சனி, 7 ஜூன், 2025

அடூர் கோபாலகிருஷ்ணன்: மணி ரத்தினத்தால் ஒரு தமிழ்ப்படத்தை எடுக்கவே முடியாது!

 Rebel Ravi    மணிரத்னம் எனும் ஊதிப் பெருக்கப்பட்ட சநாதன மாய பிம்பம் சுக்கு நூறாய் நொறுக்கப்பட்டது இந்த நூற்ற்றாண்டின் ஆகப்பெரிய நிகழ்வு. 
இதற்கு முன்னர் இன்னொரு மனுஸ்மிருதி வெறியன் ஷங்கர் செருப்படி பட்டு ஒழிந்ததும் காலத்தின் கட்டாயம். ஒரு சாதாரண வணிக சினிமாவின் சுமாரான இயக்குநரை ஏதோ கிறிஸ்டோபர் நோலன், இன்னாரிட்டு, அல்மொடவர், பொலான்ஸ்கி ரேஞ்சுக்கு உயர்த்திய பாமின் மீடியாவால், இன்றைய சோசல் மீடியா சுனாமியை எதிர் கொள்ள இயலவில்லை. 
தூக்கிப் போட்டு மிதிக்கிறார்கள் மணியை. 
அவர் எடுத்த எல்லாப் படங்களுமே வெகு சுமாரானவை தான். காவியப்புந்தையெல்லாம் இல்லை. 
என்ன அழகாக இருக்கும்!
அவ்வளவே: அவை மேக்கப் போடப்பட்ட சவங்கள். 


உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் என்னிடம் ஒருமுறை சொன்னார்: 
மணி ரத்தினத்தால் ஒரு தமிழ்ப்படத்தை எடுக்கவே முடியாது என்று. 
அவரது படங்களின் கிராமங்கள் கூட மோடி வெளிநாட்டினருக்குக் காட்டும் இந்தியா போன்றவையே. நிஜத்திலிருந்து வெகு தூரம் இருக்கும். 
அவரால் ஒரு நிஜமான கதாபாத்திரத்தைக் கூட உருவாக்க இயலாது.
 எல்லாமே வெறும் ப்ளாஸ்டிக், ரத்தம் சதை அற்றவை. 
மணி தன்னைத்தானே எக்ஸ்போஸ் செய்து கொண்டதில் ஏக மகிழ்ச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக