| Arjuna Ramanathan MP |
தோழர் திருமாவை மிக தரம் தாழ்ந்த சொற்களால் திரு அர்ஜுனா ராமநாதன் எம்பி தனது முகநூலில் பதிவிட்டு உள்ளார். அவர் குறிப்பிட்டது
யார்ரா இந்த டிங்கி
எனக்கு அரசியல் சரியாக தெரியாது
ஆனா நிக்கிற இடத்தை பார்த்தா ஏதோ குனா சூனா மாதிரி தெரியுது?
தோழர் திருமாவளவன் பற்றி இவ்வளவு மோசமான சொற்களால் குறிப்பிட்டமை,
ஒரு ஜாதி வெறி வாந்தியாகத்தான் எனக்கு தோன்றுகிறது.
அதென்ன டிங்கி?
அதென்ன குனா சூனா?
ஒரு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த பதிவில் மூலம் என்ன கருத்தை இவர் சொல்ல வருகிறார்?
மூச்சுக்கு மூச்சு தேசிய தலைவர் மாவீரர் தமிழீழ மண் என்று சதா ஓங்கி ஒலிப்பவரின் உள்ளத்தின் அடியில் என்ன உள்ளது என்பதை இதைவிட தெளிவாக யாராலும் சொல்லி விட முடியாது
செல்வநாயகமும் பிரபாகரனும் விஷம் ஊற்றி வளர்த்த தமிழ் பேரினவாதம் என்பது இதுதான்
எந்தவித முற்போக்கு சிந்தனையோ சுயமரியாதை பண்போ சமூக நீதி பற்றிய புரிதலோ அற்ற ஒரு வெறுப்பு அரசியலை அன்று எஸ்ஜேவி செல்வநாயகம் விதைத்து விட்டுப்போய் சேர்ந்து விட்டார்.
அந்த விஷ செடியில் இருந்து பூக்கும் அத்தனை பூக்களும் இது போன்ற நச்சு பூக்கள்தான் என்பதை
இன்று அர்ச்சுனா ராமநாதனும் நிரூபித்து விட்டார்.
தோழர் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
இந்த கட்சிக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு எம்பிக்கள் உள்ளனர்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான்கு உறுப்பினர்கள் உள்ளனர்
எல்லாவற்றிலும் பார்க்க இந்தியா முழுவதும் வேகமாக செல்வாக்கு பெற்று வரும் தலித்திய தலைவர்
அகில இந்திய அளவில் செல்வி மாயாவதிக்கு அடுத்த இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்து வரும் ஒரு முற்போக்கு தலைவர்..
திரு அர்ச்சுனா ராமநாதன் தனக்கு அரசியல் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்
எனவேதான் அவருக்கு இந்த தகவல்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக