்டி?
திமுக கூட்டணியில் யார் யார் எந்த தொகுதியில் போட்டி என்று சமூக ஊடகங்களில் சில ரசமான கருத்துக்கள் அல்லது செய்திகள் உலா வருகிறது.
இவற்றில் சில செய்திகள் உண்மையாக கூட இருக்கலாம்.
அல்லது சில காரணங்களுக்காக தொடர்பு உள்ளவர்களே மெதுவாக லீக் செய்து பார்க்கும் செய்திகளாக கூட இருக்கலாம்.
தேர்தல் ஏற்பாடுகள் பெருமளவு தொடங்கி விட்டதால் இனி எந்த செய்தியும் எந்த பதிவும் இலகுவில் கடந்து போக முடியாது அல்லவா?
அதே சமயம் மிக கடுமையாக நம்பவும் முடியாது.
Uma Pa Se : MK Stalin - Kolathur
EPS- Edappadi
Udhayanidhi-Chepauk/ Thivaroor
Annamalai- ?
Vijay - ?
OPS- ?
சீமான்-?
நயினார் நாகேந்திரன்- சாத்தூர்
?- தூத்துக்குடி
?- அரவக்குறிச்சி
?- கோயம்புத்தூர் தெற்கு
?- எழும்பூர்
?- ஆலங்குளம்
What are your predictions.
Raja Rajendran Tamilnadu : அண்ணாமலையை அருணாச்சல பிரதேசத்துக்கு ஆளுநராக நியமிக்கவிருப்பதால் இம்முறை போட்டி இல்லை.
விஜய் பனையூரில் நிற்கிறார். அங்கு பெட்ரூமில் படுத்துக் கொண்டே ஜெயிப்பார். - சீமான் விருதுநகர்.
(தி.மு.க. - 164, காங்கிரஸ் - 25, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6, ம.தி.மு.க. - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 6, இந்திய கம்யூனிஸ்டு - 6, தே.மு.தி.க. - 6 (ஒரு ராஜ்யசபா சீட்), பா.ம.க. (ராமதாஸ் அணி) - 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -3, மக்கள் நீதி மய்யம் - 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2
இதுபோக, தனியரசு, வேல்முருகன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார் போன்ற தலைவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது உபயம் - ரிபெல் ரவி ).
ஷேக் ஹசீனா! ஆவேச பேச்சு! இந்தியாவில் தஞ்சம் அடைந்த பின் முதல் முறை.. பொதுநிகழ்ச்சியில் உரை...
tamil.oneindia.com -Mani Singh S : டெல்லி: வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் ஆடியோ வாயிலாக உரையாற்றியிருக்கிறார். இதில் முகம்மது யூனுஸை கடுமையாக சாடினார். வெளிநாட்டு கைப்பாவையாக செயல்படும் முகம்மது யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச அரசு வலியுறுத்தி வருகிறது.
ஏர் இந்தியா நஷ்டத்தில் - விபத்துக்குப் பின்பு பாகிஸ்தான் வான்வழி தடுப்பு பெரிய அடி!
மின்னம்பலம் - Santhosh Raj Saravanan : Air India airline in loss of several crores of rupees Big blow after the accident
ஏர் இந்தியா நிறுவனம் இந்த நிதியாண்டில் வரலாறு காணாத இழப்பைச் சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த விமான விபத்து மற்றும் நீண்ட கால வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் மீண்டு வர எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன. மார்ச் 31 அன்று முடிவடையும் நிதியாண்டில், ஏர் இந்தியா நிறுவனம் குறைந்தது 15,000 கோடி ரூபாய் (சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டியாகோ கார்சியா - பிரித்தானியாவின் முடிவை ‘முட்டாள்தனம்’ எனச் சாடுகிறார் ட்ரம்ப்
இலக்கியா இரு னியஸ் : இந்து சமுத்திரத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாக்கோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்க பிரித்தானியா எடுத்துள்ள முடிவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனை ஒரு “மிகப்பெரிய முட்டாள்தனம்” (Great Stupidity) என்று அவர் வர்ணித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்தப் போக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளார்.
குன்னம் தொகுதியா வேண்டவே வேண்டாம் ... மயிலாடுதுறையா தாங்க தாங்க தாங்க
Giri Sundar : இரண்டு விஷயங்கள் சொல்லப்போகின்றேன். இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையா இல்லையா என்கிற பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்யாதீர்கள். ஜஸ்ட் படிச்சுட்டு போய்கிட்டே இருங்கள்.
இரண்டு தொகுதிகள்:
1.குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் சேர்ந்த குன்னம் தொகுதி. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு போக்குவரத்துத்துறை - மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சி சார் அவர்கள்.
தொகுதியில் ஒரு பிரச்சனையெனில் ""ஆய்வு'' செய்தலெல்லாம் அடுத்த்தது தான். முதலில் ""தீர்வு''. பின்னர் தான் அந்த சமாச்சாரம் நல்லவிதமாய் முடிந்ததா என்பது குறித்தான ""ஆய்வு''. தொகுதி நிதியிலிருந்து சும்மாங்காட்டியும் ""பேருந்து நிறுத்தம்'' கட்டுவதெல்லாம் அமைச்சர் தன் ""தொகுதி சேவை'' க்கான கணக்கில் கொள்வதில்லை. அதல்லாம் போகிற போக்கில் செய்து வருகின்றார். ஆனால் அவர் செய்யும் சேவை என்பதெல்லாம் பெரிய லெவலில் இருக்கின்றன. தொகுதியின் அடிப்படை தேவைகள் இனி இல்லையெனும் அளவுக்கு எல்லாமே சேச்சுரேட்டட் அங்கே.
வெள்ளி, 23 ஜனவரி, 2026
கேரளா -பெண்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்!
Sufan Channel : அன்றைய கேரளா திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னர் ஆட்சியில் பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்!
பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் மேலங்கி அணிய தடை விதிக்கப்பட்டனர்.
இந்த அடக்கு முறையின் நீட்சி இன்றும் சில இடங்களில் நிலவி வருவது தெரிந்ததே.
1) குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)
2) நாடார் (மரம் ஏறும் தொழில் சாதியினர்)
3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் (தேவர்)
4) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை) சாதியினர்.
5) இடையர் (கோனார்).
6) நாவிதர் (முடி திருத்தம்) சாதியினர்.
7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர்.
8) சக்கிலியர் (துப்புரவு தொழில்) சாதியினர்.
வியாழன், 22 ஜனவரி, 2026
Fake touch case நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் போலி தொடுதல்! Kerala good touch bad thouch FAKE TOUCH
ராதா மனோகர் : good touch bad touch fake touch
அதாவது நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் போலி தொடுதல்!
கேரள பேருந்து ஒன்றில் ஒரு பெண் யுடுபர் செய்த ஒரு செயல் உண்மையில் மகளிர் உரிமைகளுக்குகாக போராடுபவர்களை ஒரு சிக்கலான விவாதத்திற்குள் தள்ளி இருக்கிறது.
காலகாலமாக பெண்களே எதிர்கொள்ளும் ஒரு விடயத்தை பற்றி ஆண்களின் தரப்பு கருத்துக்களை இந்த சம்பவம் கொஞ்சம் தொட்டு இருக்கிறது.
இது போன்ற விடயங்கள் இலங்கை இந்தியா மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள நிலைமைகளோடும் ஒப்பிட்டு பார்க்கவேண்டி உள்ளது.
குறிப்பிட தக்க அளவில் இந்திய இலங்கை மக்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.
குறிப்பாக மணமுறிவு போன்ற பல விடயங்களில் ஆண்களே இந்நாடுகளில் அதிகமாக பாதிக்க படுகிறார்கள் என்றும் கூட கருதப்படுகிறது.
பெண்ணுரிமை பேசுவதற்கு பலர் உள்ளார்கள்
ஆணுரிமை பேசுவதற்கு ஆண்களே கொஞ்சம் தயங்கும் நிலை இருக்கிறது.
Real சாணக்கியர் ஸ்டாலின்தான்.. அமித் ஷா பிளானை சத்தமின்றி முறியடிச்சிட்டாரே.. திமுகவின் தரமான மூவ்
![]() |
அதிமுக முன்னாள் அமைச்சரான ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்துள்ளார். எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்த வைத்திலிங்கம் தனது மகன் பிரபு உடன் அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் சிக்குன்குனியா பாதிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை
minnambalam.com - Pandeeswari Gurusamy ; தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நடமாடும் மருத்துவ விரைவுக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே, மாவட்ட சுகாதார அதிகாரிகள் உரிய கண்காணிப்புடன் கூடிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் உரிய நேரத்தில் சிக்குன்குனியா பரிசோதனைகளை முன்னெடுத்து நோய்ப் பரவலைத் தடுப்பது அவசியம்.
The tragic story of the Kandyan areas and its people, betrayed and neglected by their own politicians who ran the country since 1948 up to date.
LankaWeb – The tragic story of the Kandyan areas and its people, betrayed and neglected by their own politicians who ran the country since 1948 up to date.
Posted on January 21st, 2026
Dheshamanya Dr Sudath Gunasekara Former Secretary to Prime Minister Sirimavo Bandaranayaka and the Ex-President of the Sri Lanka Administrative Service Association (1991-1994).
(This article is of two parts. This is Part 1 to be followed by part 11.)
Part 1
It is a historical fact that it was the heroic ancestors of the present day Kandyan Sinhalese who defended the motherland against three powerful invincible Western colonial invaders, for 343 years (1505-1848), and who protected it for posterity, with dignity and bravery unmatched in world history. This is a brief note on the tragic story of the Kandyan areas and its people, betrayed and neglected by their own politicians who ran the country since 1948 up to date.
The betrayal of the heroic Kandyans in the post 1948 period up to date, by Sihala politicians at a glance.
The Kandyan Peasantry Department (initially a “C” grade sub-department) was created in 1958. It was placed under a Coordinating Officer for Kandyan Peasantry Rehabilitation within the Home Ministry at that time,
புதன், 21 ஜனவரி, 2026
பேருந்தில் தவறாக நடந்துக்கொண்டதாக வீடியோ! இளம்பெண் அதிரடி கைது!
tamil.oneindia.com - Halley Karthik : திருவனந்தபுரம்: பேருந்தில் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக கூறி, அதை வீடியோ எடுத்து இளம்பெண் ஒருவர் வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட வீடியோவால், சம்பந்தப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவத்தில், இளைஞரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைத செய்யப்பட்டிருக்கிறார்.
பெண்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், பாலியல் அத்து மீறல்கள் கொலைக்குற்றம் போல அணுகப்படும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன.
வைத்தி வைத்த டிமாண்ட்.. ‘செஞ்சு’காட்டிய செந்தில் பாலாஜி.. அடுத்த ’விக்கெட்’?
எந்த பக்கமும் போறதுன்னு முடிவெடுக்க முடியாம ரொம்பவே ஓபிஎஸ் தத்தளிச்சுகிட்டே இருக்கிறாரு.. நீங்க இப்படியே இருங்க.. நாங்க எங்க ரூட்டுல போறோம்னு ஒவ்வொருத்தரா டாட்டா காட்டிகிட்டே இருக்காங்க..
மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினத்தை தொடர்ந்து வைத்திலிங்கம் திமுகவில் இணையப் போறாருன்னு நாம 2 வாரத்துக்கு முன்னரே சொல்லி இருந்தோம்.. அதே மாதிரி வைத்திலிங்கம் அறிவாலயத்துக்கு வந்து சேர்ந்துட்டாரு..
வைத்திக்கு ஒரத்த நாடு தொகுதியா?
டி டி வி தினகரன் என் டி ஏ கூட்டணியில் இணைந்தார் . எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
தமிழ் இந்து : என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” - இபிஎஸ்
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி.தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைத் தீவு என்பது வந்தேறிகளின் சங்கமம்?
![]() |
Mukinthan Thurairajasingham : வந்தேறிகள் யார், மண்ணின் மைந்தர்கள் யார் என்பதைத் தெளிவாகப் பிரித்தறிய முடியாத அளவிற்கு, பல இனங்கள் ஒன்றோடொன்று கலந்த உருவான நாடு தான் இலங்கை.
இலங்கை அரசியலில் "சிங்கள பௌத்த தேசியவாதத்தின்" காவலர்களாகக் கருதப்படும் ராஜபக்ச குடும்பத்தின் வரலாறு, பல தசாப்தங்களாகத் தென்னிலங்கையின் கிரிவப்பத்துவ மண்ணோடு மட்டுமே பிணைக்கப்பட்டு பேசப்படுகிறது.
ஆனால், வரலாற்று ஆய்வுகளும் மானுடவியல் தரவுகளும் இவர்களின் வேர்கள் இந்தியப் பெருங்கடலைக் கடந்து இந்தோனேசியாவின் ஜாவா (Java) தீவு வரை நீண்டுள்ளது.
17–18ஆம் நூற்றாண்டுகளில், இன்றைய இந்தோனேசியா (அன்றைய Dutch East Indies) Dutch East India Company (VOC) கட்டுப்பாட்டில் இருந்தது.
VOC ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஜாவா நாட்டின் இளவரசர்கள், அரச குடும்பத்தினர், உயர்மட்ட போர்வீரர்கள் பலர் தண்டனையாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.
மாநில மொழிகளுக்கான செம்மொழி விருதுகள்! திமுகவின் மாநில சுயாட்சி மாஸ்டர் ஸ்ட்ரோக்
Kalaignar Seithigal - KL Reshma : இந்திய இலக்கியங்களை காக்கும் முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் இலக்கியங்களை மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து மொழிகளையும் காக்கும் முதலமைச்சராக உயர்ந்து காட்சி அளிக்கிறார்.
'தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான இலக்கிய விருதுகள் வழங்கப்படும்' என்ற அவரது அறிவிப்பு இந்திய இலக்கியவாதிகள் அனைவரையும் மகிழ்வித்துள்ளது. இத்தகைய விருது எந்த மாநிலத்திலும் இல்லை, எந்த மாநில அரசும் செய்ததும் இல்லை.
”இலக்கியங்களுக்கு எல்லை இல்லை; அவை நம்மை இணைக்கும் பாலங்கள்”என்பதை தனது செயலால் மெய்ப்பித்துக் காட்டி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
செவ்வாய், 20 ஜனவரி, 2026
சிபிஐயிடம் திணறிய விஜய்.. உள்ளே வரும் ‘அமித்ஷா’.. வெளியாகும் ‘தடாலடி’ முடிவு? D
மின்னம்பலம் - Mathi : வைஃபை ஆன் செய்ததும், ”எத்தனை எத்தனை அதிசயங்கள் அணிவகுக்கப் போகிறதோ” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா ஆச்சரியம், அதிசயம்னு சொல்லிகிட்டு.. டெல்லிக்கு விஜய் போனாரே அதை பத்தி சொல்லுமய்யா..
சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு விஜய் போனதுக்கும் நான் சொல்றதுக்கும் கனெக்ஷன் இருக்குய்யா..
டெல்லிக்கு போறதுக்கு முன்னாடி விஜய், பல முறை மீட்டிங் நடத்தினாரு.. புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல்குமாரை கூப்பிட்டு சிபிஐ ஆபீசர்ஸ் கேட்ட கேள்விகள், சொன்ன பதில்கள்.. அதுல இருக்க லாஜிக்குகள்னு எல்லாத்தையும் கவனமாக அலசி ஆராய்ந்து பக்காவா ரெடியாகிட்டுதான் இந்த முறை டெல்லி போனாங்க..
டெல்லி சிபிஐ ஆபிசில இந்த முறை என்ன நடந்துச்சு? என்ன கேள்விகள் கேட்டாங்கன்னு சிபிஐ அதிகாரிகள்கிட்ட நாம பேசுனோம்.. அவங்க சொன்னதை அப்படியே ஷேர் செய்யுறேன்.. நல்லா கேட்டுக்கய்யா..
நம்மகிட்ட பேசுன சிபிஐ அதிகாரிகள், “போன டைம் வந்த மாதிரியே இந்த முறையும் விஜய், வக்கீல் நிர்மல்குமார், அப்புறமாக வளர்ந்தவர் ஒருவர் இருப்பாரே (ஆதவ் அர்ஜூனா) அவங்க மூணு பேரும் எங்க ஆபீசுக்கு வந்தாங்க..
பாலியல் பொய் புகார் ஷிம்ஜிதா முஸ்தஃபாவுக்கு எதிராக 10 ஆண்டுகள் சிறை... வழக்கு தாக்கல்
![]() |
Vijith Kumar : 10 ஆண்டுகள் சிறை, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, சொத்துக்கள் பறிமுதல்
சோஷியல் மீடியாவில் வைரலாக்கவும் ரீச் அதிகரிக்கவும், ஒரு நிரபராத மனிதனின் மரியாதையும் வாழ்க்கையும் பலியாக்கப்பட்ட இந்த கொடூரத்திற்கு எதிராக, எடுத்துக்காட்டாகும் வகையிலான கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
கோழிக்கோடை சேர்ந்த தீபக் என்ற இளைஞரை, பொய்யான பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டை முன்வைத்து அவமதித்து, இறுதியில் தற்கொலைக்குத் தள்ளிய சம்பவத்தில், சமூக செயற்பாட்டாளர் செபாஸ்டியன் வார்க்கியின் தலைமையில் வலுவான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராகுலிடம் பகீர் ரிப்போர்ட்! ராமதாஸ், தினகரன் முடிவு என்ன? ’திரிசங்கு’ தேமுதிக!
மின்னம்பலம் - Mathi : , “நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா கூட்டணி எல்லாம் முடிவாயிடுச்சு போல?
அதைத்தான்யா சொல்ல வர்றேன்.. மோடி 23-ந் தேதி மதுராந்தகத்துல பேசுற மீட்டிங்குல எப்படியாவது ‘கூட்டணி கட்சிகளை’ மேடை ஏற்றனும்னு ரொம்பவே தீவிரமா இருக்காங்க..
பியூஷ் கோயலும் 21-ந் தேதி சென்னை வந்து கூட்டணி பேச்சுகளை பைனல் செய்ய போறாருய்யா..
அதிமுக- பாஜக கூட்டணியில புதுசா எந்த கட்சிகள் இணையுதாம்?
இதை பத்தி பாஜக வட்டாரங்களில் பேசுனப்ப, ”எங்க கூட்டணியில டிடிவி தினகரன் சேருவது கன்பார்ம் ஆகியிருக்கு.. மோடிஜி மீட்டிங்குல டிடிவியும் இருப்பாரு…தேமுதிககிட்ட தொடர்ந்து பேசிகிட்டே இருக்கோம்.. ” என்கின்றனர்.
தேமுதிக முடிவு செஞ்சுட்டாங்களா?
தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் ”பாஜக டீம்தான் ரொம்பவே எங்ககிட்டு சீரியசா பேசிகிட்டு இருக்காங்க.. ஆனா.. அந்த அளவுக்கு திமுக தரப்புல சீரியசா பேசாம இருக்கிறாங்களே.. இருந்தாலும் அண்ணிதான் (பிரேமலதா) இறுதியான முடிவை சீக்கிரமா அறிவிப்பாங்க” என்கின்றனர்
திங்கள், 19 ஜனவரி, 2026
ஈரானில் ஜனநாயகம் மீண்டும் வருமா? பெண்களின் போராட்டம் வெற்றி பெறுமா?
ராதா மனோகர் : இன்றைய இந்திய ஆர் எஸ் எஸ் / பாஜக ஆட்சியாளர்களின் போக்கிற்கு அன்றைய கொமேனியின் ஈரான் நிலை ( இன்றைய அல் காமினியின் ஈரான் உட்பட) மிகவும் சரியாக ஒத்து போகிறது!
பூலோக சொர்க்கம் போலிருந்த தேசம்தான் ஈரான் .
செல்வமும் கல்வியும் நல்ல பண்பும் வரலாற்று பாரம் பரியம் கொண்டிருந்த அறிவார்ந்த மக்களின் தேசம் அது .
அமெரிக்காவுக்கே கடன் கொடுத்த தேசம் அது.
மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அழைக்கு முன்பே அதை ஆரம்பித்து வைத்த தேசம் அது. ..
அதுவும் நல்ல சம்பளத்தில் கௌரவமாக பண்பாக நடத்தினார்கள்.
படிக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கமே உயர்படிப்புக்கு அனுப்பியது .
அப்படி படிக்க போன மாணவர்கள் மேற்கு நாடுகளின் மாய வலையில் விழுந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக நாடு திரும்பி நாட்டையே சின்னாபின்னமாக்கினர் .
ஈரான் மன்னர் ஷா பல்லவியின் ஆட்சியில் பெண்களின் கல்வியில் அரசு முழு முதல் அக்கறையோடு செயல்பட்டது
சென்னை டெலிவரி ஊழியருக்கு சரமாரி வெட்டு.. கற்களை வீசி விரட்டிய பொதுமக்கள்
tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: சென்னை வேளச்சேரியில் செப்டோ டெலிவரி ஊழியரை குடியிருப்புகளுக்கு மத்தியில் வைத்து அரிவாளால் இரண்டு பேர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் வைத்து டெலிவரி ஊழியரை இரண்டு பேர் கொலைவெறியுடன் அரிவாளால் வெட்டியதை பார்த்த பொதுமக்கள், கற்களை வீசி இருவரையும் விரட்டியடித்து டெலிவரி ஊழியரை மீட்டனர்.
சென்னை வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 23). இவர் Zepto-வில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பார்த்திபன் வேளச்சேரி ஜேஎன் நகர் அருகே குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் விரட்டி வந்துள்ளனர்.
திமுக, விசிக செய்த தவறை விஜயும் செய்தார். ஆதவ் அர்ஜுனா limelight hijacking செய்தார்.
தற்போது அதே " முதுகுல குத்திட்டாங்க" ரைட் அப் எல்லாம் தளபதிக்கும் வர தொடங்கியிருக்கிறது.
விமர்சனங்களை எல்லாம் தாண்டி, நன்றாக சோபித்திருக்கவேண்டிய நபர். ஆனால் காக்கா பிரியாணி துண்ணா உன்னிகிருண்னன் குரல் வரும் என்பதுபோல், கூடவே அய்யா ஆதவ் அர்ஜுனரை வைத்திருந்தால் கட்சியை ஸ்வாஹா செய்துவிட்டு சோலி முடித்துவிடுவார் என்று கட்சி ஆரம்பித்த நாள்முதலாக சொல்லி வந்தோம்.
தலைவன தொட்டு பாரு, முடிஞ்சா வாங்கடா பாப்போம், டேய் சி பி ஐ இப்ப எறி பாப்போம் என தனது personal scoreகளுக்காக தவெகவை பகடை ஆக்கினார்.
திமுக, விசிக ..இரண்டு கட்சிகளும் செய்த தவறை விஜயும் செய்தார். ஆதவ் அர்ஜுனா limelight hijacking செய்தார்.
வைகோவைப் போல் விஜய் கண்டெஸ்ட் செய்யாமலேயே ஏய்ப்பார் என்று சொன்னோம்.
ஞாயிறு, 18 ஜனவரி, 2026
நடிகர் விஜய் (டெல்லி) சிபிஐ முன்பு 2வது முறையாக ... டெல்லி சென்றடைந்தார் விஜய்
தினமலர்: டில்லி புறப்பட்டார் விஜய் ; சிபிஐ முன்பு நாளை இரண்டாவது முறையாக ஆஜராகிறார்
சென்னை ; கரூர் துயரம் தொடர்பாக இரண்டாம் கட்ட சிபிஐ விசாரணை நாளை நடக்க உள்ளது . இந்த விசாரணைக்காக தவெக தலைவரும் , நடிகருமான விஜய் இன்று சென்னையில் இருந்து டில்லி புறப்பட்டார்
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நாற்பத்து ஒன்று பேர் பலியாகினர் . நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது
தமிழகத்தின் ஆங்கில மேலாண்மைக்கு சங்கிகள் குறி
ராதா மனோகர் : திமுக ஹிந்திக்கு எதிராக போராடி விட்டு இன்று ஆங்கிலத்திற்கு அடிமையாகி விட்டது என்று திடீர் தமிழ் பற்றாளர்கள் பலர் கண்ணீர் வடிக்கிறார்கள்!
இவர்களின் எஜமானர்கள் தமிழர்களின் வெற்றிகளை பார்த்து புழுங்குபவர்கள்.
இவர்கள் ஏவல் பேய்கள் மட்டுமே.
இந்த விடயம் பற்றிய எனது பழைய பதிவு ஒன்றுள்ளது.
இந்த திடீர் தமிழ் பற்றாளர்கள் அறிவு கண்ணை அக்கட்டுரை திறக்கும் என்று நம்புகிறேன்.
மீள் பதிவு : தமிழர்களின் ஆங்கில மொழி மேலாண்மைக்கு குறி
பெரியார் இருந்த காலத்தில் ஆங்கிலம் ஒரு மேட்டுக்குடி சொத்தாகவே இருந்தது .அதிலும் பார்ப்பன வீடுகளில் மிகவும் சாதாரணமாக புழக்கத்தில் இருந்தது . அறிவியல் நூல்கள் பெரிதும் ஆங்கிலத்தில்தான் இருந்தது
தமிழ் மட்டுமே வாசிக்க எழுத தெரிந்தவர்கள் இன்றைய வாட்சப் மேதாவிகள் ரகத்தில்தான் இருந்தனர்.
விஞ்ஞானம் மருத்துவம் போன்ற துறைகள் எல்லாம் தமிழ் மட்டுமே தெரிந்த சமூகத்தால் எட்டிவிட முடியாத உயரத்தில் இருந்தது.
இன்றும் உலகம் முழுவதும் பார்ப்பனர்கள் பரவி இருப்பதற்கு அவர்களின் ஒரு நூற்றாண்டு ஆங்கில கல்வியே பெரிய காரணமாக இருந்தது.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடரும்! மாணிக்கம் தாகூர் பிரவீன் காந்தி மீது நடவடிக்கை?
![]() |
மின்னம்பலம் -Mathi : ‘கூட்டணி ஆட்சி’: டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது காங்கிரஸ். அதே நேரத்தில், கூட்டணி ஆட்சி; அதிக தொகுதிகள் என்கிற நிபந்தனைகளையும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக முன்வைக்கிறது. இதனை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.





