![]() |
Karikalan Kiru : ஊடகவாந்தியாளர் சமஸ்( சமஸ் Samas ) 'விரிவாக எழுதுகிறேன்' என்று சொல்வதை கேட்டாலே திக்கென்று இருக்கு. இந்த ஆள் சும்மா எழுதினாலே அது வளவளனு தான் இருக்கும். இதுல விரிவா வேற எழுதறேன்னு சொல்லிட்டு வாந்தி எடுத்துட்டு இருக்கார்.
அதையும் முகமூடி போட்டிருக்கும் ஒரு படத்தோடு ஷேர் செய்திருக்கார். எப்போதுமே முகமூடியோடவே சுற்றி பழக்கமாகிடுச்சி போல. சரி தொலையட்டும்.
தமிழகத்தில் 12 செய்தி தொலைக்காட்சிகள் இருக்கும்போது, என்னை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறீர்கள் என்று ஒப்பாரி வைக்கிறார். அதுதான் 'விரிவா' எழுதுறேன்னு சொல்றல்ல, அப்புறம் ஏன் தமிழகம்னு எழுதுற? 'தமிழ்நாடு'னு எழுத உனக்குள்ள இருக்கிற சங்கித்தனம் விடவில்லையா சமஸ்?
12 தொலைக்காட்சி ஆசிரியர்கள் இருக்கும்போது, நான் மட்டும் ஏன்? என்று கேட்கும் சமஸ், "அன்றாடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக், ட்விட்டர் பதிவுகள், காணொளிகள்; வாட்ஸப் பகிர்வுகள்" அவருக்கு எதிரா வருவதாக சொல்லிவிட்டு, ஏன் திரு.விஜயசங்கர் அவர்களை மட்டும் டார்கெட் செய்து எழுதுகிறார் என்பதில் தான் இந்த ஆளின் பொறுக்கித்தனம் இருக்கிறது.
தான் பெரிய ஊடகப் புடுங்கி என்று நினைத்துக் கொண்டிருக்கும் இவருடைய கற்பனை கோட்டையை, பிரண்ட்லைன் போன்ற மதிப்புமிக்க இதழில் 35 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு மூத்த ஊடகவியலாளர் சம்மட்டியால் உடைக்கிறாரே என்கிற ஆற்றாமையில் தான் ஃபீவர் வந்து படுத்திருக்கிறார்.
'உதிரிகளை விட்டுவிடலாம்' என்கிறார். யார் உதிரி, யார் மெயின் என்று தீர்மானிக்கும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது? உனக்கு இருக்கும் இந்த மேட்டிமை மனப்பான்மையால் தான் உன்னை மட்டும் இணையத்தில் அல்லையில் போட்டு குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் பிம்ப கட்டுமானத்துக்கு இவர் காரணமில்லையாம். இவரு தொலைக்காட்சி துறைக்கு வந்த பிறகுதான் வீட்டுக்கு கேபிள் கனெக்சன் கொடுத்தாராம். தொலைக்காட்சியே பார்க்காத ஒருவனுக்கு ரிப்போர்ட்டர் வேலை கிடைத்தால்கூட அதிசயம், ஆனால் இவர் நேராக எடிட்டராகவே ஆனது எப்படி?
தொலைக்காட்சியே பார்க்காமல் இருந்து, எழுத்து ஊடகத்தில் இந்த ஆள் அறுத்து தள்ளியது தான் என்ன? எல்லாமே குப்பைகள். Micro Compost yard-இல் வைத்துக் கூட தரம்பிரிக்க முடியாத குப்பைகள்.
விஜய்யின் திரை பிம்ப வளர்ச்சிக்கு காரணமானவர்களை பாருங்கள் என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார். விஜய்யின் திரை பிம்பத்தை விட விஜய்யின் அரசியல் பிம்பத்தை ஊதிப் பெருக்கிக் காட்டி நீ செய்த அநியாயம் தான் சமுதாயத்தையும் அரசியலையும் சேர்த்து கெடுக்கும் படுபாதகம்.
விஜயின் பிரசாரத்தை கவர் செய்ய 10 கேமராக்களையும் ட்ரோன்களையும் ஒவ்வொரு ஊருக்கும் அனுப்பி வச்ச சமஸ், அதில் ஒரு இரண்டு பேரை பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்துகளை கேட்க அனுப்பியிருந்தால், கரூரில் சர்மிளாவும், செல்வராஜூம் ஏமாற்றப்பட்டு கையெழுத்து வாங்கப்பட்ட செய்தி முதலில் உங்களுக்கு தானே கிடைத்திருக்கும் சமஸ்?
விஜயின் பனையூர் வாசலிலும் பட்டினப்பாக்கம் வீட்டு வாசலிலும் தேவுடு காக்கும் உங்கள் கேமிராக்கள் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி ஏன் திரும்பவில்லை?
இப்போது பாதிக்கப்பட்ட சர்மிளாவை அவர் குடும்பத்தை மிரட்டுவதற்கு மட்டும் உங்கள் லோக்கல் செய்தியாளரை (அடியாளை) அனுப்புகிறீர்களே! இது தான் ஊடக அறமா?
கண்டதையும் தின்று அஜீரணத்தால் வாந்தியெடுப்பது மாதிரி, இன்னொரு வாந்திக்கு சமஸ் கொடுத்திருக்கும் தலைப்பு 'யூட்யூப் போஸ்டருக்கும் தொலைக்காட்சிக்கும் என்ன சம்பந்தம்?'.
தொலைக்காட்சியில் ஏன் 24 மணி நேரமும் விஜயை நேரலை செய்தீர்கள் என்று கேட்டால்? நான் மட்டுமா செய்தேன். மொத்தம் 12 பேர் இருக்கோம் என்று சொல்கிறார். புதிய தலைமுறை டிஜிட்டல் கிராபிக்ஸ் கார்டுகளை ஆதாரத்தோடு எடுத்துப் போட்டால், அது 'தனி டீம்', அவங்க மட்டுமா அப்படி செய்கிறார்கள் என்று 'பொறுப்புத் துறப்பு' கலையில் முனைவர் பட்டம் வாங்கியவர் போல எழுதுகிறார். உலகம்பூரா யூட்யூப்பின் தரம் இப்படி தான் இருக்குனு புது விளக்கம் கொடுக்கிறார்.
"புதிய தலைமுறை', 'ஆனந்த விகடன்' போன்ற லெகஸி மீடியாக்கள் இந்த டிஜிட்டல் மீடியாவின் தன்மையை சவாலாகவே பார்க்கின்றன" என்று ஊடக அறத்தை காப்பதற்காகவே அவதரித்த அவதாரம் மாதிரி தன்னை ஒரு ஊடக 'விஜய்'யாக பிம்பக் கட்டமைப்பு செய்ய முனைகிறார்.
சமஸ் குறிப்பிட்டிருக்கும் இந்த இரண்டு லெகஸி மீடியாவில் - ஆனந்த விகடன் தான் விஜய்யின் கதாநாயக பிம்ப வளர்ச்சிக்கு பெருங்காரணமாக இருந்தது என்பது மட்டுமல்ல, அம்பேத்கர் புக்கையும் விஜய்யை வைத்து வெளியிட்டு அவருடைய அரசியல் பிம்ப வளர்ச்சிக்கும் தூபம் போட்டது. அதன் அடியொற்றி, புதிய தலைமுறை விஜய்யின் அரசியல் பிம்பத்தை ஊதிக் காட்டுவதில் களத்தில் முன்னணியில் நின்றது.
இந்த கேவலமான லெகஸி மீடியா செயல்பாட்டை விட, டிஜிட்டல் மீடியா ஆயிரம் மடங்கு உயர்ந்தது.
மக்களுக்கு உபதேசம் வழங்க, எப்போதும் முதல் ஆளாக வந்து நிற்கும் சமஸ், புதிய தலைமுறை டிஜிட்டல் டீமுக்கு அறிவுரை வழங்கி, இப்படி செய்வது ஏற்புடையது இல்லை என்று துணிச்சலாக 'விரிவாக' எழுத முடியுமா? பிறகு என்ன கேசத்துக்கு ஊடக அறம், முறம்னு அலம்பிக்கிட்டு இருக்கீங்க சமஸ்?
மனசாட்சியை(கொஞ்சமாவது இருக்குமானால்) தொட்டுச் சொல்லுங்கள் சமஸ் - புதிய தலைமுறை என்பது பாஜக சார்பு சேனல் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? உங்கள் ஓனர் பாஜகவின் தொங்குசதை இல்லையென்று உங்களால் சொல்ல முடியுமா? அந்த ஆளிடம் கூலிக்கு ஊடக அடியாள் வேலை பார்த்துவிட்டு, உலகமகா காந்தியவாதி வேஷம் எதற்காக சமஸ்?
சமஸ் உங்களுக்கு எழுத்தும் வரவில்லை, ஊடகமும் வரவில்லை, அறமும் வரவில்லை. உங்களுக்கு எளிமையாகவும் இயல்பாகவும் வருவது சங்கித்தனம் மட்டும் தான்.
காந்தியவாதி போர்வையை போர்த்திக் கொண்டு, ஆட்டு மந்தையில் புகுந்த நரி தான் சமஸ்!
இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே தெரிகிறது. மூத்த ஊடக எடிட்டர் சமஸ்க்கு மட்டும் தான் இன்னும் தெரியவில்லை. பரிதாபங்கள்!
Karikalan Kiru

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக