tamil.filmibeat.com - Mari S : சென்னை: கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாத நிலையில்,
20 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் மூலம் வரவேண்டிய தொகையில் 30 கோடி வரை அடிபடும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்ற நிலையில்,
கமல்ஹாசன் அதை சமாளிக்க என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தக் லைஃப் திரைப்படத்துக்கு மக்கள் மத்தியில் கொஞ்சம் கூட வரவேற்பு கிடைக்காத நிலையில், ராஜ்கமல் நிறுவனம் சார்பாக எந்தவொரு முட்டுக் கொடுக்கும் வேலையும் நடைபெறவில்லை என்பதே ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
Netflix now raised a request to Kamal Haasan for sooner Thug Life OTT release
பாசிட்டிவ் விமர்சனங்களை பப்ளிக்கிடம் இருந்து பெற்று வெளியிடுவது, ஃபேக்கான வசூல் கணக்கை வெளியிடுவது, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என கும்மி அடிப்பது உள்ளிட்ட எதையுமே ராஜ்கமல் நிறுவனம் செய்யாமல், உங்கள் அபிமான திரையரங்குகளில் படம் ஓடுகிறது, டைம் இருந்தால் போய் பாருங்க என்கிற ரீதியில் மட்டுமே புரமோஷனை மொத்தமாக குறைத்து விட்டனர்.
நெருக்கடி கொடுக்கும் நெட்பிளிக்ஸ்: ஒரு பக்கம் குபேரா படத்துக்கு அமேசான் பிரைம் தரப்பில் இருந்து ரிலீஸ் நெருக்கடி பிரச்னை எழுந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தக் லைஃப் படத்துக்கு தற்போது ஓடிடி ரிலீஸ் தேதியை திட்டமிட்டபடி 8 வாரங்கள் எல்லாம் காத்திருந்து வெளியிட்டால் கம்பெனிக்கு கட்டுப்படியாகாது என்றும் ஏற்கனவே நீங்க கொடுத்த பில்டப்பை நம்பி பெரிய தொகை கொடுத்து வாங்கிவிட்டோம் என நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
28 நாட்களில் படத்தை போடணும்: 8 வாரத்துக்கு பதிலாக வழக்கம் போல 4 வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானால் தான் நாங்களும் கொஞ்சமாவது இந்த படத்தை மக்களிடம் காட்டி லாபத்தை பார்க்க முடியும் என்கிற கோரிக்கையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தியேட்டரில் இப்பவே தக் லைஃப் திரைப்படம் காத்து வாங்கும் நிலையில், கமல்ஹாசனும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் முடிவுக்கு செவி சாய்ப்பாரா? அல்லது சொல்லி விட்டோமே என்பதற்காக 8 வாரங்கள் வரை வெயிட் பண்ண சொல்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
30 கோடி போயிடும்: ஒருவேளை கமல்ஹாசன் நெட்பிளிக்ஸின் கோரிக்கையை நிராகரித்து விட்டால், 80 கோடி ரூபாய் கொடுப்பதாக சொன்ன இடத்தில், வெறும் 50 கோடி மட்டுமே ஓடிடி நிறுவனம் கொடுக்கும் என்கின்றனர். சுமார் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டால் பெரிய சிக்கலாகி விடும் என்பதை கமல்ஹாசன் நன்றாகவே உணர்ந்து செயல்படுவார் என்றும் கர்நாடகாவில் வேறு பிரச்னை அதற்காக அவர் தலை வணங்கவில்லை. ஆனால், இங்கே நெட்பிளிக்ஸ் வைக்கும் கோரிக்கையை அவர் அக்சப்ட் பண்ணலாம் என்றே கூறுகின்றனர்.
படம் ஓடினால் பிரச்னை இல்லை: தக் லைஃப் திரைப்படம் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தால், கண்டிப்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனமே இப்படியொரு கோரிக்கையை கமல்ஹாசனிடம் வைத்திருக்க மாட்டார்கள் என்றும் சுடச்சுட எச்.டி பிரின்ட் லீக்காகி நெட்டிசன்கள் டெலிகிராமிலேயே பார்த்து விடுவதற்கு முன்னதாக ஓடிடியில் வெளியானால், அனைவரும் வீட்டில் இருந்தே தக் லைஃப் படத்தை ஒருமுறையாவது பார்த்து விடுவார்கள் என்பதால் கமல்ஹாசன் நல்ல முடிவையே எடுப்பார் என்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக