புதன், 18 ஜூன், 2025

இந்த Israel அக்கிரமத்தில் அமேரிக்கா பங்காளியாக வேண்டாம்

 ராதா மனோகர் : இந்த 2025 ஆம் ஆண்டில்உலக நாடுகள் எல்லாம் கூடி  இயற்கை சூழல் பாதுகாப்பு பற்றி பேசகைகூடும் 
எதிர்காலத்தில் ஏற்பட கூடிய பேரழிவு தொற்றுக்கள் பற்றியும் அதிலிருந்து மக்களை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி பேசக்கூடும்
மக்களிடையே பெரிய அளவில் இருக்கும்  பொருளாதார ஏற்ற தாழ்வுகளை எப்படி சரி செய்வது என்பது பற்றி பேசக்கூடும் 
உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்துவது என்பது பற்றி பேசக்கூடும் 
என்றெல்லாம் எண்ணி இருப்போம் 
ஆனால் இன்று நடப்பது அதற்கு நேர் எதிராகவே உள்ளது 
உலகில் உள்ள பெரிய சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு பதிலாக 
உக்கிரேனில் மோசமான போரை புட்டின் ஆரம்பித்தது வைத்தார் 
கடந்த மூன்று ஆண்டுகளில் இலட்சக்கணக்கான மக்களின் உயிரை அது பழிவாங்கி விட்டது 
காஸாவில் மிகவும் பயங்கரமான போரை பார்த்து கொண்டிருக்கிறோம்.
இஸ்ரேலின் சட்ட விரோத மனிதாபிமானமற்ற போரினால் ஆயிரக்கணக்கான பலஸ்தீன சிறுவர்கள் பட்டினி சாவை எதிர்கொள்கிறார்கள் 



இப்போது இஸ்ரேலின் தீவிரவாதி நெத்தனியாகுவினால்  உலக சட்ட நியதிகளுக்கு  புறம்பான 
மிக ஆபத்தான இரான் போர் ஆரம்பித்துள்ளது 
என்ன காரணம் கொண்டும் இந்த இஸ்ரேலின் போரில் அமேரிக்கா சிக்கி விட கூடாது 
கடந்த வியாழக்கிழமை எதிர்பாராத தன்னிச்சையான தாக்குதலை ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்டது  
ஈரான் நகரங்களின் மீது நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கான மக்களை கொன்றது.
இதற்கு ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீது குண்டுகளை வீசியது சிலர் கொல்லப்பட்டார்கள்.

ஈரான் சர்வாதிகார அரசு மீது என்னதான் ஊழல் மற்றும் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும்
இதன் மூலம்  இஸ்ரேல் உலக சட்டங்களை மீறி விட்டது.
எல்லா நாடுகளுக்கும் தங்கள் எல்லைகளை பாதுகாப்பதற்கு உரிமை உள்ளது.

மிக நன்றாக விளங்கி கொள்ள்ளுங்கள் நாதனியாகு உலக  ஒரு போர் குற்றவாளி!
பலஸ்தீன அப்பாவி மக்களை பட்டினி சாவுக்கு தள்ளியதால் மூலம் குற்றவியல் நீதிமன்றினால் குற்றவாளியாக அறியப்பட்டவர்.

இந்த நிமிடம் வரை இந்த பாரிய குற்றத்தை  புரிந்து கொண்டிருக்கிறார் நெதானியாகு.
உணவு பொதிகளை பெற்று கொண்டிருந்த காசா மக்கள் மீது பீரங்கியை தாக்குதலை மேற்கொண்டு இந்த வாரம் கூட  59 மக்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்.

ஈரானை அணு ஆயுத தயாரிப்பில் இருந்து விலக்கி வைப்பதற்கு உரிய தந்திரமாக  ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது 

கடந்த சில மாதங்களில் ஈரானின் ஆணு ஆயுத உற்பத்தி பற்றி ஈரானோடு அமேரிக்கா ஏற்கனவே ஐந்து தடவைகள் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருந்தது 
இறுதியாக ஆறாவது தடவை ஒரு தீர்மானத்தை எட்டி விடும் என்று நம்பப்பட்டது!
கடந்த ஞாயிற்று கிழமை இந்த ஆறாவது சுற்று பேச்சு வார்த்தை நடைபெற இருந்தது.
ஆம் கடந்த வியாழக்கிழமை நடை பெற இருந்த ஈரான் அமெரிக்க பேச்சு வார்த்தையை தகர்த்து எறிவதற்குதான் ஈரான் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியது.

அதிலும்  முக்கியமான ஒரு விடயம் இந்த ஈரான் அமெரிக்க பேச்சு வார்த்தை குழுவுக்கு தலைமை தாங்கிய இராணுவ அதிகாரியே  முதலில் கொல்லப்பட்டவராகும் 

இது மட்டுமல்ல ஈரான் எந்த காலத்திலும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடவில்லை என்று அமெரிக்க உளவு நிறுவன தலைவர்  துளசி கப்பார்ட்  அறிவித்திருந்தார்.

இந்த பின்னணியில் இஸ்ரேல் இந்த அமெரிக்க ஈரான் பேச்சு வார்த்தையை குழப்பி அடிக்கும் முகமாக ஈரான் மீது குண்டுகளை வீசி இருக்கிறது 
மத்திய கிழக்கில் போர்களை விரிவு படுத்தவே இஸ்ரேல் இந்த நாசத்தை  அரங்கேற்றி உள்ளது.
ஈரானின் அரசியல்  தலைவர்களை கொலை செய்து அந்த நாட்டின் அமைதியை தகர்ப்பதில் குறியாக இருக்கிறது இஸ்ரேல்.

இப்போது உள்ள கேள்வி என்னவென்றால் இஸ்ரேலின் பொறியில் அமேரிக்கா சிக்குமா இல்லையிலா என்பதுதான்.
அப்படி ஒருவேளை அமரிக்கா இதில் சிக்கி  விட்டால்,
விளைவுகள் கடுமையானதாக இருக்கும் 
அமெரிக்க அரசமைப்பு சட்டம் மிக தெளிவாக இருக்கிறது.
அமெரிக்க காங்கிரசின் அனுமதி இல்லாமல் எந்த நாட்டுக்கும் ராணுவ  ரீதியிலோ நிதி அடிப்படையிலோ அமெரிக்க ஆதரவளிக்க கூடாது.
இஸ்ரேலுக்கு இது வரை பில்லியன் கணக்காண அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை இறைத்துள்ளோம் 
கடந்த வருடத்தில் மாத்திரம் 22 பில்லியன் டாலர்களை இஸ்ரேலின் இராணுவ தேவைகளுக்குகாக  அமேரிக்கா தாரை வார்த்துள்ளது.
இலட்சக்கணக்கான அமெரிக்க குடுமக்கள் தெரு வீதிகளில் படுத்து உறங்குகிறார்கள்.
அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தினமும் இறக்கிறார்கள்.
 போதும் .. போதும்  போதும் 
நேதானியாகு இந்த உலகை மனிதர் வாழ முடியாத ஒரு ஆபத்தான இடமாக மாற்றும் வேலையை செய்கிறார்.
இந்த அக்கிராமத்தில் அமேரிக்கா பங்காளியாக வேண்டாம்  

இது ஒரு பூரணமாக மொழி மாற்ற கட்டுரை அல்ல . ஓரளவு என்னால் முடிந்த அளவில் முயற்சி செய்துள்ளேன் .
    
 

  


    

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக