ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

இந்து பத்திரிகையின் திராவிட ஒவ்வாமை எழுத்து பணி

May be an image of 1 person and text that says 'அமெரிக்க வரி நெருக்கடி மீதான மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானது COR0 தமிழினி 30 Aug, 30Aug.2025 Aug.2025 2025'

 ராதா மனோகர் : அமெரிக்க வரி நெருக்கடி மீதான மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானது..
இது ஒரு செய்தி தலைப்பு  -  இந்து பத்திரிகையின் ஊடக அறம்.
அதாவது போதுமானது அல்ல என்றுதான் சொல்ல வந்தார்களாம் 
தலைப்பில் தங்களின் பச்சை பொய் பிரசாரத்தை செய்துள்ளார்கள் 
முதல்  ஒன்பது சொற்களை உள்நோக்கத்தோடு தெளிவாக போட்டுள்ளார்கள் 
முதல்வர் ஸ்டாலினின் படமும் போட்டுள்ளார்கள் 
முதலில் வரும் சொற்கள்தான் அந்த வரிசைப்படி அந்த செய்தியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும்.  இது  இன்றைய  ஆன்லைன் காலத்தில் எல்லோருக்கும் நன்றாக தெரியும்!
முதல்வர் ஸ்டாலின் படத்தை போட்டதன் மூலம் இது அவர் கூறியது என்பது போல வாசகர்கள் கருதுவார்கள் 
அதாவது மத்திய அரசின் நடவடிக்கை போதுமானது என்று ஸ்டாலின் கூறியதாகத்தான் கருதுவார்கள் 



தலைப்புக்களை வாசிக்கும் எல்லோரும் விலாவாரியாக செய்திகளை முழுவதும் வாசிப்பார்கள் என்று  யாரும் நம்புவதில்லை.  
செய்திகளின் தலைப்புக்களும் படமும் முக்கியம் 
அதிலும் செய்தி தலைப்புக்களில் முதல் வரும் சொற்கள் மிக மிக முக்கியம் 

இன்னும் பல ஊடக அறிவாளிகளுக்கு இந்த வித்தை தெரியாது என்பதுவும் கூட உண்மைதான்.
எந்த செய்தியையும் மக்களுக்கு எப்படி கொண்டு போய் சேர்க்கலாம் என்பது மிக நுட்பமான விடயம் 

தினமலர் இந்து தினமணி போன்ற பல பத்திரிகைகள்  காலகாலமாக திராவிட ஒவ்வாமையை கட்டி எழுப்பியது இந்த மாதிரி தில்லாலங்கடி   வித்தைகளால்தான்.
இந்த நுட்பங்களை புரிந்தவர்கள் திராவிட இயக்கங்களில் அல்லது திமுகவில்  இருக்கிறார்களா என்ற கேள்விக்கு  பதில் தேடவேண்டிய அவசியம் இருக்கிறது.  
 
பிற்சேர்க்கை : அந்த காலத்து இலங்கை தமிழ் பத்திரிகைகள் இதே பாணியில்தான் திராவிடத்தை இலங்கையில் இருந்து அடியோடு காணாமல் போக செய்தார்கள்
அவர்களில் முதன்மையானவர் திருவாரூர் கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் ( வீரகேசரி - ஈழநாடு)  
இரண்டாமவர்   கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட கே. வி. எஸ். வாஸ் ( வீரகேசரி)
மூன்றவர் மகேஸ்வர சர்மா எனப்படுபவர் (சுதந்திரன் )
இலங்கையில் நீண்ட வரலாற்றையும் அதிக வாசகர்களையும் கொண்ட பத்திரிகைகளின் ஆசிரியர்கள் இவர்கள்.
இவர்களின் நாசூக்கான ஆரிய விஷ எழுத்துக்களை படித்தால் பல நாட்கள் தூக்கம் தொலைந்து விடும்,
இவர்களின் எழுத்துக்கள்  சுயசிந்தனையையும்  சுயமரியாதையையும்  மழுங்கடித்த ஆயுதங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக