வெள்ளி, 13 நவம்பர், 2026

நடிகரின் தவேகாவல் உடைக்கப்பட்ட தலித் பர்னிச்சர்!

 Amudhan R P  : இந்த நடிகர் சகாப்தத்தில் உடைக்கப்பட்ட பர்னிச்சர்களில் சிறப்பான / பெசல் ஒன்று தலித் பர்னிச்சர் தான். 
சென்ற திமுக ஆட்சியில் திருமா முதல் பா ரஞ்சித் வரை பல தலித் ஆளுமைகள் மதிப்புடன் வலம் வந்தார்கள்.
அவர்கள் என்ன செய்தாலும் தமிழ் சமூகத்தால் பாராட்டப்பட்டார்கள்.
திமுக / திராவிட அரசியல் உருவாக்கி வைத்திருந்த சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, மதச்சார்பின்மை ஈகோ சிஸ்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக தலித்துகள் பார்க்கப்பட்டனர்.
திமுகவை ஆதரிப்போரில் பெரும்பாலோனோர் தலித் தலைவர்களை, கலைஞர்களை தமது தோழமையாகப் பார்த்துக் கொண்டாடித் தீர்த்தார்கள்.
இவர்களை எதிர்ப்போரில் ஏறக்குறைய பலர் திமுக அல்லது திராவிட அரசியலை வெறுப்போராகத் தான் இருந்தனர்.


திமுக, விசிகவை ஒரு முக்கியமான நட்பு சக்தியாகத்தான் பார்த்தது.
வட தமிழ்நாட்டில் திமுக வெற்றிக்கு விசிக தான் காரணம் என்ற வாதம் திரும்பத்திரும்பப் பேசப்பட்டு, திமுக என்னதான் தம்மால் முடிந்த வரை எல்லோருக்கும் (தலித்துகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பாலியல் சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், முதியோர்) அவரவர் மனம் கோணாதபடி முக்கியத்துவத்தைக் கொடுத்தாலும், திமுக தேவையில்லை என்று அதன் நட்பைத்  தூக்கிப்போட்டுவிட்டு ஆதவ் அர்ஜுனாவின் பின்னால் போனது தான் தலித் பர்னிச்சரின் உடைப்புக்குக் காரணம்.
திமுகவின் நட்பு, தலித்துகளுக்கு பொன் முட்டை இடும் வாத்து போன்றது. 
திமுகவின் துணை கொண்டு தான் விசிக படிப்படியாக முன்னேறி ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆல் போல் பரந்து விரிந்தது.
தலித் சிந்தனையாளர்கள், போராளிகள் ஆகியோர் மத்தியில் ஏற்பட்ட திடீர் அதீத நம்பிக்கை - அது செயற்கையாக உருவாக்கப்பட்டதா, இயற்கையாக உருவானதா என்று அவர்கள் தான் ஆராயவேண்டும் - விசிகவையே கைவிடவைத்து, நடிகர் பின்னால் போக வைத்தது.
ஆரம்பத்தில் நடிகர், தலித்துகளுக்கு மந்திரி சபையில் அதிக இடம் கொடுத்தார் என்ற பேச்சு அடிபட்டாலும், அது தலித்துகளின் வெற்றியாகப் பார்க்கப்பட்டாலும், இப்போது இந்த ஆட்சியின் அவலத்திற்கு அவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்ற சுமை வரும் போது, அது தலித் அரசியலின் மதிப்பைக் குலைக்கும் இடத்திற்கே இட்டுச்செல்லும்.
இப்படி ஒரு நடிகர் ஆட்சி இருந்தது என்றும் அந்த இழி நிகழ்வில் விசிகவும் இடம் பெற்றது என்றும் அதில் தலித்துகள் பெரும் பங்காற்றியிருந்தனர் என்றும் பெரும்பாலான தலித்துகள் நடிகர் ஆட்சியைத் தங்களது ஆட்சியாக பார்த்தனர் என்றும் வரலாற்றில் பதிவாகும் துன்பத்தை நாம் மறுக்கமுடியாது. 
மீண்டும் ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் நடக்கும் போது, தலித்துகள் அதில் திமுகவிற்கு வெளியே இருந்து ஆதரவு தருவார்களா? அப்படியே வந்தாலும் அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கும் என்பது கேள்விக்குறி தான்.
ஆனால் ஒன்றை நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.
அடுத்து திமுக ஆட்சி அமையும் போது, அதில் விசிக இணைந்தால், அக்கட்சிக்கு இதே ஊடக நட்பு கிடைக்காது.
அப்போது விசிக, திமுக தோழமையாகப் பார்க்கப்பட்டு, திமுக எதிர்கொள்ளும் அனைத்து ஊடக வெறுப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
திமுகவின் உறவை முறித்துக்கொண்டதனால், இப்போது விசிகவிற்குக் கிடைக்கிற ஊடக சொகுசு நாளை திமுகவுடன் இணையும் போது கிடைக்காது. 
இதுவும் அ ராசா அவர்கள் சொன்னதைப் போல ஒரு ஆக்குபேசனல் ஹசார்ட் (occupational hazard) தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக