Sri lanka Flood:வீரகேசரி : சமீபத்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வெள்ளம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பு முழுவதும் பெரும் அளவில் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என்று நீரியல் & பேரிடர் மேலாண்மைக்கான இயக்குநர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது பெய்து வரும் கனமழை, மேல் களனி நதிப் படுகையில் இருந்து வெளியேறும் மிகுந்த நீர் அளவு மற்றும் பராமரிக்கப்படும் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016க்குப் பிறகு இப்படியொரு பெரிய அளவிலான பேரழிவு எச்சரிக்கை இதுதான் முதல்முறை எனவும், வரும் மணிநேரங்கள் மிக முக்கியமானவை எனவும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
வடக்கு மாகாணத்தைத் தாக்கிய டிட்வா புயல்: மன்னார்–யாழ்ப்பாணம்–முல்லைத்தீவு மக்களுக்கு கடும் எச்சரிக்கை!
இலங்கையின் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களை சூறையாடிய டிட்வா புயல் தற்போது வடக்கு மாகாணத்தைத் தொட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இதன் தாக்கத்தால் மிகக் கனமழை, பலத்த காற்று வீசுதல் அதிகரிக்கவுள்ளதுடன், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்கரை பகுதிகளில் Storm Charge காரணமாக கடல்நீர் குடியிருப்புகளுக்குள் நுழையும் அபாயமும் அதிகரித்துள்ளது.
பல குளங்கள் கனமழையால் வான் பாயத் தொடங்கியுள்ளன; சில குளங்களுக்கு உடைப்பு அபாயமும் காணப்படுகின்றது. எனவே தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கடற்கரையோர மக்கள் அவசர அவதானத்துடன் இருந்து, தேவையானால் இரவு ஆகும் முன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக