மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று(ஜூன் 18) தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று (ஜூன் 18) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஊழலை ஒழிக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கையை தமிழக முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். தற்போதைய சமூகம் மேல் தட்டு மக்களுக்கான,
எனது அரசியல் வாழ்க்கையில் நான் மிகவும் வியந்து பார்த்த விஷயம் என்னவென்றால், இந்தத் தேர்தல் சாதி, மதத்தை ஒழித்துள்ளது. ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடுகளைப் போக்கி, இந்திய ஜனநாயகத்தில் ஒரு சராசரி குடிமகனும் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்பதை விஜய் உருவாக்கிக் காட்டியுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு பாரிஸ் மாநகரத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில், ‘இன்றைய காலத்தில் ஒரு ஏழையால் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ செல்ல முடியுமா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால், பணம் இல்லாதவனும் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்பதை தற்போதைய தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
இதனை ஜனநாயகத்தின் ஒரு புரட்சியாகவே நான் கருதுகிறேன். அதனால்தான், கட்சிகள் மற்றும் வேறுபாடுகளை கடந்து எளிய மக்களுக்காக காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோர் கையில் எடுத்ததைப் போன்ற ஒரு பெரிய இயக்கமாக இது வளர வேண்டும். அதற்கான விதை தற்போது போடப்பட்டு விட்டது.
எல்லோரும் ஒருங்கிணைந்து இதனைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நானும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன். பொதுவுடமை என்ற கொள்கை வேர்கள் மேலும் பலப்படும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்படுவேன் என்ற உறுதிப்பாட்டை எடுத்துள்ளேன்” இவ்வாறு சி.மகேந்திரன் பேசினார்.
மகேந்திரன் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதன் காரணமாக கட்சி செயல்பாடுகளில் இருந்தும் ஒதுங்கி இருந்தார். கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முகநூல் பதிவுகளிலும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சலசலப்பு- மூத்த தலைவர் சி.மகேந்திரன் அதிருப்தி! என்ற செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று அவர் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.
Photo of author
Pandeeswari Gurusa
கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் திரு சி மகேந்திரன் இன்று தமிழக வெற்றி கழகம் என்கின்ற பிள்ளை பிடிக்கட்சியில் இணைந்தார்
முன்பு இவர் வேறொரு பிள்ளை பிடி கோஷ்டியின் ஆதரவாளராக இருந்தார் என்பதுவும் எல்லோரும் அறிந்ததே
ஆனால் அந்த பிள்ளை பிடி கோஷ்டியின் இறுதி அழிவுக்கு இவர் எவ்வளவு பெரிய சேவை ஆற்றி உள்ளார் என்பது பற்றி பலருக்கும் சரியாக தெரியாது
இவர் எப்படி புலிகளின் காலை வாரினார் என்பது பற்றி இங்கே சுருக்கமாக கூறியுள்ளேன்
இது பற்றி நான் சொல்வதை அப்படியே ஏற்று கொள்ளுங்கள் என்று நான் கூறவில்லை
கொஞ்சம் சுயசிந்தனையும் சுய தேடலையும் செய்யுங்கள்
சுருக்கமாக சொன்னால் இவன்தான் அவன் - அவன்தான் இவன்!
மீள் பதிவு :கம்யூனிஸ்ட்டு தலைவர் மகேந்திரன் சீமான் பற்றி ஆர்கசத்தோடு பேசிய காணொளியை காணும்போது எப்படிப்பட்ட பிரகிருதிகளை எல்லாம் புலிகள் நம்பி இருக்கிறார்கள் என்ற ஆதங்கம் உண்டானது.
நல்லவர்களை வல்லவர்களை எல்லாம் துரோகி துரோகி என்று கொன்றொழித்துவிட்டு வெறும் வாய் வியாபாரிகளை நம்பி இருக்கிறார்கள் இயற்கை விதி பெரிது!
இது ஒரு பழைய கட்டுரை :
அந்த இறுதி வாய்ப்பு கலைஞர் மெரீனாவில் மேற்கொண்ட உண்ணா விரதத்தினால் கிடைத்ததூ.
கலைஞரின் வயது உடல் நிலை போன்ற விடயங்களை நன்கு அறிந்த அன்னை சோனியா காந்தியவர்கள் அவசரம் அவசரமாக திரு ப .சிதம்பரம் மூலம் ஒரு முயற்சியை மேற்கொண்டார்.
தற்காலிக போர் நிறுத்தத்தையும் பிரபாகரன் உட்பட்ட தலைவர்களையும் ஐ நா மேற்பார்வையில் சரணடையும் ஏற்பாடு உறுதியானது.
இறுதி நேரத்தில் அது தமிழகத்தில் இருந்த கம்யுனிஸ்டு மகேந்திரனிடம் புலிகளின் நடேசன் சொன்னார் . அதை அவர் வைகோ நெடுமா போன்றவர்களிடம் லீக் செய்தார்.
சிதம்பரம் மிகவும் ரகசியமாக வைத்திருக்குமாறு கூறிய இந்த விபரங்களை புலிகள் விபரம் தெரியாமல் இவர்களிடம் கூறியதுதான் அவர்களுக்கு நேர்ந்த விபத்து என்று கூறவேண்டி இருக்கிறது.
இவர்கள் அவர்களுக்கு என்ன கூறினார்களோ தெரியாது .
பிரபாகரன் அதை ஏற்று கொள்ளவில்லை என்று அறிவித்தனர்.
அத்தோடு அது முடிவை நோக்கி போனது வேகமாக.
அமெரிக்கா வரவில்லை.. ஐ நா வரவில்லை நோர்வே வரவில்லை எந்த நாடும் வரவில்லை .
இறுதியில் சரண் அடையும் நிலை வந்தது .
நடேசன் சரண் அடைய போவதாக இறுதியாக கம்யுனிஸ்ட் தலைவர் தோழர் பாண்டியனிடம் கூறினார்.
அதற்கு பாண்டியன் சரண்டர் என்ற வார்த்தையை உலக நாடுகளிடம் கூறாதீர்கள் .
ஆயுதங்களை மௌனிக்கிரோம் என்று கூறுங்கள் என்றார்.
அதற்கு நடேசன் அப்படியாயின் அதை நீங்களே எழுதி அனுப்புங்கள் அதை நாங்கள் உலக நாடுகளுக்கும் ஊடகங்களுக்கும் அப்படியே அனுப்பி விட்டு வெள்ளை கொடியோடு செல்கிறோம் என்றார்.
இதுதான் அந்த இறுதி நிமிடங்கள்.
சரண் அடைந்தோரை கொன்றால் இலங்கை அரசு உலக நாடுகளின் பொருளாதார தடை போர்குற்றம் போன்ற பெரிய சிக்கல்களில் மாட்டு பட்டிருக்கும்.
எனவே ஒருபோதும் அந்த தவறை செய்திருக்க மாட்டார்கள்.
ஆனால் புலிகள்தான் எந்த காலத்திலும் சரண் அடையவில்லையே?
இன்று காலை ஆயுதங்களை மௌனித்தால் நாளையே அவற்றை மீண்டும் இசைக்க தொடங்கி விடலாமே?
மௌனித்தல் எனபது வேறு . சரண் அடைதல் என்பது வேறு.
இது தெரியாத புலிகள் இது தெரியாத கம்யுனிஸ்டுகள்.
சிதம்பரம் மூலம் கிடைத்த இறுதி வாய்ப்பை குழப்பியதோடு நெடுமா வைகோ போன்றோர் ஒதுங்கி விட்டார்கள்.
அப்போது ஈழத்தாய் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிக்காக நெடுமா வைகோ கம்யூனிஸ்டுகள் உட்பட பல களவாணிகள் உழைத்து கொண்டிருந்தார்கள்
ஈழ மக்கள் முள்ளி வாய்க்காலுக்கு போனார்கள் !
See
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக