hirunews : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறினாலும், நெருக்கமான மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் அவரது குடும்ப மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணிப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக