செவ்வாய், 14 ஏப்ரல், 2026

ஐஸ்கிரீம் கடையில் மின்சார வாகன பாட்டரி வெடித்து தீ . தம்பதி உயிரிழப்பு . ஆற்காட்டில் சோகம்!

 News18 on ஆற்காடு தேவி நகர் மகாவீர் ஐஸ்கிரீம் கடையில் மின்சார வாகன பேட்டரி வெடித்து தீ, உரிமையாளர் பவன்லால் மனைவி சுந்தரி உயிரிழப்பு, போலீஸ் விசாரணை தொடர்கிறது
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், தம்பதி உயிரிழந்தனர்.
ஆற்காடு அடுத்த தேவி நகர் பகுதியில் 'மகாவீர் ஐஸ்கிரீம்' என்ற பெயரில் கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளரான பவன்லால் மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர் திங்கள்கிழமை அதிகாலை ஐஸ்கிரீம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கடையின் உள்ளே இருந்த மின்சார வாகனத்தின் பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.


இந்நிலையில், தீ மளமளவென பரவியதில் கடை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர், கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சிக்கியிருந்த தம்பதியை மீட்டனர். பலத்த தீக்காயங்களுடன் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக