| Hiroshima - Nagasaki |
ராதா மனோகர் : ஹிரோஷிமா நாகசாகி அன்பு பயம் பக்தி
முதல் முதலில் அணுக்குண்டு எங்கே போடப்பட்டது என்று யாரை கேட்டாலும் உடனே ஹிரோஷிமா நாகசாகி என்று கூறிவிடுவார்கள்!
இந்த பதிலில் ஒரு பெரிய மோசடி இருக்கிறது!
மிகவும் நரித்தனமாக திட்டமிட்டு ஹிரோஷிமா நாகசாகி என்ற இரண்டு ஊர்களையும் ஒரே ஊர் போல கருதும் அளவுக்கு ஒரு சொற்றொடராகவே இதை கட்டமைத்து விட்டார்கள்.
ஹிரோஷிமா 6 August 1945 Hiroshima உயிரிழப்பு 90,000–166,000 killed.
நாகசாகி 9 August 1945Nagasaki உயிரிழப்பு 60,000–80,000 killed.
அணுகுண்டின் கொடூரத்தையயும் ஹிரோஷிமா நகரின் அழிவையும் பார்த்த பின்பு சரியாக மூன்று நாட்களுக்கு பின்பு இரண்டாவது அணுகுண்டை நாகசாகி துறைமுகத்தில் அமெரிக்கர்கள் வீசினார்கள்!
அதாவது முதல் குண்டு விழும் முன்பே ஜப்பான் அமெரிக்காவிடம் ஓரளவு சரணாகதி அடைந்து விட்டது என்றுதான் கூறப்படுகிறது.
இரண்டாவது அணுகுண்டை வீசவேண்டாம் என்று ஜப்பான் உரத்து ஓலமிட்டது . ஆனாலும் அமெரிக்கா அதை கேட்டுக்கொள்ளாமல்,
மூன்றாவது நாள் இரண்டாவது அணுகுண்டையும் வீசியது!
இது என்ன மனோநிலை என்று சிந்திக்க வேண்டும்.
இதன் காரணமாக முழு உலகமே அமெரிக்காவை காரி உமிழ தொடங்கியது.
நிலையின் தீவிரத்தை புரிந்து கொண்ட அமெரிக்க வார்த்தை விளையாட்டில் இறங்கியது.
ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற நம்பிக்கையில் ஹிரோஷிமா நாகசாகி என்று அன்றில் இருந்து இன்றுவரை இணைத்தே கூறுகிறார்கள் .
முதல் குண்டுக்கு ஏதாவது போலி காரணத்தைதானும் கூறலாம்.
ஆனால் இரண்டாவது குண்டுக்கு என்ன காரணம் கூறமுடியும்?
வெறும் மிருகத்தனம் என்பதை தவிர வேறு ஏதேனும் காரணம் உண்டா?
அமெரிக்கர்கள் இந்த வார்த்தை விளையாட்டில் இன்றுவரை கொஞ்சம் வெற்றி அடைத்து கொண்டே வருகிறார்கள்!
பலருக்கும் அமெரிக்க இரண்டு தடவைகள் அணுகுண்டை வீசியுள்ளது என்று உறைப்பதே இல்லை.
இதே போல வெறும் வார்த்தை விளையாட்டில் இந்துமதமும் சளைத்ததல்ல!
அன்பு பயம் பற்றிய வார்த்தை விளையாட்டை பற்றிய எனது பழைய பதிவு ஞாபகத்திற்கு வருகிறது.
படித்து பாருங்கள்!
கீரன் : பக்தி அப்படீனா என்ன.?
சங்கரன் : பக்தின்னா அன்பு..!
கீரன் : அன்புன்னா அன்புன்னு சொல்ல வேண்டியதுதானே? அதென்ன பக்தி ...யுக்தி?
சங்கரன் : சாதாரண மனிதர்களுக்கு இடையே இருப்பது அன்பு .கடவுளிடம் நமக்கு இருப்பது பக்தி!
கீரன் : ஓஹோ .. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
சங்கரன் : கடவுள் நம்மைவிட ரொம்ப உசத்தி!
வெறும் அன்புன்னு சொன்னா?
அது மதிப்பில்லை அதனாலேதான் பக்திங்கிறோம்..!
கீரன் : அதாவது கொஞ்சம் பயம் கலந்த அன்புன்னு வச்சுக்காமா..?
சங்கரன் : அதே அதே .. அதான் பக்திங்கிறது !
கீரன் : பயம் இருக்கும் இடத்தில் வெறுப்புதானே இருக்கும்? அன்பு எப்படி வரும்கிறேன்.?
சங்கரன் : இது விதண்டாவாதம் .. அது வேற இது வேற ... அது அன்பு இது பக்தி!
கீரன் : அதான் அது என்னங்கிறேன்..?
சங்கரன் : இதெல்லாம் வீண் விவாதம்!
கீரன் : அதாவது பெரியவாகிட்ட பதில் இல்லை சரியா..?
சங்கரன் : எல்லாம் தெரிஞ்சவா ஆட்டம் சொல்றியே பக்தின்னா என்னான்னு நீர் சொல்லும் ஒய்?
கீரன் : பயமும் அன்பும் நேர் எதிர் உணர்ச்சிகள்! ஒன்றை ஒன்று வெறுக்கும் உணர்வுகள், அவை ஒரு போதும் ஒரு புள்ளியில் சந்திக்காது..!
இது இரண்டையும் சேர்த்து சொதப்பி நம்மவா மூஞ்சிலே ஒரே ..... ..
உங்களவா கண்டு பிடிச்ச மிகப்பெரிய மோசடி சொல்தான் பக்திங்கிறது.
அப்படி ஒரு விடயமே இல்லை ..
வெறும் பயம்கிறதை .. அன்புன்னு பெயிண்டு அடிச்சு ஏமாத்தறீங்க சாமி!
சங்கரன் : நீ சொல்ற மாதிரி கூட இருக்கலாம் .. ஆனா இதை ஊரில எவன் நம்புவான் ?
பக்தின்னா முக்கால்வாசி பேர் கன்னத்தில போட்டுக்குவான்!
கீரன் : வரலாற்றில் முக்கால் வாசிபேர் தவறான சிந்தனை உடையவர்கள்தான் என்பதுதான் புள்ளிவிபரம்.
ஆனா முக்கால்வாசி இருட்டுக்கும் ஒரு சிறு விளக்கு போதுமே சாமி?
அறிவு என்பது ஒரு ஒளிவிளக்கு..! மீள்பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக