சனி, 15 நவம்பர், 2025

உதயநிதி ஸ்டாலின் : பாஜகவுக்கு பதற்றத்தை தரக்கூடிய கட்சியாக நாட்டிலேயே திமுக திகழ்கிறது!

 hindutamil.in   : சிவகங்கை: நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசின் புதுப்பிக்கப்பட்ட வெண்கல சிலையை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். 
பின்னர் அவர் பேசும்போது, “2026 தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுர ஆகிய 2 மாவட்டங்களிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். 

ராகுல் காந்தி ; பீகாரில் நடந்தது நியாயமற்ற தேர்தல்

 மின்னம்பலம் - Kavi  : பீகார் சட்டமன்றத் தேர்தலில் ‘மகாகத்பந்தன்’ கூட்டணி தோல்வியடைந்த நிலையில், இத்தேர்தல் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பீகாரில் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. காங்கிரஸ்- ஆர்ஜேடி அடங்கிய மகாபந்தன் கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தல் முடிவு குறித்து தனது எக்ஸ் பக்கம் மூலம் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்த கோடிக்கணக்கான பீகார் வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரின் இந்த தேர்தல் முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நியாயமானதாக இல்லாத ஒரு தேர்தலில், எங்களால் வெற்றி பெற முடியவில்லை.

புதுக்கோட்டை திமுக தூண் பெரியண்னன் நினைவு பகிர்வு

No photo description available.

 சுப.மோகன் ராஜ் : மரியாதைக்குரிய புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட கழக செயலாளர், தலைவர் கலைஞரின் புலிப்போத்து, 89ல் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், மீண்டும் 96லும் அங்கே வெற்றி பெற்று கழக அரசின் கொறடா வாக பொறுப்பு வகித்தவர்,
89 சட்டமன்ற தேர்தலில் பணபலத்தால் தேர்தலை எதிர்கொண்ட ஆர்எம்.வீ யை தன்னுடைய தொண்டர்கள் பலத்தால் வெற்றி கொண்டவர். 
91ல் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும் கழகம் அறிவித்த வேட்பாளர் மட்டையம்பட்டி விஎன்.மணி அவர்களுக்காக சுற்றி சுழன்று பணியாற்றியவர். கெடுவாய்ப்பாக அன்றைய சூழலில் ராஜீவ் மரணத்தால் ஏற்பட்ட அசாதாரண சூழல் கழக வேட்பாளரின் வெற்றியை பாதித்தது.
93ல் மதிமுக பிரிவினையின் போதும் கழகத்தை கட்டிக்காத்த பெருமை அமரர் பெரியண்ணன் அவர்களுக்கு உண்டு.
96 தேர்தலில் வெற்றிபெற்று கழக அரசின் கொறடாவாக பொறுப்பு வகித்த நேரத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

வெள்ளி, 14 நவம்பர், 2025

பொன்ரார்ஜ் : பாஜகவை வீழ்ந்த தலைவர்கள் மக்களை திரட்டி தெருவிற்கு வந்து போராட வேண்டும்.

 Vimalaadhithan Mani  : விஞ்ஞானி பொன்ராஜ் சொல்லும் தீர்வு இதுதான்..
#பாஜக + தேர்தல்ஆணையத்தின் கூட்டணியை வீழ்த்த விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் கடந்த ஆறுமாதமாக எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தும் தீர்வு இது தான்..
ராகுல்காந்தி வாக்கு திருட்டை வெளிப்படுத்துவதால் மட்டும் மாற்றம் பாஜகவை தோற்க்கடிக்க முடியாது..
ராகுல் காந்தியும் // பல மாநில கட்சி தலைவர்கள் தனிதனியாக போராடூவதால் பாஜகவை தோற்கடிக்க முடியாது..
உச்ச நீதிமன்றத்தில் வாக்கு திருட்டு மற்றும் S.I.R. உள்ளிட்டவற்றை எடுத்து சென்றாலும் கிடப்பில் போடப்படும். அதனாலும் பாஜகவை வீழ்த்த முடியாது..

பீகார் தில்லுமுல்லு .. ஸ்டாலின் ஆய்வரங்கம் .. வெளியாகும் 2 அதிரடி அறிவிப்புகள்!

 மின்னம்பலம் :  பீகார் தேர்தல் ரிசல்ட் தெறித்தனமான இருக்கே.. பாஜக- ஜேடியூ கூட்டணி அமோகமாக அறுவடை செஞ்சிருக்கு.. ராகுல் அவ்வளவு நீச்சலடிச்சு பிரசாரம் செஞ்சும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சீட்தான்.. பாவம்யா.. ராகுலுடன் சேர்ந்த தேஜஸ்வியின் ஆர்ஜேடியும் படுபாதாள குழியில விழுந்துருச்சே..
சரி.. பரிதாப்பட்டது போதும்.. வடக்கதான் வெடி வெடிச்சுட்டாங்க.. தெக்க எங்க இடி இடிச்சது?
சொல்றேன்யா.. பீகார் ரிசல்ட் பத்தி திமுகவின் மூத்த அமைச்சர்கள், சீனியர்கள் எல்லாம் டிஸ்கஷன் செஞ்ச கையோடு சிஎம்கிட்டயும் பேசி இருக்காங்க..
இந்த ஆலோசனைகளில் பேசிய திமுக சீனியர்கள், “பீகாரில் ஆர்ஜேடி தேஜஸ்விகிட்ட காங்கிரஸ் ரொம்பவே மல்லுகட்டி அதிக சீட் கேட்டுச்சு.. காங்கிரஸுக்கு அதிக சீட் கொடுத்தா தோல்வி கன்பார்முன்னு தேஜஸ்வி ரொம்பவே பிடிவாதம் பிடிச்சும் பார்த்தாரு.. ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால 61 சீட் வாங்கி காங்கிரஸ் போட்டியிட்டுச்சு.. இப்ப என்னடான்னா 5 சீட்டுதான் ஜெயிச்சுருக்கு.. குழியையும் பறிச்சது இல்லாம குதிரையையும் கீழே தள்ளிவிட்ட கதையா தேஜஸ்வி கட்சிக்கும் அடி விழுந்துருக்கு.. ராகுல் காந்திக்கு இவ்வளவுதான் செல்வாக்கு போல..

சித்தராமையா பீகார் தேர்தலிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது!

 மாலை மலர்  : பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

வியாழன், 13 நவம்பர், 2025

சீனாவில் ரூ.50,000 கோடி மோசடி: லண்டனில் சிக்கிய யாடி ஷாங்!

 தினமலர் : லண்டன்: சீனாவில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிவிட்டு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தஞ்சம் புகுந்த மோசடி ராணி, விரைவில் தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார்.
கடந்த 2021ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்க முயன்றார்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், அவ்வளவு பெரிய தொகையை லண்டனில் முதலீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவர் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்கவில்லை.
இதையடுத்து, லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத் அருகே, மாதம் 18 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து அவர் வசித்த ஆடம்பர மாளிகையில் போலீசார் சோதனை நடத்தினர்.

பீகாரில் தேஜஸ்வி ஆட்சி அமைக்கிறார்! அடித்து சொல்கிறார் தேஜஸ்வி

 மாலை மலர்  :  பாட்னா  பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலா 101 தொகுதிகள், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

கொழும்பு கொலையில் யாழ்ப்பாண போதைப்பொருள் கடத்தல் குழு தொடர்பு! கைக்குண்டு வாள் அகப்பட்டது

ceylonmirror.net  : வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகக் கைது – நேற்றும் இருவர் வாள், கைக்குண்டு, ஹெரோயினுடன் சிக்கினர்.
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பிரபல வன்முறைக் கும்பல் ஒன்றின் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட நபரும், அவரது சகாவும் நேற்று இணுவில் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேற்படி இருவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, வன்முறைக் கும்பலின் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட நபரின் உடைமையில் இருந்து 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தமிழகத்தில் 78 சதவிகிதம் SIR படிவங்கள் விநியோகம்

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : தமிழகத்தில் 78 சதவிகிதம் SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதைபோல் தமிழகத்திலும் நடைபெறும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

புதன், 12 நவம்பர், 2025

எஸ் வி சேகர் இந்திய தேர்தல் ஆணையருக்கு அதிரடி கேள்விகள்

May be an image of one or more people and people smiling

 Rebel  Ravi  : சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்கும்படி கோரிக்கை வைத்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்! 
தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6 கோடியே 36 லட்சம்.
ஒருவருக்கு இரண்டு எஸ்ஐஆர் விண்ணப்பம் கொடுத்தால் 12 கோடியே 72 லட்சம் விண்ணப்பம் பிரிண்ட் செய்தாகி விட்டதா? 
இந்த பணியில் எத்தனை ஊழியர் பயன்படுத்தப்படுகிறார்கள்? 
ஒருவர் ஒரு நாளில் எத்தனை வாக்காளர்களை தொடர்பு கொள்வார்கள்? 
சனி, ஞாயிறு வேலை செய்வார்களா? 
குறைந்தது இருமுறை ஒரு வாக்காளரை தொடர்பு கொள்ள வேண்டும்.
விண்ணப்பம் கொடுக்க, திரும்ப வாங்க எத்தனை நாள் ஆகும்? 
எழுதப்படிக்காதவர்கள் 50 லட்சம் பேர் இருந்தால்,
அவர்களின் விண்ணப்பங்களை எப்படி, யாரை வைத்து நிரப்புவீர்கள்? 
வாக்காளரின் அனைத்து விவரங்களும் ஆதார் அட்டையில் உள்ளபோது அதை ஏன் வாக்காளர் அட்டையுடன் இணைக்கவில்லை? 

செவ்வாய், 11 நவம்பர், 2025

விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள் - டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் !

 BBC News தமிழ் : டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெடிப்பு நடந்த இடத்தில் புலனாய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திங்கட்கிழமை மாலையில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் எட்டு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த உடனேயே காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் சம்பவ இடத்தை அடைந்தன.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் பின்வரும் நான்கு கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

டெல்லி கார் குண்டு வெடிப்பு 13 பேர் உயிரிழப்பு

 மின்னம்பலம் மதி : டெல்லி செங்கோட்டை அருகே 10 பேரை பலி கொண்ட கார் குண்டு வெடிப்பு நிகழ்விடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.
டெல்லியில் இன்று இரவு சுமார் 7 மணியளவில் செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்ட கார் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் அருகே இருந்த வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன. பயங்கர சப்தத்துடன் கார்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் அங்கிருந்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

திங்கள், 10 நவம்பர், 2025

ராகுல் காந்தி : வாக்குத் திருட்டிற்காக மோடியும், அமித் ஷாவும் பிடிபடுவார்கள்.

 மாலை மலர்  :  பீகாரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நிலையில் கிஷன்கஞ்ச் தொகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
அவர் கூறியதாவது, "எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது.
பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.

ஞாயிறு, 9 நவம்பர், 2025

70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம் - நவ. 10ல் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

 hindutamil.in  : சென்னை: 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நாளை தொடங்கி வைக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாளை (10.11.2025) சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து, திருக்கோயில் சார்பில் ரூ. 3.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை திறந்து வைக்கிறார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெரும் குற்றக்கும்பல் புலிகளுடன் கூட்டணி: உளவு பிரிவு கடும் எச்சரிக்கை

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%3A+%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

 hirunews.lk  : இந்தியாவில் இயங்கும் தாவூத் இப்ராஹிம் குற்றக்கும்பல் (டி-சிண்டிகேட்) மற்றும் விடுதலைப் புலிகளின் எஞ்சிய பிரிவினருக்கும் இடையே உருவாகி வரும் புதிய, அபாயகரமான கூட்டணியைக் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வட இந்தியாவில் காவல்துறை நடவடிக்கைகளால் பெரும் இழப்பைச் சந்தித்த டி-சிண்டிகேட்,தற்போது தமது போதைப் பொருள் வர்த்தகத்தை விரிவுபடுத்த தென்னிந்தியா மற்றும் இலங்கையை குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக அந்த அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் பழைய வலையமைப்பை நாடிச் சென்றுள்ளது.
இந்தக் கூட்டணியில், டி-சிண்டிகேட் தமது பணபலத்தையும் சர்வதேச அணுகலையும் வழங்குகிறது. பதிலுக்கு, விடுதலைப்புலிகளின் எஞ்சிய குழுக்கள் பாக்கு நீரிணை உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் குறித்த ஆழமான உள்ளூர் அறிவு மற்றும் தளவாட ஆதரவை வழங்குகின்றன.