ஞாயிறு, 8 ஜூன், 2025

Russia Hits Ukraine: ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன்

 tamil.abplive.com -  ஸ்ரீராம் ஆராவமுதன்  :  ரஷ்யாவிற்குள் ஊடுருவி ட்ரோன் தாக்குதலை நடத்திய உக்ரைனுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. 
அந்த வகையில், ஏற்கனவே ஒரு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், நேற்றிரவு மிகப்பெரும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
 இதில் உக்ரைனின் தலைநகரும் தாக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த அடித்த ரஷ்யா
உக்ரைனுக்கான பதிலடியின் ஒரு பகுதியாக, நேற்றிரவு, 400 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். கிவ்-வில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவசரகால உதவியாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள செர்னிஹிவ்-வில் 2 பேரும், லட்ஸ்க் நகரில் ஒருவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதல் உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் இன்னும் பல நகரங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. இதில் உக்ரைனின் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல அரசு கட்டடிங்கள் மற்றம் தனியர்ர் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிலத்தடி தங்குமிடங்களில் பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பதிலடி தாக்குதல் நடத்திய ரஷ்யா

ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, நேற்று முன்தினம் அதிகாலை, உன்ரைன் மீது ரஷ்யா ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் ப்ரிலுகி நகரின் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதலில், 1 வயது குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யாவின் ட்ரோன்கள் ப்ரிலுகி நகரின் குடியிருப்புப் பகுதிகளை நேற்று அதிகாலை தாக்கியதாகவும்,  அதில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் உன்ரைன் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார். 

ப்ரிலுகி நகரின் மீதான தாக்குதல் நடந்து சில மணி நேரங்களில் கார்கிவ்வின் கிழக்குப் பகுதியில் உள்ள ஸ்லேபிட்ஸ்கி நகரிலும் ரஷ்யாவின் ட்ரோன்கள் தாக்கியுள்ளன. அதில் குழந்தைகள் உட்பட சுமார் 17 பேர் காயமடைந்ததாக  பிராந்திய ஆளுநர் ஓலே சைனிஹுபோவ் தெரிவித்திருந்தார்.

ட்ரேன்கள் 2 அடுக்குமாடிக் குடியிருப்புகளை தாக்கியதாகவும், அந்த தாக்குதலின்போது சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கூறியதுபோலவே, ரஷ்ய அதிபர் புதின் தனது தரப்பு பதில் தாக்குதலை தொடங்கிய நிலையில், நேற்று இரவிலும் அது தொடர்ந்துள்ளது. அதிலும், ட்ரோனுக்கு பதிலடி ட்ரோன் மூலமே கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக