சனி, 12 ஜூலை, 2025

இந்துத்துவத் திரைப்படங்களில் நாஜி பிரச்சாரத்தின் தாக்கம்!

 மின்னம்பலம் - Kavi : ஹர்ஷ் மந்தர்
இந்திய மக்களுக்கும் அவர்களின் பிரபலமான சினிமாவுக்கும் இடையே உள்ள தனித்துவமான உறவு காரணமாக, திரைப்படங்கள் பெரும்பாலும் ஒரு காலக்கட்டத்தின் ஆதிக்கச் சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கின்றன. அவை அரசியல், சித்தாந்தச் செய்திகளைக் கொண்டுள்ளன. influence of Nazi propaganda on Hindutva films
1950களிலும் 60களிலும், இந்தி சினிமா நல்லிணக்கம், பன்முகத்தன்மை, அநீதிகளை எதிர்த்தல் ஆகியவற்றைக் கொண்டாடி, மென்மையான சோஷலிசம், காந்திய மனிதநேயம் ஆகியவற்றைப் பிரதிபலித்தது. ‘மதர் இந்தியா’, ‘ஆவாரா’, ‘தர்மபுத்ரா’ போன்ற பிரபலமான திரைப்படங்கள், இடதுசாரிக் கவிஞர்களின் பாடல்களைக் கொண்டு, மதச்சார்பின்மை, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, சமூக நீதியை முன்னிறுத்தின.


1990களுக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித் இயக்கத்தைத் தொடர்ந்து, புதிய இந்தியா உருவானது. தாராளமயச் சூழலில் மேலும் துருவப்படுத்தப்பட்ட நிலையை எட்டியது. விவசாயிகளும் ஏழைகளும் திரைப்படங்களிலிருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக மேல்தட்டு நடுத்தர வர்க்க அபிலாஷைகள் முன்னிலை பெற்றன. முக்கியமாக, முந்தைய தசாப்தங்களின் மென்மையான முஸ்லிம் உருவங்கள் மாஃபியா, மதவெறியர்கள், பயங்கரவாதிகளின் சித்தரிப்புகளாக மாறின.

மோடி காலத்தின் இந்துத்துவ சினிமா புதிய, மிகவும் ஆபத்தான அவதாரத்தைக் குறிக்கிறது. முந்தைய அரசியல் படங்களைப் போலல்லாமல், இவை தங்கள் மதவெறியை மறைக்காமல் வெளிப்படுத்துகின்றன. அவை உண்மையைக் கூறுவதாகப் பாசாங்கு செய்வதைக் கைவிட்டு, கூர்மையான, ஆணித்தரமான, வெறுப்பு நிறைந்த தொனியுடன், பிளவுபடுத்தும் சித்தாந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக வரலாற்று நிகழ்வுகளையும் சமகால நிகழ்வுகளையும் அப்பட்டமாகத் தவறாகச் சித்தரிக்கின்றன.

இந்தத் திரைப்படங்கள் நாஜி ஜெர்மனியில் நடந்தது போலவே, உயர்மட்ட அரசியல் தலைவர்களால் பகிரங்கமாகப் பாராட்டப்படுகின்றன. பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் திரைப்படக் காட்சிகளில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கும், மேலும் கவலைக்கிடமாக, சீருடைப் படைகளுக்கும் அவற்றைப் பாராட்டுகின்றனர். அவை வரிச் சலுகைகள், அதிகாரப்பூர்வ ஆதரவு மூலம் பொது நிதியுதவி பெறுகின்றன.
influence of Nazi propaganda on Hindutva films

‘சாவா’ (2025) என்ற திரைப்படத்தைப் பாருங்கள். இது ஒரு ஆடம்பரமான ஆனால் வரலாற்று ரீதியாகச் சந்தேகத்திற்குரிய திரைப்படம். இது மராத்தா ஆட்சியாளர் சம்பாஜியை ஒரு கொடூரமான முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்புக்கு எதிராகத் தனது மதத்தைப் பாதுகாக்கும் ஒரு வீரமிக்க இந்துவாகச் சித்தரித்தது. வரலாற்றாசிரியர்கள் சம்பாஜியைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட பதிவுகளைக் கொடுத்தபோதிலும், திரைப்படத்தின் மிகைப்படுத்தப்பட்ட சித்தரிப்பு பரவலாக எதிரொலித்து, இணையத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டியது. முஸ்ளிம்களின் இடங்களைத் தாக்குவது, ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோருவது போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கும் இப்படம் வழிவகுத்தது. 

இத்தகைய வெறித்தனத்தை இப்படம் தூண்டியபோதிலும், பிரதமர் மோடி இந்தத் திரைப்படத்தை “மேம்பட்ட இந்தி சினிமா” என்று கூறி ஆரவாரமாகப் பாராட்டினார். மகாராஷ்டிரா முதலமைச்சர், பின்னர் வன்முறைக்கு இந்தத் திரைப்படமே காரணம் என்று குற்றம் சாட்டினாலும், ஆரம்பத்தில் அதன் வரலாற்றுத் திருத்தவாதத்தை ஆதரித்தார்.

இதேபோல், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ (2022), காஷ்மீரி பண்டிதர்களின் வெளியேற்றம் குறித்த வரலாற்றுப் பதிவைச் சரிசெய்வதாகக் கூறிக்கொண்டது. ஆனால், இது உயிரிழந்த இந்துக்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்டியதுடன், காஷ்மீரின் முழு முஸ்லிம் மக்கள்தொகையையும் ரத்த வெறி பிடித்தவர்களாகச் சித்தரித்தது. காஷ்மீர் வன்முறைக்கு இடதுசாரி கல்வியாளர்களையும் காங்கிரஸ் கட்சியையும் குற்றம் சாட்டியது. நாவலாசிரியர் அருந்ததி ராய், இந்தத் திரைப்படம் காஷ்மீரி பண்டிதர்களை இந்திய இந்துக்களின் பிரதிநிதிகளாகப் பயன்படுத்தியதையும், அனைத்து முஸ்லிம்களையும் மோசமான கசாப்புக்காரர்களாகச் சித்தரித்ததையும் சுட்டிக்காட்டினார். 
influence of Nazi propaganda on Hindutva films

இந்தத் திரைப்படமும் வெறுப்பைத் தூண்டி, திரையரங்குகளில் முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களுக்கும், வகுப்புவாத வன்முறைக்கும் வழிவகுத்தது. பிரதமர் மோடி இந்தப் படத்தையும் உண்மையின் சித்தரிப்பு என்று கூறி, “அனைவரும் அதைப் பார்க்க வேண்டும்” என்று பரிந்துரைத்தார். பாஜக தலைமையும் அதை வெளிப்படையாக ஆதரித்தது.

‘தி கேரளா ஸ்டோரி’ இந்தப் போக்கிற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இது “லவ் ஜிஹாத்” என்ற கட்டுக்கதையைச் சொல்கிறது. முஸ்லிம் ஆண்கள் இந்து, கிறிஸ்தவப் பெண்களை மதமாற்றம் செய்து, பயங்கரவாதத்தில் ஈடுபடத் தூண்டுகிறார்கள் என்று இந்தப் படம் கூறுகிறது. இதன் கூற்றுகள் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, படத்தில் மறுப்பு அறிவிப்பைச் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், இந்தத் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான வெறுபையும் வன்முறையையும் தூண்டியது. இதையும் பிரதமரும் இதர பாஜக அரசியல் தலைவர்களும் மெச்சிக்கொண்டார்கள். இந்தப் படத்திற்கும் குறிப்பிடத்தக்க அரசியல் ஆதரவும் வரி விலக்குகளும் கிடைத்தன. 
influence of Nazi propaganda on Hindutva films

இந்துத்துவத் திரைப்படங்கள் தொடர்ந்து ஆதிக்கக் கருத்துக்களைப் பயன்படுத்துகின்றன: வரலாற்றைத் தவறாகச் சித்தரித்து மத்தியகால முஸ்லிம் ஆட்சியாளர்களைக் கொடூரமான படையெடுப்பாளர்களாகவும், இந்து ஆட்சியாளர்களை உன்னதமான வீரர்களாகவும் காட்டுகின்றன; சமகால முஸ்லிம்கள் மீது “லவ் ஜிஹாத்”, “மக்கள் தொகை ஜிஹாத்” போன்ற சதிக் கோட்பாடுகளையும், தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்துகின்றன; ஹிட்லரின் இனப்படுகொலைக் கொள்கைகளை ஆதரித்த சாவர்க்கர் போன்ற இந்துத்துவ நாயகர்களின் புனிதமான சுயசரிதைகளை உருவாக்குகின்றன. இது பிரதமரின் வாழ்க்கை வரலாறு படத்திலும் காணப்படுகிறது. மேலும் அவை அரசியல் எதிர்ப்பாளர்களையும் இழிவுபடுத்துகின்றன, குறிப்பாக காங்கிரஸ் கட்சியையும் இடதுசாரிக் கல்வியாளர்களையும் சமூக ஆர்வலர்களையும் இழிவுபடுத்துகின்றன.

அரசாங்கத்தின் தாராளமான ஆதரவு, வரி விலக்குகள் ஆகியவை இருந்தபோதிலும், இந்தத் திரைப்படங்களில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளாக அமையவில்லை. ஆனால், அவற்றின் முதன்மை நோக்கம் நிதி இலாபம் அல்ல. மாறாக, அவை இந்துத்துவச் சித்தாந்தத் திட்டத்தின் சக்திவாய்ந்த கூறுகளாகச் செயல்படுகின்றன. ஹிட்லர், கோயபல்ஸ் அகியோர் நாஜி பிரச்சாரத்திற்காக சினிமாவைப் பயன்படுத்தியது போலவே, இந்தத் திரைப்படங்களும் தங்கள் உலகக் கண்ணோட்டத்தையும் அரசியல் அணுகுமுறைகளையும் மில்லியன் கணக்கானவர்களிடையே பரப்ப உதவுகின்றன.
influence of Nazi propaganda on Hindutva films

இந்துத்துவத் தலைவர்கள் ஹிட்லர், நாஜி ஜெர்மனியின் திட்டத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டனர். பிரச்சாரத்திற்கான சினிமாவின் அளப்படிய ஆற்றலை உணர்ந்த நாஜிகள் திரைப்படத் துறையை நிறுவினர். எதிர்ப்புக் கருத்துக்களைத் தணிக்கை செய்தனர், உணர்வுகள், நம்பிக்கைகளின் மீது தாக்கம் செலுத்தத் திரைப்படங்களைப் பயன்படுத்தினர். போர்க்காலத்திலும் திரையரங்குகளைத் தொடர்ந்து இயங்கவைத்தனர். அவற்றில் இத்தகைய பிரச்சாரத் திரைப்படங்களைத் தொடர்ந்து திரையிட்டனர்.

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், ஜனநாயக முகமூடியை அணிந்திருந்தாலும், இந்திய முஸ்லிம்கள், இடதுசாரி-தாராளவாத எதிர்ப்பாளர்களைத் தீயவர்களாகச் சித்தரிப்பது உட்பட, தனது சித்தாந்தக் கண்ணோட்டத்தைப் பரப்ப சினிமாவைப் பயன்படுத்துகிறது. இந்துத்துவச் சித்தாந்தவாதிகள் ஹிட்லரையும் அவரது கொள்கைகளையும் போற்றிய வரலாற்றைக் கருத்தில் கொண்டால் இது இதன் அபாயத்தை உணரலாம்.

நாஜி சினிமா யூதர்களுக்குச் செய்தது போலவே, இந்துத்துவச் சித்தாந்த திரைப்படங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாகுபாட்டையும் வன்முறை வெறுப்பையும் தூண்டுவதற்காக வரலாற்றையும் சமகால நிகழ்வுகளையும் தவறாகச் சித்தரிக்கின்றன. முஸ்லிம்கள் நாட்டிற்கு “உள்ளே இருக்கும் விசுவாசமற்ற எதிரிகள்” என்று காட்டப்படுகிறார்கள். அவை அரசியலில் உள்ள எதிர்ப்பையும், சிவில் உரிமைக்காகப் போராடுவபவர்களையும் இழிவுபடுத்துகின்றன.

இத்தகைய திரைப்படங்கள், நம்பிக்கையின்மையைத் தூண்டி, வெறுப்பை நிலைநாட்டுவதன் மூலம், சுதந்திர இந்தியாவின் நாகரிகமான அரசியலமைப்பின் ஆன்மாவைக் கலைக்க முனையும் இந்துத்துவத் திட்டத்தின் மையமாக உள்ளன.

(ஷர்ஷ் மந்திர் கட்டுரையின் சுருக்கமான வடிவம் இது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக